மெட்பார்மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெட்பார்மின்
Metformin
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
N,N-Dimethylimidodicarbonimidic diamide
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Fortamet, Glucophage, Glumetza, others
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a696005
கட்டுப்பாட்டு உரிமத் தரவு EMA:[[[:வார்ப்புரு:EMA-EPAR]] Link]US Daily Med:link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C(AU)
சட்டத் தகுதிநிலை Prescription Only (S4) (AU) ?-only (CA) POM (UK) ?-only (அமெரிக்கா)
வழிகள் By mouth
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 50–60%[1][2]
புரத இணைப்பு Minimal[1]
வளர்சிதைமாற்றம் Not by liver[1]
அரைவாழ்வுக்காலம் 4–8.7 hours[1]
கழிவகற்றல் Urine (90%)[1]
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 657-24-9 Yes check.svgY
ATC குறியீடு A10BA02 A10BD23 A10BD02 A10BD18 A10BD11 A10BD25 A10BD22 A10BD14 A10BD16 A10BD17 A10BD05 A10BD15 A10BD07 A10BD10 A10BD13 A10BD20 A10BD08 A10BD03
பப்கெம் CID 4091
IUPHAR ligand 4779
DrugBank DB00331
ChemSpider 3949 Yes check.svgY
UNII 9100L32L2N Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D04966 Yes check.svgY
ChEBI [1] Yes check.svgY
ChEMBL CHEMBL1431 Yes check.svgY
ஒத்தசொல்s N,N-dimethylbiguanide[3]
வேதியியல் தரவு
வாய்பாடு C4

H11 Br{{{Br}}} N5  

இயற்பியல் தரவு
அடர்த்தி 1.3±0.1[4] g/cm?
இலண்டனில் விற்பனைக்குள்ள 500 மி.கி மெட்பார்மின்

மெட்பார்மின் (Metformin)  என்றும், வணிக ரீதியில் குளுகோபேகே (Glucophage) என்றும் விற்கப்படும் மருந்தானது,  வகை 2 நீரிழிவுக்கான மருந்தாகவும், [5] குறிப்பாக  அதிக எடை கொண்ட நீரிழிவு நோயாளிகளின் சிகிழ்ச்சையில் பயன்படும் மருந்தாகவும் விளங்குகிறது.[6]  பல்பையுரு கருப்பை நோய்க்குறியின் சிகிச்சையிலும் மெட்பார்மினைப் பயன்படுத்துவது உண்டு. நீரிழிவின் காரணமான இதய நோய் மற்றும் புற்றுநோய் என்பவற்றை மெட்பார்மின் தடுப்பதாக ஓரிரு ஆய்வுகள் சொல்கின்றன.[7][8] எடை அதிகரிப்புடன் தொடர்பற்ற  மெட்பார்மினானது, வாய் வழியாக எடுக்கப்படுகின்ற ஒரு மருந்தாகும்.

மெட்பார்மினைப் பயன்படுத்துவதால்,  வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வயிற்று வலி முதலான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.  குறைந்த இரத்த சர்க்கரையை அது ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்ச வாய்ப்புள்ளது. அதிகளவில் ஊட்டப்பட்டாலோ, முறையின்றி பரிந்துரைக்கப்பட்டாலோ, மெட்பார்மின் உயர் இரத்த லாக்டிக் அமிலம் நிலையை உண்டாக்கலாம்..[9] கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் மெட்பார்மினைப் பயன்படுத்தக் கூடாது கர்ப்ப காலத்தில் இதைப் பயன்படுத்துவதால் சிக்கல் எதுவும் இருப்பதாக, இதுவரை அறியப்படாத போதும், கர்ப்பகால நீரிழ்வில்  இன்சுலினே பொதுவாக விரும்பப்படுகிறது.[10]  ஈரல் மூலமான குளுக்கோசு உற்பத்தியைக் குறைப்பதன் மூலமும்,  உடல் இழையங்களின் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலமும் மெட்போர்மின் தொழிற்படுகிறது.

மருத்துவ பயன்கள்[தொகு]

1922இல் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட மெட்பார்மின், இழான் தெர்னே (Jean Sterne) எனும் பிரான்சிய மருத்துவர் 1950களில் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக, .  பிரான்சில் 1957-இலும், அமெரிக்காவில் 1995-இலும் மருத்துவப் பயன்பாட்டுக்கு வந்தது.[11] சுகாதாரக் கட்டமைப்புக்கு அவசியமான், திறன் கொண்ட பாதுகாப்பான மருந்துகளில் ஒன்றாக,  உலகத் தூய்நல அமைப்பின் அடித்தேவையான மருந்துகள்  பட்டியலில்  மெட்பார்மின் இடம்பிடித்திருக்கிறது.[12] வாய்வழி நீரிழிவு மருந்துகளில் மெட்பர்மினே பரவலாக பயன்படுத்தப்படும் மருந்து என்பது நம்பிக்கை. 

மெட்பார்மின்  வகை 2 நீரிழிவுக்கான முதன்மையான மருந்து எனினும், அதற்கும்  பல்பையுரு கருப்பை நோய்க்குறிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக அந்நோய்க்கும் மருந்தாகப் பரவலாகப் பயன்படுகிறது.[13] சிறுநீரக நோய், இதய செயலிழப்பு, அல்லது கல்லீரல் பிரச்சினைகள் கொண்ட சிலரிலும் கூட மெட்பார்மின் சிறப்பாக குணரப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.[14]

இரண்டாம் வகை நீரிழிவு[தொகு]

இங்கிலாந்தில்  1980-90 இடையே இடம்பெற்ற ஆய்வொன்றில், மெட்பார்மின்,  இதயக்கலன் நோய்களைக் கொண்ட எடைகூடிய வகை 2 நீரிழிவு நோயாளிகளில்,  ஆபத்தான நிலையைக் குறைக்க உதவுகிறது என்பதற்கான  ஆதாரங்கள் கிடைத்தன. [15] எனினும், சமீபத்திய சோதனைகள்  மெட்பார்மினால் இதய நோய்களைக் குணமாக்க முடியும் என்ற ஆய்வுமுடிவை ஓரளவு மறுத்திருக்கின்றன.[16][17]

சல்போனைல்யூரியாக்கள் மற்றும் மருந்துப்போலிகளோடு[18] ஒப்பிடும் போது, மெட்பார்மின் வகை 2 நீரிழிவு நோயாளிகளின் உடல் எடையில் ஏற்படுத்தும் தாக்கம் மிகக்குறைவாகும். நீரிழிவு அற்ற சந்தர்ப்பங்களில் உடற்பருமனை மெட்பார்மின் குறைக்கின்றது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.[19][20] சல்போனைல்யூரியாக்களை விட, மெட்பார்மினால் ஏற்படும்   இரத்தச் சர்க்கரைக் குறைவு ஆபத்து மிகக்குறைவு., மெட்பார்மின் குறையடர்த்திக் கொழுமியம் (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவை ஓரளவு குறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

முந்து - நீரிழிவு[தொகு]

நிலை 2 நீரிழிவு ஆபத்துக்கு முகம் கொடுக்கும் முந்து நீரிழிவு (prediabetes) நோயாளிகள், மெட்பார்மினை உள்ளெடுக்கும் போது, நீரிழிவுக்கு உள்ளாகும் ஆபத்திலிருந்து வெளியேற முடியும். ஓரளவு உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் கூட இதில் அவசியமாகும்  அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றில், வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்ட முந்துநீரிழிவு நோயாளிகளின் நீரிழிவு ஆபத்து 58 விழுக்காட்டால் குறைய, மெட்பார்மின் பாவனையாளரிடம் அது 31 விழுக்காடாகக் குறைந்திருந்தது.பல்பையுரு கருப்பை நோய்க்குறிக்கும் இது மிகச்சிறந்த மருந்தாகும்.

பெண் கருவுறாமை[தொகு]

பெண் மலட்டுமைச் சந்தர்ப்பங்களில் வழக்கமாகப் பயன்படும் குளோமைபீன் (clomifene ) மருந்துக்குச் சமனாக மெட்பார்மினையும் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.[21] ஆனால் குளோமைபீன் சிகிச்சை தோல்வியடைந்தால் மட்டுமே மெட்பார்மினை இரண்டாம் நிலைச் சிகிச்சையாகப் பயன்படுத்த வேண்டும்.[22] மற்றொரு ஆய் மெட்பார்மின்  கரு உருவாக்க வீதத்தையும் கருத்தரிப்பு வீதத்தையும் அதிகரிப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.[23]

பாதகமான விளைவுகள்[தொகு]

மெட்பார்மின்  இலக்டோ அமிலக்குறைபாடு, சிறுநீரக கோளாறுகள் (ட கிரியேட்டினின் அளவு 150 μmol/l (1.7 mg/dl)இற்கு மேல் கூடும் தருணங்கள்[24]), நுரையீரல் நோய் மற்றும் கல்லீரல் நோய் என்பன உள்ள நோயாளிகள் மெட்பார்மின் பயன்படுத்தக் கூடாது. .[25] அயடினேற்றப்பட்ட கதிர்வரைவியல் ஆய்வுகளின் போது(உதாரணமாக CT ஸ்கேன் அல்லது குருதிக் குழாய் வரைவி (angiogram) சந்தர்ப்பங்களில்)மெட்பார்மின் பாவனையை தற்காலிகமாகத் தவிர்க்குமாறு சொல்லப்படுகிறது. மீண்டும் பிறகு இரண்டு நாட்களின் பின் சிறுநீரக செயற்பாடு சாதாரணம் என்றால், தொடர்ந்து மெட்பார்மினைப் பயன்படுத்தலாம்.

இரைப்பை எரிச்சல், வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு, குமட்டல், வாந்தி, மற்றும் அதிகரித்த வாய்வ என்பன முக்கியமான பக்கவிளைவுகள். ஏனைய நீரிழ்வு எதிர்ப்பு மருந்துகளை விட, மெட்பார்மின் உணவுக்கால்வா தொடர்பான பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றது. [26]

இம்மாத்திரை அளவுக்கதிகமாக உட்கொள்ளப்பட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மிகை இதயத் துடிப்பு, அயர்வு, மற்றும், அரிதாக, இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது இரத்த சர்க்கரை மிகைப்பு என்பன ஏற்படலாம்.  மீமெட்பார்மின் மிகையுட்கொள்ளலுக்கு மாற்று மருந்து எதுவும் பரிந்துரைக்கப்படுவதில்லை .[27] 

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Metformin. A review of its pharmacological properties and therapeutic use in non-insulin-dependent diabetes mellitus". Drugs 49 (5): 721–49. May 1995. doi:10.2165/00003495-199549050-00007. பப்மெட்:7601013. 
 2. "Metformin: new understandings, new uses". Drugs 63 (18): 1879–94. 2003. doi:10.2165/00003495-200363180-00001. பப்மெட்:12930161. 
 3. "Disposition of metformin (N,N-dimethylbiguanide) in man". Clinical Pharmacology and Therapeutics 24 (6): 683–93. December 1978. doi:10.1002/cpt1978246683. பப்மெட்:710026. 
 4. "Metformin". www.chemsrc.com.
 5. Maruthur, NM; Tseng, E; Hutfless, S; Wilson, LM; Suarez-Cuervo, C; Berger, Z; Chu, Y; Iyoha, E et al. (19 April 2016). "Diabetes Medications as Monotherapy or Metformin-Based Combination Therapy for Type 2 Diabetes: A Systematic Review and Meta-analysis". Annals of Internal Medicine 164 (11): 740–51. doi:10.7326/M15-2650. பப்மெட்:27088241. 
 6. Clinical Obesity (2nd ). Oxford: John Wiley & Sons. 2008. பக். 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-98708-7. Archived from the original on 2017-09-08. https://web.archive.org/web/20170908185309/https://books.google.com/books?id=qGVnItPoPCYC&pg=PA262. 
 7. Malek, M; Aghili, R; Emami, Z; Khamseh, ME (2013). "Risk of Cancer in Diabetes: The Effect of Metformin" (PDF). ISRN Endocrinology 2013: 636927. doi:10.1155/2013/636927. பப்மெட்:24224094. பப்மெட் சென்ட்ரல்:3800579. Archived from the original on 2017-09-08. https://web.archive.org/web/20170908185309/https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3800579/pdf/ISRN.ENDOCRINOLOGY2013-636927.pdf. 
 8. "Type 2 diabetes and metformin. First choice for monotherapy: weak evidence of efficacy but well-known and acceptable adverse effects". Prescrire International 23 (154): 269–72. November 2014. பப்மெட்:25954799. 
 9. Lipska KJ; Bailey CJ; Inzucchi SE (June 2011). "Use of metformin in the setting of mild-to-moderate renal insufficiency". Diabetes Care 34 (6): 1431–37. doi:10.2337/dc10-2361. பப்மெட்:21617112. 
 10. Lautatzis, ME; Goulis, DG; Vrontakis, M (November 2013). "Efficacy and safety of metformin during pregnancy in women with gestational diabetes mellitus or polycystic ovary syndrome: a systematic review". Metabolism: clinical and experimental 62 (11): 1522–34. doi:10.1016/j.metabol.2013.06.006. பப்மெட்:23886298. 
 11. McKee, Mitchell Bebel Stargrove, Jonathan Treasure, Dwight L. (2008). Herb, nutrient, and drug interactions : clinical implications and therapeutic strategies. St. Louis, Mo.: Mosby/Elsevier. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-323-02964-3. Archived from the original on 2017-09-08. https://web.archive.org/web/20170908185309/https://books.google.com/books?id=49kLK--eumEC&pg=PA217. 
 12. "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. 13 December 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 13. Lord JM; Flight IHK; Norman RJ (2003). "Metformin in polycystic ovary syndrome: systematic review and meta-analysis". BMJ 327 (7421): 951–53. doi:10.1136/bmj.327.7421.951. பப்மெட்:14576245. பப்மெட் சென்ட்ரல்:259161. Archived from the original on 2007-02-08. https://web.archive.org/web/20070208092723/http://www.bmj.com/cgi/content/full/327/7421/951. 
 14. Crowley, Matthew J.; Diamantidis, Clarissa J.; McDuffie, Jennifer R.; Cameron, C. Blake; Stanifer, John W.; Mock, Clare K.; Wang, Xianwei; Tang, Shuang et al. (3 January 2017). "Clinical Outcomes of Metformin Use in Populations With Chronic Kidney Disease, Congestive Heart Failure, or Chronic Liver Disease: A Systematic Review". Annals of Internal Medicine 166 (3): 191. doi:10.7326/M16-1901. 
 15. "Effect of intensive blood-glucose control with metformin on complications in overweight patients with type 2 diabetes (UKPDS 34). UK Prospective Diabetes Study (UKPDS) Group". Lancet 352 (9131): 854–65. 1998. doi:10.1016/S0140-6736(98)07037-8. பப்மெட்:9742977. 
 16. Selvin E; Bolen S; Yeh H; Wiley C; Wilson LM; Marinopoulos SS; Feldman L; Vassy J et al. (October 2008). "Cardiovascular outcomes in trials of oral diabetes medications: a systematic review". Arch Intern Med 168 (19): 2070–80. doi:10.1001/archinte.168.19.2070. பப்மெட்:18955635. பப்மெட் சென்ட்ரல்:2765722. Archived from the original on 2009-12-12. https://web.archive.org/web/20091212050113/http://archinte.ama-assn.org/cgi/content/full/168/19/2070. 
 17. Groop, Leif; Boussageon, Rémy; Supper, Irène; Bejan-Angoulvant, Theodora; Kellou, Nadir; Cucherat, Michel; Boissel, Jean-Pierre; Kassai, Behrouz et al. (2012). "Reappraisal of Metformin Efficacy in the Treatment of Type 2 Diabetes: A Meta-Analysis of Randomised Controlled Trials". PLoS Medicine 9 (4): e1001204. doi:10.1371/journal.pmed.1001204. பன்னாட்டுத் தர தொடர் எண்:1549-1676. பப்மெட்:22509138. 
 18. Johansen, K. (1999). "Efficacy of metformin in the treatment of NIDDM. Meta-analysis". Diabetes Care 22 (1): 33–37. doi:10.2337/diacare.22.1.33. பன்னாட்டுத் தர தொடர் எண்:0149-5992. 
 19. Golay, A (2007). "Metformin and body weight". International Journal of Obesity 32 (1): 61–72. doi:10.1038/sj.ijo.0803695. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-0565. பப்மெட்:17653063. 
 20. Mead, E; Atkinson, G; Richter, B; Metzendorf, MI; Baur, L; Finer, N; Corpeleijn, E; O'Malley, C et al. (29 November 2016). "Drug interventions for the treatment of obesity in children and adolescents". The Cochrane Database of Systematic Reviews 11: CD012436. doi:10.1002/14651858.CD012436. பப்மெட்:27899001. 
 21. Palomba S; Pasquali R; Orio F; Nestler JE (February 2009). "Clomiphene citrate, metformin or both as first-step approach in treating anovulatory infertility in patients with polycystic ovary syndrome (PCOS): a systematic review of head-to-head randomized controlled studies and meta-analysis". Clin. Endocrinol. 70 (2): 311–21. doi:10.1111/j.1365-2265.2008.03369.x. பப்மெட்:18691273. 
 22. Al-Inany H; Johnson N (June 2006). "Drugs for anovulatory infertility in polycystic ovary syndrome". BMJ 332 (7556): 1461–62. doi:10.1136/bmj.332.7556.1461. பப்மெட்:16793784. 
 23. Morley, LC; Tang, T; Yasmin, E; Norman, RJ; Balen, AH (29 November 2017). "Insulin-sensitising drugs (metformin, rosiglitazone, pioglitazone, D-chiro-inositol) for women with polycystic ovary syndrome, oligo amenorrhoea and subfertility". The Cochrane Database of Systematic Reviews 11: CD003053. doi:10.1002/14651858.CD003053.pub6. பப்மெட்:29183107. 
 24. Jones G; Macklin J; Alexander W (2003). "Contraindications to the use of metformin". BMJ 326 (7379): 4–5. doi:10.1136/bmj.326.7379.4. பப்மெட்:12511434. பப்மெட் சென்ட்ரல்:1124930. Archived from the original on 2007-10-12. https://web.archive.org/web/20071012151255/http://www.bmj.com/cgi/content/full/326/7379/4. 
 25. Eurich, Dean T; McAlister, Finlay A; Blackburn, David F et al. (2007). "Benefits and harms of antidiabetic agents in patients with diabetes and heart failure: systematic review". BMJ 335 (7618): 497. doi:10.1136/bmj.39314.620174.80. பப்மெட்:17761999. பப்மெட் சென்ட்ரல்:1971204. Archived from the original on 2007-10-20. https://web.archive.org/web/20071020033106/http://www.bmj.com/cgi/content/full/335/7618/497. 
 26. Bolen S; Feldman L; Vassy J et al. (2007). "Systematic review: comparative effectiveness and safety of oral medications for type 2 diabetes mellitus". Ann Intern Med 147 (6): 386–99. doi:10.7326/0003-4819-147-6-200709180-00178. பப்மெட்:17638715. Archived from the original on 2010-03-27. https://web.archive.org/web/20100327131448/http://www.annals.org/content/147/6/386.long. 
 27. Calello, DP; Liu, KD; Wiegand, TJ; Roberts, DM; Lavergne, V; Gosselin, S; Hoffman, RS; Nolin, TD et al. (9 April 2015). "Extracorporeal Treatment for Metformin Poisoning: Systematic Review and Recommendations From the Extracorporeal Treatments in Poisoning Workgroup". Critical Care Medicine 43 (8): 1716–30. doi:10.1097/CCM.0000000000001002. பப்மெட்:25860205. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Metformin
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்பார்மின்&oldid=3220581" இருந்து மீள்விக்கப்பட்டது