உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தச் சர்க்கரைக் குறைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்தச் சர்க்கரைக் குறைவு
Hypoglycemia
ஒத்தசொற்கள்இரத்தச் சர்க்கரைக் குறைவு , இரத்த இனிமத் தாழ்வு, தாழ் இரத்தச் சர்க்கரை
இனிம அளவி
சிறப்புஅகச்சுரப்பியல்
அறிகுறிகள்தலைவலி, மங்கிய பார்வை, நடுக்கம், மயக்கம், வலிவின்மை, சோர்வு, வியர்த்தல், அழுந்துணர்வு, இதயத் துடிப்பு வீதம் கூடல், நடுக்கந்தரும் இதயத்துடிப்பு, நரம்பயர்வு, பதற்றம், பசி, குமட்டல், குத்தல் உணர்வு, பேசவியலாமை, குழப்பம், உணர்விழப்பு, இயல்பற்ற நடத்தை, தலைக்குடைச்சல், வெளிர்தோல் நிறம், வலிப்பு, இறப்பு[1][2][3][4][5]
வழமையான தொடக்கம்வேகமானது[1]
காரணங்கள்= நீரிழிவுத் தடுப்பு மருந்துகள், கணையநீர்(இன்சுலின்), கிளைனைடுகள், சல்போனில்யூரியாக்கள், சீழ்த்தொற்று, சிறுநீரகச் செயலிழப்பு, சில புற்று வகைகள், ஈரல் நோய்[1][6]
நோயறிதல்விப்பிள் மும்மை, இரத்தச் சர்க்கரைக் குறைவு அறிகுறிகள், இரத்த ஊனீர் மட்டம் தாழ்தலும்<70 mg/dL (3.9 mmol/L) இரத்த இனிமம் இயல்பானதும் அறிகுறிகள் மறைதல் [2]
சிகிச்சைசர்க்கரை மிகுந்த உணவு உட்கொள்ளல், டெக்சுட்டுரோசு, குளூக்ககான் மருந்துகள் உட்கொள்ளல்[1]
நிகழும் வீதம்முதல் வகைமை நீரிழிவில் வாரம் இருமுறை தளர்வான இரத்தச் சர்க்கரைக் குறைவும் ஆண்டுக்கு ஒருமுறை கடும் இரத்தச் சர்க்கரைக் குறைவும் ஏற்படும்.[3]
இறப்புகள்முதல் வகைமை நீரிழிவில் இரத்தச் சர்க்கரைக் குறைவால் 6-10% பேர் இறக்கின்றனர்.[3]

இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது இரத்த இனிமக் குறை (Hypoglycemia) இயல்பான நிலையில் இருந்து இரத்தச் சர்க்கரை அளவு, குறிப்பாக 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/லி) அளவுக்கும் கீழாகக் குறையும் நிகழ்வாகும்.[1][3] இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுகளைச் சரியாக இனங்கான விப்பிள் மும்மை பயன்படுத்தப்படுகிறது.[2] இந்நிகழ்வு, குருதி இனிமம் 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/லி) அளவுக்கும் கீழாகக் குறைதலும் இரத்தச் சர்க்கரை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, இரத்தச் சர்க்கரைக் குறைவில் ஏற்படும் அறிகுறிகள் மறைதலும் என வரையறுக்கப்படுகிறது.[2] இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது தலைவலி, சோர்வு, பதற்றம், படபடப்பு, பேசவியலாமை, குழப்பம், இதயத் துடிப்பு வீதம் கூடல், வியர்த்தல், நடுக்கம், நரம்பயர்வு, பசி, உணர்விழப்பு, வலிப்புகள், அல்லது இறப்புங்கூட நேரலாம்h.[1][3][2] அறிகுறிகள் உடனடியாகத் தோன்றுகின்றன.[1]

இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான முதன்மையான காரணமாக, நீரிழிவு நோயைத் தணிக்க தரப்படும் மருந்துகளே அமைகின்றன. இவற்றில் இன்சுலின் (ஊசி போடல்), சல்போனில்யூரியாக்கள், பைகோனடுகள் போன்றவை உள்ளடங்கும்.[3][2][6] நோய் இடர், நீரிழிவு நோயாளிகளின் குறைவான உணவு, அண்மை உடற்பயிற்சி, குடிப்பழக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது.[1][3][2] இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான பிற காரணங்களாக கடுமையான நோய்நிலை, சீழ்த்தொற்று, சிறுநீரகச் செயலிழப்பு], கணைய நோய், இயக்குநீர்(இசைமக்) குறைபாடுகள், இன்சுலினோமா புற்றுகள், பி-உயிர்க்கலன் சாராத புற்று நோய்கள் , பிறவி வளர்சிதை மாற்றக் கோளாறுகள், பலநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளல், குடிப்பழக்கம் ஆகியன அமையலாம்.[1][3][2] சில மணி நேரத்துக்கு உணவு உட்கொள்ளாத, பிறந்தநிலையில் நோயேதும் இல்லாத குழந்தைகளிலும் இரத்த இனிமக் குறைவு ஏற்படலாம்.[7]

இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிக்க, சர்க்கரை மிகுந்த உணவையோ பருகுகளை, அதாவது, வெல்லம், இனிம மாத்திரைகள் அல்லது ஆப்பிள் சாறு, இனிப்புக் குழைவு போன்றவற்றை உட்கொள்ளலாம்.[1][3][2] இதற்கு நோயாளி உணவு விழுங்கி உட்கொள்ளும் அளவுக்கு நனவோடு இருத்தல் கட்டாயமாகும்.[1][3] மேலும், குறைந்தது, 70 மிகி/டெ.லி (3.9 மிமோல்/லி) எனும் சிறும இரத்த இனிம மட்டத்தை அடையும் வரை இரத்தச் சர்க்கரை மட்டத்தை உயர்த்த, 10 முதல் 20 கிராம் அளவுக்கு கார்போகைதிரேட்டு உட்கொள்ளலே இரத்தச் சர்க்கரைக் குறைத் தணிப்புக்கான இலக்காகக் கொள்ளப்படுகிறது.[3][2]ஓருவர் வாய்வழி உணவு கொள்ள முடியாத நிலையில் உள்ளபோது, குளூக்கானை ஊசிவழியாகச் செலுத்தலாம். மூக்குவழியாகவும் உணவைத் தரலாம்.[1][3][8] நீரிழிவு சாராத இரத்தச் சர்க்கரைக் குறைவை அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த நடவடிக்கை எடுத்து இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிக்கலாம்.[3][2]

நீரிழிவு நோயாளிகள் இந்நிலைமையை எதிர்கொள்ள அல்லது தவிர்க்க, இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான நோய் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும்.[3][2] இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தவிர்க்க, இன்சுலின், சல்போனில்யூரியா, பைகோனைடு மருந்துகளை உட்கொள்ளும் அளவை மாற்றலாம்; அல்லது முற்றிலும் தவிர்த்துவிடலாம்.[3][2] மேலும், இதற்கு அடிக்கடியான தொடர் இரத்த இனிம ஓர்வுகள் செய்யவும் பரிந்துரை வழங்கப்படுகிறது.[1][3] சிலருக்கு இன்சுலின் ஏற்றிவழியாக தொடர்ந்து சர்க்கரையளவைக் கண்காணித்து, நீரிழிவு நோயாளிகளுக்கான இரத்தச் சர்க்கரைக் குறைவை மேற்பார்வையிட வேண்டியுள்ளது.[3]

சொற்பிறப்பியல்[தொகு]

Hypoglycemia எனும் இச்சொல் கிரேக்கச் சொல்லாகும். கிரேக்க மொழியில் ὑπογλυκαιμία; ὑπο- hypo- என்றால் ' தாழ் அல்லது கீழ்' + γλυκύς glykys என்றால் 'இனிப்பு' + αἷμᾰ haima என்றால் ' இரத்தம் அல்லது குருதி' என்று பொருள். எனவே,ὑπογλυκαιμία வென்றால் இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது குருதி இனிமக் குறை எனப் பொருள்படும்.

வரலாறு[தொகு]

Hypoglycemia எனும் இச்சொல், ஜேம்சு காலிப்பு 1922 இல் பிரெடெரிக் பாந்திங்கோடு இணைந்து கணையநீரைத் (இன்சுலினைத்) தூய்மை செய்ய பணிபுரிந்தபோது முதன்முதலாக உருவாக்கப்பட்ட சொற்புனைவாகும்.[9] காலிப்பு கணையநீரின் செயல்பாட்டை அளக்க உதவும் முறையை வடிவமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.[9] இவர் முதலி முயல்களுக்குக் கணையநீரைச் செலுத்தி அவற்றின் இரத்தச் சர்க்கரை குறையும் மட்டங்களை அளந்தார்.[9] இரத்த இனிம அளவீடு ஒரு நேரமெடுக்கும் நிகழ்வாகும்.[9] இவர் முயல்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கணையநீரைச் செலுத்தும்போது அவை தடுமாற்றத்துக்கும் புலன்மரத்தலுக்கும் உள்ளாகிப் பின்னர், இறப்புக்கும் ஆட்படுதலைக் கண்ணுற்றார்.[9] இந்த கவனிப்பு இவரது ஆய்வை எளிமையாக்கியது.[9] இவர் ஒரு முயலில் தடுமாற்றம் தர, செலுத்த வேண்டிய கணையநீரின் ப்ரும அளவே கணையநீரின் ஒற்றை அலகு என வரையறுத்தார்.[9] பின்னர் இவர் தடுமாற்றத்துக்கு ஆளான முயல்களுக்கு இனிமத்தைச் செலுத்தி அவற்றைக் காப்பாற்றி ஆய்வுச் செலவைக் குறைக்கலாம் எனவும் கண்டறிந்தார்.[9]

வரையறை[தொகு]

இரத்தச் சர்க்கரை அளவுகள் நாள் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும்; என்றாலும் இரத்தச் சர்க்கரைக் குறைவு இரத்தச் சர்க்கரை அளவு, 70 மிகி/டெலி (3.9 மிமோல்/லி) அளவுக்கும் கீழே தாழும்போதே ஏற்படும்.[3][5]  மிகி/டெலி பொதுவாக, இரத்தச் சர்க்கரை அளவு 70 மிகி/டெ.லி (3.9 மிமோல்/லி) முதல் 110 nbsp;மிகி/டெ.லி(6.13 மிமோல்/லி) வரை இருக்குமாறு பேணப்படும்.[3][2] இயல்பான இரத்த இனிமத் தாழ்வரம்பு 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/ லி) அளவாக இருந்தபோதும், அத்ஹன் அறிகுறிகள் வழக்கமாக 55 மிகி/டெ. லி (3.0 மிமோல்/ லிL) அளவு அல்லது அதற்கும் கீழாக குறையும்போதே தோன்றுகின்றன, [3] [2] இது போன்ற அறிகுறிகள் பல தடவை நிகழ்ந்த நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு அறிகுறிகள் ஏற்படும் தாழ் இரத்த இனிம வரம்பு இன்னமும் குறைவாகவும் அமையலாம்.[2]

விப்பிள் மும்மை[தொகு]

இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுக்கு அதன் அறிகுறிகள் மட்டுமே போதா.[2] ஒரு 70 மிகி/டெ. லி அளவுக்கும் தாழ்வாக உளள இரத்த இனிம அளவுங் கூட இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுக்குப் போதாது.[2] இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுக்கு விப்பிள் மும்மை எனும் கீழ்வரும் மூன்று நிலைமைகள் கட்டாயமாக நிலவுதல் வேண்டும்[2]:

 1. இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான நோய்க்குறிகளும் அறிகுறிகளும் நிலவுதல் (காண்க, கீழே உள்ள நோய்க்குறிகளும் அறிகுறிகளும் பிரிவு)[2]
 2. தாழ் இரத்த இனிம அளவீடு 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/லி) அளவுக்கும் தாழ்வாக நிலவுதல்[2]
 3. தாழ் இரத்த இனிம அளவு இயல்பு நிலை அடைந்ததும் நோய்க்குறிகளும் அறிகுறிகளும் மறைதல்[2]

அகவை[தொகு]

அகவை முதிர்ந்தவருக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பேரளவு இரத்தச் சர்க்கரை அளவு வேறுபாடு பிறந்து 48 மணி நேரமே ஆகாத புதிதாகப் பிறந்த குழவிகளில் அமைகிறது.[7] குழந்தை அகச்சுரப்புக் கழகத்தின் கூற்றுப்படி, பிறந்து 48 மணி நேரம் ஆனதும் அகவை முதிர்ந்தவருக்கும் குழந்தைகளுக்குமான இரத்தச் சர்க்கரை அளவிலோ இனிமம் ஊட்டும் அளவிலோ வேறுபாடு ஏதும் இருப்பதில்லை.[7] பிறந்த பிறகு, புதிதாகப் பிறந்த குழந்தை தனது சர்க்கரை அளவையும் அண்ணீரக நீர் அளவையும் தானே சரிசெய்துக் கொள்கிறது. இதனால் ஓரளவு தற்காலிக இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம்.[7] எனவே, 48 மணி நேரமே ஆகாத புதிதாகப் பிறந்த குழவிகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவை வரையறுக்கவும் தணிக்கவுமான வழிகாட்டுதல்களை உருவாக்குதல் மிக அரிதாக உள்ளது.[7] தரவுகளை மீள்பார்வையிட்ட, குழந்தை அகச்சுரப்புக் கழக கூற்றின்படி, 48 மணி நேர அளவுக்கும் குறைந்த குழவிகள் 55–65 மிகி/டெ. லி (3.0-3.6 மிமோல்/லி) அளவுள்ள இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வின்போது நிலவும் ஊனீர் சர்க்கரை அளவுகளுக்குத் துலங்கித் தானே சரிசெய்துக் கொள்கிறது .[7] இது அகவை முதிர்ந்தவருக்கும் குழந்தைகளுக்கும் மேலும் வளர்ந்த இளைஞ்ர்களுக்கும் வேறுபட்டு, ஓரளவுக்கு 80–85 மிகி/டெ. லி (4.4-4.7 மிமோல்/லி) அளவு நெடுக்கத்தில் அமைகிறது.[7]

பிறந்து 48 மணி நேரத்துக்குப் பிறகு வாழும் குழவிகளின் ஊனீர் சர்க்கரை அளவு, சராசரியாக 70 இலிருந்து 100 மிகி/டெ. லி வரை (3.9 இலிருந்து 5.5 மிமோல்/லி) வரை அகவை முதிர்ந்தவருக்கு இருப்பது போலவே அமையும்,.[7] தது அறிகுறிகலைக் கூறவியன்ற சிறுவர்களிலும் இரத்த இனிமக் குறையை விப்பிள் மும்மைவழித் தீர்மானிக்கலாம்.[7]

மாற்று நெருக்கடிகளில் நோயறிதல்[தொகு]

இரத்த இனிமக் குறையை ஒத்த பிற மருத்துவ நெருக்கடிநிலைகளாக பின்வருவன அமைகின்றன:

 • குடிப்பழக்கம் அல்லது மருந்துவழி நச்சேறல்[2][10]
 • இதயத் துடிப்பு இசைவின்மை[2][10]
 • இதயத் தடுப்பிதழ் நோய்[2][10]
 • உணவுக்குப் பிந்தைய நோய்த்தொகை[10]
 • தைராயிடு மிகை அல்லது கேடயச் சுரப்பு மிகை[10]
 • பழுப்பு மஞ்சட் கருமுகைப் புற்று[10]
 • இரைப்பை மாற்றுவழி அறுவைக்குப் பிந்திய குருதி இனிமக்குறை[2][10]
 • பொதுவான நரம்பயர்வு அல்லது மிகையார்வக் கோளாறு[10]
 • தேவையற்றநிலையில் கணையநீர்ப்(இன்சுலின்) பயன்பாடு[2][10]
 • ஆய்வக அல்லது குருதியெடுப்புப் பிழை (குருதியெடுப்புக் குழாயில் அல்லது குருதியெடுக்கும் நிகழ்வின்போது இனிமத் தடுப்பு மருந்தின்மை )[10]

நோய்க்குறிகளும் அறிகுறிகளும்[தொகு]

இரத்தச் சர்க்கரைக் குறைவு அறிகுறிகள் முதன்மையாக இருவகைப்படும்.[3] முதல்வகை அறிகுறிகள் மூளையில் இரத்த இனிமத் தாழ்வால் ஏற்படுகின்றன. இவை நரம்பினிமக் குறை அறிகுறிகள் எனப்படுகின்றன.[3] இரண்டாம் வகை அறிகுறிகள் மூளை இரத்த இனிமத் தாழ்வுக்கு உடலின் எதிர்வினையால் ஏற்படுகின்றன. இவை அண்னீரக வினை அறிகுறிகள் எனப்படுகின்றன'.[3]

நரம்பினிமக் குறை அறிகுறிகள் அண்னீரக வினை அறிகுறிகள்
 • தலைவலி
 • மங்கிய பார்வை
 • சோர்வு அல்லது அயர்வு
 • இயல்பற்ற நடத்தை
 • குழப்பம்
 • தலைக்கிறக்கம்
 • பேசவியலாமை அல்லது வாய்க்குழறல்
 • வலிப்புகள்
 • உணர்விழப்பு
 • இறப்பு, கடும் இரத்த இனிமக் குறைவால்
 • வேகமான இதயத் துடிப்பு வீதம்
 • நடுக்க இதயத் துடிப்பு
 • வியர்த்தல்
 • இறுக்கம் அல்லது அழுந்துணர்வு
 • தள்ளாட்டம் அல்லது உடல் நடுக்கம்
 • நரம்பயர்வு அல்லது மிகையார்வம்
 • பசி
 • குமட்டல்
 • குத்தல் உணர்வு
 • தோல் வெளிர்த்தல்
மேற்கோள்கள்:[1][3][2][5][4]

ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட வகைகளில் நோய் அறிகுறிகள் உருவாகின்றன; எனவே இரத்த இனிமக் குறைவுள்ள ஒருவருக்கு மேற்கூறிய அனைத்து அறிகுறிகலும் ஏற்படாது.[3][5][4] அறிகுறிகள் உடனடியாகத் தோன்ரூம் தன்மை வாய்ந்தன.[5] இரத்த இனிமக் குறைவை இனங்காண, நோய் அறிகுறிகள் உள்ளவரின் இரத்த இனிம அளவை விரைந்து கண்டறிதல் இன்றியமையாததாகும்.[5][2]

இரத்தச் சர்க்கரைக் குறைவின் ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் மேற்குறிப்பிட்ட அனைத்து வெளிப்பாடுகளும் நிகழ மாட்டா. நோயறிகுறிகள், நோயறிகுறிகள் ஏற்பட்டாலும் கூட, அவை தோன்றூவதற்கு ஒரு சீரான வரிசை எதுவும் இல்லை. தனித்துவமான வெளிப்பாடுகள் வயது, இரத்தச் சர்க்கரைக் குறைவின் தீவிரத்தன்மை மற்றும் அது குறைவதன் வேகம் ஆகியவற்றுடன் வேறுபடலாம். இளம் சிறுவர்களில், சில வேளைகளில் வாந்தியானது கீட்டோன் மிகைப்புடனான காலைநேர இரத்தச் சர்க்கரைக் குறைவுடன் இணைந்திருக்கலாம். இளைஞர்கள் மற்றும் வயது வந்தவர்களில், மிதமாகக் கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவானது பைத்தியம், மன நோய், மருந்து நஞ்சாக்கம் அல்லது வெறியைப் போல ஒத்திருக்கலாம். முதியவர்களில், இரத்தச் சர்க்கரைக் குறைவு குவிய தாக்கு-போன்ற விளைவுகளை அல்லது வரையறுக்கக் கடினமான உடல்சோர்வை விளைவிக்கலாம். தனித்த நபரின் நோயறிகுறிகள், நிகழ்வுக்கு நிகழ்வு ஒரே மாதிரியாக இருக்கக்கூடும், ஆனால் அப்படி இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. குளூக்கோஸ் மட்டங்கள் எந்த வேகத்தில் குறைகிறது மற்றும் முந்தைய நிகழ்வு ஆகியவற்றால் இதில் மாற்றங்கள் ஏற்படவும் கூடும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளில், இரத்தச் சர்க்கரைக் குறைவால் எரிச்சல், நடுக்கங்கள், திடீர்த்தசைப்பகுதிச் சுருக்க வெட்டியிழுப்புகள், நீலம்பாய்தல், சுவாச அவலம், ஆப்னீக் (apneic) நிகழ்வுகள், வியர்த்தல், தாழ்வெப்பநிலை, தூக்க நடையர், தளர்ச்சி, பாலூட்டலை மறுத்தல் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் அல்லது "மயக்கங்கள்" ஆகியவை ஏற்படலாம். இரத்தச் சர்க்கரைக் குறைவானது மூச்சுத்திணறல், தாழ் கால்சீயத் தன்மை, சீழ்ப்பிடிப்பு, அல்லது இதயக் கோளாறு போன்றவற்றை ஒத்திருக்கலாம்.

இளமையான மற்றும் முதிய நோயாளிகளில், மூளை திறனை மாற்றும் இரத்த சருக்கரை குறை நோய் வலுக்குறை தவிர குறிப்பிடத்தக்க நோயறிகுறிகள் குறைந்து செல்வதோடு, தாழ் குளூக்கோஸ் மட்டங்களுக்கு மூளையானது பழக்கப்பட்டிருக்கலாம். இன்சுலின்-சார்ந்த நீரிழிவு நோயாளிகளில் இந்த நிகழ்வானது இரத்தச் சர்க்கரைக் குறைவு அறியாமை என்ற சொல்கொண்டு குறிப்பிடப்படும். இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு முயற்சி செய்யப்படும்போது இது ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. இந்த நிகழ்வின் இன்னொரு நோக்கு வகை I கிளைக்கோஜன் நோயில் ஏற்படும். சிகிச்சைக்குப் பின்னர் கடும் இரத்தச் சர்க்கரைக் குறைவு தற்போது நிகழ்வதைவிட நோயைக் கண்டறிவதற்கு முன்னர் நீண்டகால இரத்தச் சர்க்கரைக் குறைவானது சிறப்பாக தாங்கிக்கொள்ளப்படக்கூடும்.

கிட்டத்தட்ட எப்போதுமே, வலிப்புத்தாக்கங்கள் அல்லது உணர்ச்சியற்றநிலையை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவை மூளைக்கு பாதிப்பின்றை பின்னோக்கித் திருப்ப முடியும். தனித்த நிகழ்வுடன் இறப்புகள் அல்லது நிரந்தரமான நரம்புசார்ந்த பாதிப்பு ஏற்படுவதானது வழக்கமாக நாட்பட்ட, சிகிச்சை அளிக்கப்படாத உணர்ச்சியற்றநிலை, சுவாசித்தலில் குழப்பம், கடுமையான ஒருங்கிசையும் நோய் அல்லது வேறு சில வகையான நோய் தொற்றக்கூடிய நிலை ஆகியவற்றை ஈடுபடுத்தியுள்ளது. என்றாலும், கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவால் மூளை பாதிப்பு அல்லது இறப்பு இடைக்கிடை ஏற்படுகிறது.

நோய்சார் உடலியக்கவியல்[தொகு]

இனிமம் மூளைக்கான முதன்மையான ஆற்றல் வாயிலாகும். மூளைக்கான ஆற்றல் வழங்கலைப் பேணவும் இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தவிர்க்கவும் உடலில் பல இயங்கமைப்புகள் செயல்படுகின்றன.[3][11] உடல் கணையம் வழியாக கணைய நீரைச் சரியான அளவில் உருவாக்கி, விடுவித்து, இரத்த இனிம ஆக்கத்தையும் உடல் பயன்படுத்தும் இனிம அளவையும் சரிசெய்கிறது.[3][11] உடல் இயற்கையாக கணையம் ஊடாக கணையநீர் எனும் இயக்குநீரை உருவாக்குகிறது].[3] இந்தக் கணையநீர் உடலில் சாப்பிட்ட பிறகுள்ள இனிம அளவை ஒழுங்குபடுத்துகிறது.[3] குளூக்ககான் எனும் மற்றொரு கணையச் சுரப்பு இயக்குநீரும் கூட இரத்தச் சர்க்கரை அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது. இது கணையநீர்ச் செயல்பாட்டுக்கு எதிரான செயல்பாடாகும்.[3]பசி நிலைமைகளில் குளூக்ககான் இரத்தச் சர்க்கரை அளவுகளை மிகுக்கிறது.[3]

இயல்பான தாழ்நிலை நெடுக்கத்தில் இருந்து குருதிச் சர்க்கரையின் அளவு குறையும்போது குருதி இனிமக் குறைக்கு எதிரான முதல் தற்காப்பு நடவடிக்கையாக கணையம், தன் கணையநீர்(இன்சுலின்) விடுவிப்பைக் குறைக்கிறது.[3][11] இந்தக் கணையநீர்க் குறைவு கல்லீரலின் கிளைக்கோஜன் பகுப்பைக் கூட்டச் செய்கிறது.[3][11] கிளைக்கோஜன் பகுப்பு என்பது கிளைக்கோஜனைச் சிதைத்து குளூக்கோசை விடுவிக்கும் நிகழ்வாகும்.[3][11] கிளைக்கோஜனை குளூக்கோசின் முடக்கநிலைத் தேக்க வடிவமாகக் கருதலாம்.[3] கணையநீர்க் குறைவு, கல்லீரலிலும் சிறுநீரகங்களிலும் நிகழும் கிளைக்கோஜன் ஆக்கத்தைக் கூட்டுகிறது.[3][11] கிளைக்கோஜனாக்கம் என்பது தசைகள், கொழுப்பு போன்ற கார்போகைதிரேட்டு அல்லாத வாயில்களில் இருந்து கிளைக்கோசை உருவாக்கும் நிகழ்வாகும்.[3][11]

இயல்பான தாழ்நிலை நெடுக்கத்தில் இருந்து குருதிச் சர்க்கரையின் அளவு குறையும்போது, இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தவிர்க்க கூடுதல் தற்காப்பு இயங்கமைப்புகள் செயல்படுகின்றன.[3][11] கணையம் குளூக்ககானை விடுவிக்க உரிய குறிகை அனுப்பப்படுகிறது. இந்தக் குளூக்ககான் எனும் இயக்குநீர் கல்லிரலிலும் சிறுநீரகங்களிலும் குளூக்கோசாக்கத்தைக் கூட்டுகிறது; மேலும்,தசைச் சிதைவையும் கூட்டுவதனால் கிளைக்கோஜனாக்கத்தினைக் கூட்டி, கூடுதலான குளூக்கோசை வழங்க வழிசெய்கிறது.[3][12] இந்தக் கூடுதல் கிளைக்கோஜன் இரத்தச் சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் கொணர போதாவிட்டால், அண்னீரகச் சுரப்புகள் அண்ணீரை விடுவிக்கின்றன.[3][11] இந்த அண்ணீர் குலூக்கோஜனாக்கத்தையும் குளூக்கோஜன் பகுப்பையும் மிகச் செய்வதோடு அதே நேரத்தில் மூளைக்குக் குளூக்கோசு வழங்கலைப் பேணி, உடலின் பிற உறுப்புகளின் குளூக்கோசுப் பயன்பாட்டையும் குறைக்கிறது.[3][11]

இன்னமும் இரத்தச் சர்க்கரைக் குறைவு நீடிக்கும்போது, கிளைக்கோஜனாக்கத்தையும் கிளைக்கோஜன் பகுப்பையும் தொடர, கார்ட்டிசால், வளர்ச்சி இயக்குநீர்களை விடுவிக்கிறது. அதே நேரத்தில் உடல் உறுப்புகளின் கிளைக்கோசுப் பயன்பாட்டையும் தவிர்க்கிறது.[3][11] The effects of cortisol and growth hormone are far less effective than epinephrine.[3][11] இரத்தச் சர்க்கரைக் குறைவு நிலையில், மூளையும் பசியுணர்வைத் தூண்டிச் சாப்பிடச் செய்து இனிம அளவைக் கூடச் செய்கிறது.[3][11]

இரத்தச் சர்க்கரை அளவு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தேவைப்படும் குளூக்கோசை உயிர்க்கலன்களில் சேமிக்கப்பட்ட கிளைக்கோஜனிலிருந்து பெறலாம், ஆனால் இது ஒரு சில மணித்துளிகளுக்குள்ளேயே நுகரப்பட்டுவிடும். மூளை, பலவகை உடற்செயல்முறைகளுக்கு, இரத்தத்திலிருந்து மைய நரம்புத் தொகுதிக்குள் உள்ள சிற்றிடைவெளிக்குரிய இழையத்துக்குள்ளும் நரம்புக்கலங்களுக்குள்ளும் தாமாகவே பரவிச்செல்கின்ற குளூக்கோசின் தொடர்ச்சியான பகிர்வையே சார்ந்துள்ளது.

பெரும்பாலானவர்களில், 65 மிகி/டெ. லி (3.6 மிமோல்/லி) அளவுக்குக் கீழ் குளூக்கோசு குறையும்போது, மூளைச் செயல்திறனின் நுட்பக் குறைவைக் கவனிக்கலாம். பொதுவாக 40 மிகி/டெ. லி (2.2 மிமோல்/லி) அளவுக்குக் கீழ், செயலும் சூழநிலைசார் தீர்வும் தம்வலுவில் குறைதல் மிகத் தெளிவாகத் தெரியும். குளூக்கோசு மேலும் குறைந்தால் வலிப்புத்தாக்கங்கள் ஏற்படலாம். இரத்த குளூக்கோசு மட்டங்கள் 10 மிகி/டெ. லி (0.55 மிமோல்/லி) அளவுக்குக் கீழ்க் குறையும்போது, பெரும்பாலான நரம்புக்கலங்கள் மின் நடுநிலையாக அமைதியாகவும், செயல்பாடுகளற்றதாகவும் மாறும். இதனால் ஆழ்மயக்கம் ஏற்படும். இந்த மூளை விளைவுகள் ஒன்றாகச் சேர்த்து மூளைத் திறனை மாற்றும்.


குறைந்த நேர, தீங்கற்ற இரத்தச் சர்க்கரைக் குறைவு, மூளையில் நீடித்திருக்கும் விளைவுகளை உருவாக்காது. ஆனால் இது, மேலதிக இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு மூளையின் மறுதாக்கங்களைத் தற்காலிகமாக மாற்றக்கூடியது. நாட்பட்ட, கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவு, பரந்துபட்ட விதத்தில் நீடித்திருக்கும் பாதிப்பை விளைவிக்கும். இதில் புலன் உணர்வு சார்ந்த செயல்பாடு, இயக்கக் கட்டுப்பாடு அல்லது சுயநினைவு வலுக்குறைவு உள்ளடங்கும். கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவின் எந்தவொரு நிகழ்வின்போதும் நிரந்தரமான மூளை பாதிப்பு நிகழும் வாய்ப்பைக் கணிப்பீடு செய்வது கடினமாகும். இது அகவை, அண்மைக்கால இரத்த, மூளைக் குளூக்கோசு நிலைகள், ஆக்சிசன்குறை போன்ற பல ஒருங்கிசைவான சிக்கல்களையும் மாற்று எரிபொருள்கள் கிடைப்புநிலையையும் போன்ற எண்ணற்ற காரணிகளைச் சார்ந்துள்ளது. பெரும்பான்மையான நோயறிகுறிக்குரிய இரத்த சர்க்கரை குறை நிகழ்வுகள் நீடித்த தீங்கு எதையும் விளைவிக்கமாட்டா.[13]

காரணங்கள்[தொகு]

நீரிழிவு நோய்க்கு இன்சுலின், கிளைனைடுகள் சல்போனில்யூரியாக்கள் போன்ற மருந்துகள் தந்து நோயாற்றும்போது மிகவும் இயல்பாக இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுகிறது.[3][2] இது நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு மிகவும் அருகியே நிகழ்கிறது; ஏனெனில், குளூக்கோசையும் இன்சுலினையும் குளூக்ககானையும் சமன்செய்ய உடலில் பல ஒழுங்குபடுத்தும் இயங்கமைப்புகள் நிலவுகின்றன.[3][2]

நீரிழிவு நோய் உள்ளபோது[தொகு]

நோய்க்கு மருந்து தரும் முறைகள்[தொகு]

நீரிழிவு நிலையில் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுதலுக்கான மிக இயல்பான காரணமாக, நீரிழிவு நோயைத் தீர்க்க தரும் இன்சுலின், பைகோனைடுகள் சல்போனில்யூரியாக்கள் போன்ற மருந்துகளே அமைகின்றன.[3][2][6] This is often due to excessive doses or poorly timed doses.[3] சில வேளைகளில் உணவுண்ண இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளபடும்; தவிர்க்கவியலாமல், அப்போது உணவுண்ணாவிட்டாலோஅல்லது உணவு கொள்ள மறந்துவிட்டாலோ இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட வாய்ப்பு நேரும்.[3] இது திட்டமிட்டவகையில் உணவுதரும் குளூக்கோசு இல்லாமல் இன்சுலினைக் கூட்டுவதால் ஏற்படுகிறது.[3]

நோய் விழிப்பின்மை நிலை[தொகு]

திரும்பத் திரும்ப ஏற்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுகளால் இரத்தச் சர்க்கரைக் குறைவு விழிப்பின்மையை அல்லது இரத்தச் சர்க்கரைக் குறைவை உணரும் திறனைக் குறைக்கும்.[14][15][16] நீரிழின்போது பல இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுகள் ஏற்பட்டால், இரத்தச் சர்க்கரைக் குறைவைக் காட்டும் அறிகுறிகளைக் கிளர்த்தும் திறன் உடலில் குறையும்.[14][15][16] மாற்றாக, இத்தகைய இரத்தச் சர்க்கரைக் குறைவு விழிப்பின்மை இல்லாதவருக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான அறிகுறிகள், 55 மிகி/டெ. லி (3.0 மிமோல்/லி) அளவில் குளூக்கோசு உள்ளபோதே ஏற்படும்.[3][2] இரத்தச் சர்க்கரைக் குறைவு விழிப்பின்மை இல்லாதவர்கள் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான அறிகுறிகளை இரத்தச் சர்க்கரை மிகவும் குறைந்துவிட்ட நிலையிலேயே உணர்வர்.[14][15][16] இந்நிலை பல்வேறு காரணங்களால் மிகவும் அச்சமூட்டுவதாக அமையும்.[14][15][16] இவர்கள் இரத்தச் சர்க்கரை மிகவும் குறைந்துவிட்ட நிலையில் இரத்தச் சர்க்கரைக் குறைவை உணர்வதோடு மட்டுமல்லாமல், இவர்களுக்கான இரத்தச் சர்க்கரை அளவை இயல்புநிலைக்கு மீட்க உயரளவு கார்போகைதிரேட்டுகள் அல்லது குளூக்ககான் தேவைப்படும்.[14][15][16] மேலும், இவர்கள் நாட்பட்ட கடும் இரத்தச் சர்க்கரைக் குறைவு தரவல்ல பேரின்னல்களைச் சந்திக்க நேரும்.[14][15][16]

இரத்தச் சர்க்கரைக் குறைவு விழிப்பின்மைக்கான சரியான காரண ஆய்வு இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உள்ளவர்கள் நாளாக நாளாக, சிற்சில அண்ணீர் ஆர்றல் வகை அறிகுறிகளையே உணர்வதோடு, நரம்பினிமக் குறை வகை அறிகுறிகளை உணரும் திறனையும் இழக்கின்றனர் எனக் கருதப்படுகிறது.[15][16] நரம்பினிமக் குறை வகை அறிகுறிகள் மூளையின் தாழ் இரத்தச் சர்க்கரைக் குறைவால் ஏற்பட்டு, சோர்வு, குழப்பம், பேசவியலாமை, வலிப்புகள், உணர்விழப்பு போன்ற விளைவுகளைத் தருகின்றன.[3] அண்ணீர் ஆற்றல் அறிகுறிகள் மூளையில் இரத்தச் சர்க்கரைக் குறையும்போது உடல் தரும் எதிர்வினையால் உருவாகிறிதயத் துடிப்பு வீதம் கூடுதல், வியர்த்தல், நரம்பயர்வு, பசி போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது fast heart rate, sweating, nervousness, and hunger.[14][16][17]

பிற காரணங்கள்[தொகு]

நீரிழிவு நிலையில் இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்கும் காரணங்களாக பின்வருவன அமைகின்றன:

 • திட்டமிட்ட அல்லது திட்டமிடாத கட்டாய உண்ணாநோன்பு. இந்நிலையில் நெடுநேரமாக குளூக்கோசதூட்கொள்ளாமல் இருப்பதால் இரத்தச் சர்க்கரைக் குறைவு உருவாகிறது.[1][3]
 • இயல்புக்கு மாறான உடற்பயிற்சி தசைகலின் குளூக்கோசைக் கூடுதலாகப் பயன்கொள்ளுவதால் இரத்தச் சர்க்கரைக் குறைவு உருவாகிறது.[1][3]
 • நீரிழிவு மருந்து உட்கொள்ளுபவர்களின் குடிப்பழக்கம் குளூக்கோசு உருவாக்கத்தைத் தடுப்பதால் இரத்தச் சர்க்கரைக் குறைவு உருவாகிறது.[1][3]
 • சிறுநீரக நோய் இன்சுலின் சுழற்சி நன்றாக நிகழவொட்டாமல் தடுத்து, இரத்தச் சர்க்கரைக் குறைவு உருவாக்குகிறது.[3]

நீரிழிவுநோய் இல்லாதபோது[தொகு]

கடும் நோய்க்கு ஆட்பட்டநிலை[தொகு]

கடும் நோய்க்கு ஆட்படலே இரத்தச் சர்க்கரைக் குறைவை விளைவிக்கிறது.[1][3][2][11] பல்வேறு உடல் உறுப்புகலில் ஏற்படும் கடுமை வாய்ந்த நோய் அதன் இரண்டாம் சிக்கலாக இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்குகிறது.[3][2] Hypoglycemia is especially common in those in the தீவிர சிகிச்சைப் பிரிவு or those in whom food and drink is withheld as a part of their treatment plan.[3][11]

சீழ்த்தொற்றும் கடும் நோய்க்கு ஆட்பட்டநிலையில், இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்கும் காரணியாக்கிறது. இது பல வகைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்கலாம்.[3][11] சீழ்த்தொற்று நிலையில், உடல் தேவைப்படும் ஆற்றலுக்காக பேரளவு குளூக்கோசைப் பயன்படுத்துகிறது.[3][11] 2மேலும், உயிர்க்கல ஊக்கிகளின் உருவாக்கமும் குளூக்கோசுபயன்பாட்டை மிகுக்கிறது.[3] உயிர்க்கல ஊக்கிகள் உடல் இறுக்கத்துக்கு ஆட்ப்படும்போது உருவாகும் புரதம் ஆகும். குறிப்பாக, தொற்று நீக்கப் போராட்டத்தின்போது இவை உருவாகின்றன.[3] உயிர்க்கல ஊக்கிகள் குளூக்கோசாக்கத்தைத் தடுத்து உடல் ஆற்றல் தேக்கத்தைக் குறைக்கிறது.[3] இறுதியாக, கல்லீரலும் சிறுநீரகமுமே குளூக்கோசாக்கக் களங்களாக அமைய, அவையும் சீழ்த்தொற்று நிலையில் போதுமான உயிர்வளியைப் பெறமுடிவதில்லை என்பதால் உறுப்பழிவால் குளூக்கோசாக்கத்தைக் குறைக்கின்றன.[3]

இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும் பிற காரணங்களாக கல்லீரல் செயலிழப்பும் சிறுநீரகச் செயலிழப்பும் அமைகின்றன.[3][11] கல்லீரலே உடலில் குளூக்கோசக்கத்தின் முதன்மைக் களமாக இருப்பதால் கல்லீரல் செயலிழப்பு அல்லது சிதைவு குளூக்கோசாக்கத்தைக் குறைக்கிறது.[3][11] சிறுநீரகங்களுங் கூட குளூக்கோசாக்கக் களங்களாக இருந்தாலும் அவற்றின் செயலிழப்பால் குறையும் குளூக்கோசாக்கம், இரத்தச் சர்க்கரைக் குறைவு உருவாக்கத்தில் கணிசமான பங்களிப்பதில்லை .[3] மாறாக, சிறுநீரகங்கள் உடலில் இருந்து இன்சுலினை நீக்குகின்றன. இப்பணி சிறுநீரகச் செயலிழப்பால் குலைந்து நெடுநேரத்துக்கு இன்சுலினைச் சுழற்சியில் இருக்கச் செய்து இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்குகின்றன.[3]

மருந்துகள்[தொகு]

பலவகைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்கும் பல மருந்துகள் இனங்காணப்பட்டுள்ளன.[3][2][18] பருவகமில்லாத அழற்சித் தடுப்பு மருந்து இந்தொமெத்தாசினும் மலேரியயா தடுக்கும் குவானைனும் இடைநிலைத் தரச் சான்றுள்ளனவாக அமைகின்றன.[3][2][18] இருமுனைப்பு ஒழுங்கின்மைக்கு பயன்படுத்தும் இலித்தியம் தாழ்நிலைத் தரச் சான்றுள்ளதாக உள்ளது.[2][18] இறுதியாக, குருதிக்குழல் இறுக்கம் குறைக்கும் ஏற்பித் த்டுப்பிகள்(ACE தடுப்பிகள்),குருதிக்குழல் இறுக்கம் குறைக்கும் இரண்டாம் ஏற்பித் தடுப்பிகள்(ARB தடுப்பிகள்), பீட்டாத் தடுப்பிகள் ஆகியன மிகத் தாழ்நிலைத் தரச் சான்றுள்ளனவாக அமைகின்றன.[3][2][18] இலெவோபுளோவாக்சின், மும்மெத்தொப்பிரைம் சல்பாமெத்தோக்சாசோல் போன்ற நுண்ணுயிர்க்கொல்லிகளும், கருச்சிதைவு இயக்குநீரைத் தடுக்கும் மிப்பேப்பிரிசுட்டோனும் இதய இசைவின்மையைத் தடுக்கும் டைசோப்பிரிமடும், குருதியுறைவைத் தடுக்கும் கெப்பாரினும் வேதிமருந்தான மெர்க்காப்டொப்பியுரைனும் மிகத்தாழ்நிலைத் தரச்சான்றுள்ளனவாக உள்ளன .[2][18]

நீரிழிவு நோயற்றவர் நீரிழிவைத் தடுக்கும் மரபுவழி மருந்துகளை உட்கொண்டாலும் இரத்தச் சர்க்கரைக் குறைவு உருவாகலாம்.[3][2] இவற்றில் இன்சுலின், கிளைனைடுகள், சல்போனில்யூரியாக்கள் ஆகியன மரபுவழி மருந்துகளில் அடங்கும்.[3][2] இப்பிழைகள உடல்நல அமைப்பின் மருத்துவப் பிழைகளாலோ அல்லது மருந்தகப் பிழைகளாலோ ஏற்படும். இவை நோயாற்றல் கோளாறு இரத்தச் சர்க்கரைக் குறைவுகள் எனப்படுகின்றன்.[3]

தேவையற்றநிலையில் கணையநீர்ப்(இன்சுலின்) பயன்பாடு[தொகு]

இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தூண்ட,தேவைற்ற நிலையில் இன்சுலினை உட்கொண்டால் வேண்டா இன்சுலின் பயன்பாடு அல்லது வரவழைப்பு இரத்தச் சர்க்கறைக் குறைவு எனப்படுகிறது.[3][2][19] சிலர் எடையைக் குறைக்கவும் இன்சுலின் பயன்படுத்த, வேறுசிலர் ஒழுகின்மையைத் தாமே வரவழைக்கவும் இன்சுலின் பயன்படுத்தல் மனவிறுக்கக் கோளாறால் நிகழ்கிறது.[19] வரவழைப்பு இரத்தச் ர்க்கரைக் குறைவு 30–40 அகவை நிரம்பிய நீரிழிவு நோயுள்ள மகளிர், உடல்நலக் காப்புப் பணியாளர்கள், அல்லது மனவிறுக்கக் கோளாற்று வரலாறுள்ளவர்களிடம் காணலாம்.[3][19] வேண்டாநிலை இன்சுலின் பயன்பாட்டைக் கண்டறிய, குருதி மருத்த்வ ஓர்வு செய்து குருதியில் உயர் இன்சுலின் அளவுடன் குறைவான சி- வகைப் பெப்டைடும் புரோஇன்சுலினும் உள்ளனவா என இனங்கண்டு அறியலாம்.[3][19]

குடிப்பழக்கம்[தொகு]

சாராயம் குளூக்கோசாக்கத்தைத் தடுக்கிறது.[3] பல நாட்கள் தொடர்ந்து குடிப்பதோடு உண்ண உணவு சிறிதேனும் அல்லது முற்றிலும் கிடைக்காத போது, தப்பித் தவறிக் குடித்தால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படும்.[1][3] பட்டினியின் போது கிளைக்கோஜன் மிக அருகிய நிலையில் உள்லபோது பல காரணங்களால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.[3] உணவு அருந்தாநிலையில் கிளைக்கோஜன் தேக்கங்கள் மீளப் பெறவியலாது என்பதோடு, சாராயம் குளூக்கோசாக்கத்தையும் தடுக்கிறது.[3]

இயக்குநீர்க்(இசைமக்) குறைபாடு[தொகு]

அடிசன் நோயால் முதன்மை அண்ணீரகச் செயலிழப்புள்ள சிறுவர்களுக்கு நீண்ட நேரப் பட்டினியால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம்.[3] அடிசன் நோயுடன் நாட்பட்ட அண்ணீரகச் சுரப்பு இயக்குநீர் மிகத் தாழ்வான அளவுகளில் நிலவும்., இந்நிலையில் இந்த இயக்குநீர்க் குறைவு குளூக்கோசாக்கத்தை மிகவும் குறைவாகவே உருவாக்கும்.[3]

குறைவான வளர்ச்சி இயக்குநீரை உருவாக்கும் மூளையடிச் சுரப்புக் குறை சிறுவர்களில் இரத்தச் சர்க்கரைக் குறைவை நீண்ட நேர உடற்பயிற்சி அல்லது நீண்ட நேரப் பட்டினி நிலைமைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்குகிறது.[3]

பிறவிநிலை வளர்சிதை மாற்றப் பிழைகள்[தொகு]

வ்பிறவிநிலை வளர்சிதை மாற்றப் பிழைகள் என்பவை மரபியல் ஒழுங்கின்மைகளின் கணமாகும். இவை புரதங்கள், கார்போகைதிரேட்டுகள், கொழுப்பமிலங்களின் முறையற்ற சிதைவோடும் தேக்கலோடும் தொடர்பு கொண்டுள்ளன.[20] Inborn errors of metabolism may cause infant hypoglycemia, and much less commonly adult hypoglycemia.[20] குளூக்கோஜன் சிதைவைத் தரும் ஒழுங்கின்மைகள் கிளைக்கோஜன் தேக்க நோய்கள் எனப்படுகின்ற்ரன. இவை இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தலாம்.[3][20] வழக்கமாக, கிளைக்கோஜன் சிதைவு, குறிப்பாக பட்டினி நிலைமைகளில் குளூக்கோசு அளவுகளை கூட்டுகிறது.[3] பட்டினி நிலைமைகளில், கிளைக்கோஜன் தேக்க நோய்கள் உள்ளவர்களில் கிளைக்கோஜன் சரிவரச் செதைவதில்லை. இதனால் குளூக்கோசு அளவுகள் ஏற்பற்ற நிலைக்குக் குறைகிறது; எனவே, இதனால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுகிறது.[3] கிளைக்கோஜன் தேக்க நோய்கள் தரும் இரத்தச்சர்க்கரைக் குறைவு தரும் கிளைக்கோஜன் தேக்க நோய்களில் அதன் சுழி வகையும் முதலாம் வகையும் மூன்றாம் நான்காம் வகைகளும் பாங்கோனி நோய்த்தொகையும் உள்ளடங்கும்.[3]

இன்சுலினோமா புற்று[தொகு]

இன்சுலினோமா போன்ற முதன்மைப் பி-உயிர்க்கலப் புற்றுடன் இரத்தச் சர்க்கரைக் குறைவு இணைந்து ஏற்படலாம்.[3] இது கணையத்தில் தோன்றும் ஒருவகைப் புற்றாகும்.[3] இப்புற்று இன்சுலினைச் சுரந்து குளூக்கோசு அளவுகளைக் குறைக்கிறது. இதனால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுகிறது.[3] இரத்தச் சர்க்கரைக் குறைவு ஈழும்போது இன்சுலின் அளவுகளைக் குறைக்க செயல்படும் இயல்பான ஒழுங்குபடுத்தும் இயங்கஐப்புகள் இந்நிலையில் செயல்நிலைக்கு வருவதில்லை.[3] இரத்தச் சர்க்கரைக் குறைவு இகழ்வில், குருதிக்கணிக இன்சுலின், சி- பெப்டைடு, புரோஇன்சுலின் ஆகியவை உகந்தநிலையை விட உயர்வாக அமைகின்றன.[3]

பி-உயிர்க்கலம் சாராத புற்றுகள்[தொகு]

கல்லீரல் புற்று, அண்ணீரகப் புறணி இயக்குநீர் இழைமப்(திசுப்) புற்று, குடல்வால் புற்று போன்ற பி-உயிக்கலன் சாராத புற்று உள்ளவர்களுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம்.[3] இந்தப் புற்றுகள் இன்சுலின் மிகையை உருவாக்கி, இரத்தச் சர்க்கரை அளவுகளைக் குறைக்கும்; குறிப்பாக இவை இன்சுலின் போன்ற இரண்டாம் வளர்ச்சிக் காரணியை உருவாக்கிக் குருதிச் சர்க்க்கரை அளவுகளைக் குறைக்கின்றன.[3]

இரைப்பை மாற்றுவழி அறுவைக்குப் பிந்தியநிலையில் உணவுக்குப் பிந்திய இரத்தச் சர்க்கரைக் குறைவு[தொகு]

வயிற்றில் செய்யப்படும் இரப்பை மாற்றுவழி அறுவை எடைகுறைக்கும் அறுவையாகும். எனவே, இதனுடன் இணைந்து இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படும். இது இரைப்பை மாற்றுவழி அறுவைக்குப் பிந்திய இரத்தச் சர்க்கரைக் குறைவு எனப்படுகிறது.[3] Although the entire mechanism of hypoglycemia following this surgery is not fully understood, it is thought that meals cause very high levels of glucagon-like peptide-1 (also called GLP-1), a hormone that increases insulin, causing glucose levels to drop.[3]

தன்னியல்பு எதிர்ப்பாற்றல்வழி இரத்தச் சர்க்கரைக் குறைவு[தொகு]

இன்சுலினுக்கு எதிராகக் கிளர்தெழும் எதிர்ப்பொருள்களின் உருவாக்கம், தன்னியல்பு எதிர்ப்பாற்றல்வழி இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்துகிறது.[3][21] எதிர்ப்பொருள்கள் உடல் உருவாக்கும் நோயெதிர்ப்பு உயிர்க்கலங்களாகும். இயல்புநிலையில் இவை குச்சுயிரிகளையும் நச்சுயிரிகளையுமே தாக்கும். என்றாலும், சிலவேளைகளில் இவை இயல்புநிலை மாந்த உயிர்க்கலங்களையும் தாக்கலாம். அந்நிலையில் தன்னியல்பு எதிர்ப்பாற்றல்வழி இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுகிறது.[22] தன்னியல்பு எதிர்ப்பாற்றல்வழி இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வில் இருவகை இயங்கமைப்புகள் தூண்டப்படலாம்.[3][21] இவற்றின் ஒருவகையில் எதிர்ப்பொருள்கள் இன்சுலினுடன் இணைந்து விடுவதால் இந்த இன்சுலின் உணவுக்குப்பின் விடுவித்து இன்சுலினைச் செயலிழக்கச் செய்கின்றன.[3][21] சிறிது நேரம் கழிந்ததும், எதிர்ப்பொருள்களில் இருந்து இன்சுலின் பிரிந்து விடும். எனவே, இன்சுலின் செயல்பட்டு உணவுக்குப் பிந்திய சற்றே நேரம்கழித்த இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும். இது நேரங்கழித்த உணவுப்பிந்திய இரத்தச் சர்க்கரைக் குறைவு எனப்படுகிறது.[3][21] மற்றொரு இயங்கமைப்பு இன்சுலின் ஏற்பிகளுக்கு எதிராகச் செயல்படும் எதிர்ப்பொருள்களை உருக்குவதால் இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும். இவ்வகையில் ஏற்படும் எதிர்ப்பொருள்கள் இன்சுலின் ஏற்பி எதிர்ப்பொருள்கள் எனப்படுகின்றன .[3][21]னைந்த எதிர்ப்பொருள்கள் இன்சுலின் ஏற்பிகளுடன் இணைந்துவிடுவதால் இன்சுலின் சிதைவைத் தடுத்து, தேவையற்ற உயர் இன்சுலின் அளவுகளையும் இரத்தச் சர்க்கரை அளவுகளையும் உருவாக்கும்.[3][21]

பிறவிநிலை இரத்தச் சர்க்கரைக் குறைவு[தொகு]

பிறந்து 48 மணி நேரம் ஆகாத புதிய மழலைக் குழவிகள் சில மணி நேரம் உணவு உட்கொள்லாம்மல் இருந்தால், அவர்கள் முழு உடல் நலத்தோடு இருந்தபோதும் தாழ்ச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம்.[7]பிறந்து 48 மணி நேர புத்திளங் காலத்தில் வாழும் குழவிகள் அக்காலத்தில் குளூக்ககானையும் அண்னீர் அளவுகளையும் தாமே சரிசெய்துக் கொள்கின்றன; இதனால் மாறுநிலை இரத்தச் சர்க்கரைக் குறைவைக் கிளரச் செய்யலாம்.[7] பிறந்து, 48 மணி நேரம் முடிந்த குழந்தைகளில், குருதி ஊனீரின் சராசரி குளூக்கோசு அளவு, பிற முதிர் அகவையினருக்கு இருப்பது போலவே 70 இல் இருந்து 100 மிகி/டெ. லி (3.9-5.5 மிமோல்/லி) அளவில் இருப்பதால் அவ்வளவாக இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படாது.[7]இன்சுலின், பைகோனைடுகள் சல்போனில்யூரியாக்கள் போன்ற மருந்து

==நோயறியும் அணுகுமுறைகள்==இரத்தச் சர்க்கரைக் குறைவை இனங்காணும் ந்ம்பத் தகுந்த முறை விப்பிள் மும்மை வழியாக இனங்காணலே எனலாம்.[3][2] விப்பிள் மும்மையின் உறுப்புகளாக, blood sugar level below 70 mg/dL (3.9 mmol/L) அளவுக்கும் குறைந்த இரத்தச் சர்க்கரை அளவு, இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான அறிகுறிகள், இரத்தச் சர்க்கரை இயல்புநிலைக்குத் திரும்பியது அறிகுறிகள் மறைதல் ஆகியன அமைகின்றன.[3][2] நோயாளியின் விப்பிள் மும்மையை இனங்காணல் தேவையற்ற மருத்துவ ஓர்வுகளைச் செய்தலைத் தவிர்ப்பதோடு, உடல்நலத்துக்காக செய்யும் செலவுகளையும் குறைக்க உதவுகிறது.[2] நீரிழிவு நோயுள்ளாவருக்கு விப்பிள் மும்மை செய்முறையில் இரத்தச் சர்க்கரைக் குறைவு, இன்சுலின், கிளைனைடுகள், சல்போனில்யூரியாக்கள் போன்றவற்றால் உண்டானதாகக் கருதலாம்.[2] நீரிழிவுநோயற்றவருக்கு ஏற்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான காரனம் பற்றி அறிய, கூடுதல் நோயறியும் ஓர்வுகள் தெவையாகும்.[2] அத்தகைய இரத்த்ச் சர்க்கரைக் குறைவுக்கான ஓர்வுகளில் பின்வருவன உள்ளடங்க வேண்டும்:

 • இரத்தச் சர்க்கரை அளவு[3][2]
 • இன்சுலின் அளவு[3][2]
 • சி-பெப்டைடு அளவு[3][2]
 • புரோஇன்சுலின் அளவு[3][2]
 • பீட்டா கைதிராக்சிபியூட்ரிக் அமில அளவு[3][2]
 • வாய்வழி இரத்தச் சர்க்கரைக் குறைவு முகமை அளவீடு[2]
 • குளூக்ககானுக்கான இரத்தச் சர்க்கரை அளவு எதிர்வினை[2]
 • இன்சுலின் எதிர்ப்பொருள்கள்[2]

தேவைப்பட்டால், அகநோயாளிக்கோ அல்லது புறநோயாளிக்கோ இரத்தச் சர்க்கரைக் குறைவு நோயறிதல் நிகழ்வை உருவாக்கிப் பார்க்கலாம்.[3] இது நோயறியும் பட்டினி ஓர்வு எனப்படுகிறது. இந்த ஓர்வில் நோயாளி பட்டினிக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வு ஏற்படும் வரை ஆட்படுத்தப் படுவார். பிறகு உரிய இரத்தம் உடலில் இருந்து எடுத்து கொள்ளலாம்.[3] சில் இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வு, லப்புணவுக்குப் பின்னர் மீள்நிகழ்த்தப்படும்; பிறவற்றில் 72 மணிநேரப் பட்டினிக்குப் பின்னர் மீள்நிகழ்த்தப்படும்.[3][2] இன்சுலினோமா புற்று ஐயம் உள்ளபோது, கதிரியல் படமெடுத்தலே சிறந்த நுட்பமாகும் இதற்குப் புறஒலிப் படிமமுறை, கணினிவழி முப்பருமானப் படிம முறை, காந்த ஒத்திசைவு படிம முறை போன்ற கதிரியல் படிம முறைகலைப் பயன்படுத்தலாம்.[3][2]

நோயாற்றும் முறைகள்[தொகு]

ஒருவருக்கு இரத்தச் சர்க்கரைக் குராஇவு உள்ளதாக இனங்கண்டதுமே அதைத் தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்து உயிரைக் காக்கவேண்டும். [1] முதல் நடவ்டிக்கையின் இலக்கு, இரத்த்ச் சர்க்கரையளவை இயல்புநிலைக்கு கொணர்தலே ஆகும். இதைப் பலவழிகளில் நிறைவேற்றலாம். இதற்கு இரத்தச் சர்க்கரைக் குறைவின் கடுமையைப் பொறுத்து சர்க்கரையளவை கண்காணித்து, நடப்பில் உள்ள வழிவகைகளால் நோயைக் கண்காணிப்பவரே நோயைத் தணிக்கலாம்.[1][3] இதற்கான பொது விதிமுறை "15-15 விதிமுறையாகும்". இதன்படி, 15 கிராம் கார்பொகைதிரேட்டல் உட்கொண்டு 15 மனித்துளிக்குப் பிறகு இரத்தச் சர்க்கரையளவமியல்புநிலைக்கு மீண்டதா எனச் சரிபார்க்கவேண்டும்.[5]

சொந்தமாக தானே நோயாற்றும் முறை[தொகு]

தனி ஒருவர் இரத்தச் சர்க்கரைக் குறைவு நேரவுள்ளதை உணரமுடிந்தால், உடனடியாக இரத்தச் சர்க்கரை அளவை அலந்தறிந்து சர்க்கரையுள்ள உணவை அல்லது பருகை உட்கொள்ளவேண்டும்.[1] ஆனால், அவர் உணவை விழுங்கஉடியும் அளவுக்கு நனவோடு இருக்கவேண்டும்.[1][3] இரத்தச் சர்க்கரையளவுகளைக் குறைந்தது 70 மிகி/டெ.லி (3.9 மிமோல்/லி) அளவில் இறுத்த, 10 முதல் 20 கிராம் மாவுப்பொருளை உட்கொள்ள்ளல் இலக்காக கொள்ளப்படுகிறது.[3][2]

உட்கொள்ளவேண்டிய பொருள்களாகப் பின்வருவன அமையலாம் :

 • குளூக்கோசு மருந்து அல்லது குழைவு [1][2]
 • அரைக் கோப்பை அல்லது 4 அவுன்சுகள் ஆப்பிள், கொடிமுந்திரி, கரும்பு போன்ற சர்க்கரை மிகுந்த சாறுகள் [1][2]
 • அரைக்கோப்பை அல்லது 4 அவுன்சுகள் சோடா (உணவில் சேர்க்கும் சோடா அன்று) அல்லது மென்பருகுகள்[2]
 • வெல்லம்[2]
 • 1 மேசைக்கரண்டி சர்க்கரை அல்லது தேன், [1]

இரத்தச் சர்க்கரையளவுகள் 10 முதல் 15 மணித்துளிகளில் மேம்பட்டு அறிகுறிகள் மறையலாம். அப்போது உடனே இரத்தச் சர்க்கரையளவை மீண்டும் அளந்தறிய வேண்டும்.[3][2] மீளவும் எடுத்த இரத்தச் சர்க்கரையள் 70 மிகி/டெ.லி (3.9 மிமோல்/லி) அளவினும் கூடுதலாக இல்லாவிட்டால், மறுபடியும் 10 முதல் 20 கிராம் அளவுக்குக் கார்போகைதிரேட்டை உட்கொண்டு, மீளவும் 15 முதல் 25 மணித்துளிகள் ஆனதும் இரத்தச் சர்க்கரையளவை அளந்தறிய வேண்டும்.[3][2] இதை இரத்தச் சர்க்கரையளவு இயல்பானநிலைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்யவேண்டும்.[3][2] கார்போகைதிரேட்டு எனும் மாவுப்பொருளை சப்பியோ குடித்தோ விழுங்கியோ உட்கொண்டால் இரத்த இனிம அளவு பேரளவில் மேம்பாடுறும்.[23] இது பேரளவில் குளூக்கோசின் உயிரியலாக கிடைத்தலை உறுதி செய்து, உடலில் பேரளவு சர்க்கரையை ஊட்டி, உடல் பேரளவில் இரத்தச் சர்க்கரையளவுகளை மேம்படுத்திப் பெரும மாக்குகிறது.[23] இரண்டாவது சிறந்த முறையில் நாக்கடியில் மாவுப்பொருளை வைத்து அதைக் கரைய விடுவதாகும். இது நாக்கடி முறைமை எனப்படுகிறது. [23] வெடுத்துகாட்டக நாவடியில் வெல்லக்கட்டியை வைத்துக் கரைத்தலைக் கூறலாம். வெல்லகட்டியைச் சப்பி, உடைத்து விழுங்குதல், இரத்தச் சர்க்கரையளவைக் கூட்டுவதில் முன்னதை விட நல்ல பலனைத் தருகிறது.[23] இரத்தச் சர்க்கரை அளவைச் சரிசெய்ததும், குலூக்கோஜன் தேக்கத்தை மீட்க, ஒருமனி நேரத்துக்குள், முழு உணவையும் உட்கொள்ளலாம்.[2]

கல்வி[தொகு]

தனி ஒருவருக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வு ஏர்படுகையில், குடும்பம், நண்பர், அவருடன் பணிபுரிவோர் தக்க நோயாற்றும் முறைகளைப் பின்பற்றி அவரது உய்ரைக் கப்பாற்றலாம்.[1] ஆனால், இவரகள் நோய் அறிகுறிகளை அறிந்து இரத்தச்சர்க்கரைக் குறைவை இனங்கண்டு உரிய உணவுகளை தரப் பயிற்சியும் ஊசிமூலம் அல்லது மூக்குவழியாக குளூக்ககானை ஊட்டவும் இனிம அளவியைப் பயன்படுத்தவுமான பயிற்சியோடு கல்வியும் பெற்றிருக்க வேண்டும்.[1]

கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தீர்க்க பயன்படும் குளூக்ககான் கருவியணி.

குடும்பம், நண்பர், உடன்பணிபுரிவோர்வழி நோயாற்றும் முறைகள்[தொகு]

இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்களின் குடும்பம், நண்பர்கள்ளுடன் பணியாற்றுபவர்கள் ஆகியோரே முதலில் இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வை இனங்காண்பவர்கள் என்பதால் அவர்கள் உடனடியாக உதவிக்கு வருகின்றனர்.[3] ஒரு நீரிழிவு நோயாளியில் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான நோய்க்குறிகளும் அறிகுறிகளும் உள்ளநிலையை உணர்ந்ததும் உடனே ஓர் இனிம அளவியைப் பயன்படுத்தி உடனடியாக இரத்தச் சர்க்கரையளவை எடுக்க வேண்டும்.[1] இரத்தச் சர்க்கரையளவு 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/லி) அளவை விடக் குறையும்போது, நோய்தீர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ள அவர் உணவை அல்லது தரும் பொருளைப் பாதுகாப்பாக விழுங்கும் அளவுக்கு நனவோடு இருக்கவேண்டும்.[3][2] இந்நிலைக்கு ஆட்படுவோர் தருவதை விழுங்கும் அளவுக்கு நனவோடு இருந்தால், குடும்பம், நண்பர்கள் உடன் பணியாற்றுபவர்கள் இரத்தச் சர்க்கரையளவு குறைந்தது 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/லி) அளவை விட உயர்த்த, அவரை 10 முதல் 20 கிராம் கார்போகைரேட்டை அருந்த செய்து உதவலாம்.[2] 15 முதல் 25 மணித்துளிகள் ஆனதும் இரத்தச் சர்க்கரையளவு உயர்ந்து அறிகுறிகளு ம் மறைந்து நிலைமை மேம்படலாம். இந்நிலையில் மீளவும் இரத்தச் சர்க்கரையளவை அளக்கவேண்டும்.[3][2] மீளவும் எடுத்த இரத்தச் சர்க்கரையள் 70 mg/dL (3.9 mmol/L) அளவினும் கூடுதலாக இல்லாவிட்டால், மறுபடியும் 10 முதல் 20 கிராம் அளவுக்குக் கார்போகைதிரேட்டை உட்கொண்டு, மீளவும் 15 முதல் 25 மணித்துளிகள் ஆனதும் இரத்தச் சர்க்கரையளவை அளந்தறிய வேண்டும்.[3][2] இதை இரத்தச் சர்க்கரையளவு இயல்பானநிலைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்யவேண்டும். பிறகு தேவைப்பட்டால் நெருக்கடிநிலை உதவியை நாடலாம்.[2]

கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர் நனவோடு இல்லாவிட்டால், ஊசி வழியோ மூக்கு வழியோ குளூக்ககானைச் செலுத்த வேண்டும்.[2][3][11] அமெரிக்காவில், கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்கள் நெருக்கடிநிலையில் பயன்படுத்த, எடுத்துசெல்லும் குளூக்ககான் செலுத்தணிகள் கிடைக்கின்றன.[24][25] பிறகு தேவைப்பட்டால் நெருக்கடிநிலை உதவியை நாடலாம்.[2]

தொழில்முறை மருத்துவர்வழி நோயாற்றும் முறைகள்[தொகு]

கடுமையான அறிகுறிகளும் சிரையூடாக அணுகலும் முடியும்போது மருத்துவமனையில் நோயாற்றுதலை மேற்கொள்ளலாம்.[26] நோயாளி விழுங்கவியன்ற அளவுக்கு நனவோடு இருக்கும்போது, உணவு அல்லது முன்பருகுகள் தரலாம். இனிம மாத்திரைகளோ குழைவோ கூட தரலாம்.[26] சிரையூடாக அணுகிட முடிந்தால், 50% டெக்சுட்டிரோசை 20 கிராம் அளவு வழக்கமாகத் தரப்படுகிறது.[26] அப்படி முடையாத நிலையில், தசையூடாகவோ அல்லது மூக்கு வழியாகவோ குளூக்ககானை ஊட்டலாம்.[26]

பிறவகை நோயாற்றும் முறைகள்[தொகு]

குளூக்ககான் ஊசி வழியாகவோ டெக்சுட்டிரோசு தந்தோ கார்பொகைதிரேட்டு நுகர்வால் இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிக்கும்போது, இதற்குப் பிற மாற்றுத் தணிப்புமுறைகளும் உள்ளன.[3] டயாசாக்சைடு, ஆக்ட்டிரியோடைடு மருந்துகள் இன்சுலின் அளவுகளைக் குறைத்து, இரத்தச் சர்க்கரை அளவுகளை கூட்டுகின்றன.[3] அமெரிக்காவில் 2021 மார்ச்சில் கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிக்கும் மருந்தாக டாசாகுளூக்ககானைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.[27] செகலோகு எனும் வனிகப் பெயருள்ள டாசிகுளூக்ககான் தனித்தனமையானது. ஏனெனில், இதில் குளூக்ககான் ஊசிக்குழல் வழியாகவோ அல்லது தன்னியக்கச் செலுத்துபேனா வழியாகவோகிடைக்கிறது. ஆனால், பழைய குளூக்ககன் செலுத்தணிகளில் குளூக்ககான் தூள் தனி நீர்மத்தில் கரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.[27]

உலூக்கோசேடு எனும் மென்பருகு ஐக்கிய இராச்சியத்தில் இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இப்போது இப்பருகுகளில் குளூக்கோசுக்குப் பதிலாக செயற்கை இனிப்புகள் கலப்பதால் இவை இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிப்பதில்லை.[28]

தவிர்ப்பு முறைகள்[தொகு]

தகுந்த இன்சிலின் அளவை வழங்கும் இன்சுலின் ஏற்றி.

நீரிழிவுநோய் உள்ளபோது[தொகு]

இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தவிர்த்தல் அதை உருவாக்கும் காரணியைச் சார்ந்துள்ளது.[1][3][2] இன்சுலின், பைகோனைடுகள் சல்போனில்யூரியாக்கள் போன்ற மருந்துகள் வழியாக நீரிழிவு நோயாற்றும்போது, இரத்தச் சர்க்கரைக் குறைவை தவிர்க்க நோயாளிகளுக்குக் கல்வி தருவதோடு, மருந்து உட்கொள்ளலைச் சரிசெய்யும் வழிமுறைகளையும் சொல்லித் தரவேண்டும்.[1][3][2] நீரிழிவு நோய்க் கல்வியின் அடித்தளம், இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான நோய்க்குறிகளையும் அறிகுறிகளையும் உணர, கற்றுத் தருவதும் அந்நிகழ்வு உருவான உடனே விரைந்து, அந்நிகழ்வைத் தீங்கான நிலையை அடையும் முன்பே அதற்கான தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள கற்றுத் தருவதும் ஆகும்.[2] த்ஹவிர்ப்புக்கான மற்றொரு முதன்மையான முறை அடிக்கடி இஅரத்தச் சர்க்கரையின் அளவுகளை எடுத்து தானே தன் இரத்தச் சர்க்கரையைக் கண்காணித்தலாகும்.[2] முதல் வகை நீரிழிவு நோயுள்ளவர்கள் இன்சுலின் ஏற்றிகளை பயன்படுத்தி தம் இரத்தச் சர்க்கரையைக் தொடர்ந்து கண்காணிப்பவர்கள் கணிசமாக இரத்தச் சர்க்கரைக் கட்டுபாட்டை நன்கு மேம்படுத்திக் கொள்வதை ஆராய்ச்சிகள்ல் தெளிவாக்குகின்றன.[29][30][31] இன்சுலின் ஏற்றிகள் உயர் சர்க்கரை உச்சங்களைத் தவிர்க்க உதவுகின்றன. பொருத்தமற்ற இன்சுலின் உட்கொள்ளும் அளவுகளைத் தவிக்கவும் உதவுகின்றன.[30][31][32] தொடர் சர்க்கரைக் கண்காணிப்பிகள் தாழ் சர்க்கரை அளவிலும் உயர் சர்க்கரை அளவிலும் எச்சரிக்கை ஒலியை எழுப்பும் . குறிப்பாக இது இரவுந்நெரம் இரத்தச் சர்க்கரைக் குறையும்போதும் இரத்தச் சர்க்கரை விழிப்பின்மை நிலையிலும் மிக உதவியாக அமையும்.[30][31][32] மருந்துதரல் ச்ரிசெய்தலில் மருந்தூட்ட அளவையும் நேரத்தையும் இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தவிர்க்க சரிசெய்யலாம் அல்லது தேவப்பட்டால் முழுமையாக மருந்தூட்டலையே நிறுத்திவிடலாம்.[3][2]

நீரிழிவுநோய் இல்லாதபோது[தொகு]

நீரிழிவுநோய் இல்லாதவர்களுக்கு ஏற்படும் இரத்தச் சர்க்கரைக் குரைவைத் தவிர்க்க, கரணத்தைப் பொறுத்து பலவகைத் தடுப்பு முறைகள் உள்ளன.[1][3][2] அடிசன் நோயில் அமையும் அண்ணீரகப் புறணி இயக்குநீர் குறைவாலோ அல்லது அடிமூளை இயக்குநீர்க்குறை நோயில் அமையும் வளர்ச்சி இயக்குநீர் குறைவாலோ ஏற்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவை உரிய இயக்குநீர்களைச் செலுத்தி தவிர்க்கலாம்.[3][2] பி-உயிர்க்கலம் சாராத புற்றுகள் உருவாக்கும் இரத்தச் சர்க்கரைக் குறைவைப் புற்றை அறுவைவழி நீக்கியோ கதிர்வீச்சு மருத்தவம் வழியாகவோ வேதிமருத்துவம் வழியாகவோ புற்ரின் அளவைக் குறைக்கலாம்.[3][2] சில நேர்வுகளில், வளர்ச்சி இயக்குநீர், இனிம் அண்ணீரகச் சுரப்பு, ஆக்டிரியோடைடு போன்ற இயக்குநீர் ஊட்ட மருத்துவத்தால் இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுகளைக் குறைக்கலாம்.[3][2] வயிற்று மாற்றுவழி அறுவஐக்குப் பிந்திய இரத்தச் சர்க்கரைக் குறைவைப் பலதடவை அடிக்கடி சிற்றளவாக உணவுண்டும் சர்க்கரை நிரம்பிய உணவைத் தவிர்த்தும் ஆல்பா குளூக்கொசிடேசுத் தடுப்பிகள், டயாசாக்சைடுகள், ஆக்டிரியோடைடு போன்ற மருந்துகளைப் பயன்படுத்தியும் குறைக்கலாம்].[3][2] இரத்தச் சர்க்கரைக் குறைவின் சில காரணங்களில், குறிப்பிட்ட காரணம் சார்ந்த சிறந்த தவிர்ப்புமுறையைக் கொண்டு இரத்தச் சர்க்கரைக் குறைவை தடுக்க வேண்டி உள்ளது.[2] இன்சுலினோமா புற்று இவகையைச் சாரும். இதற்கு இரத்தச் சர்க்கரைக் குறைவில் இருந்து மீட்க, அப்புற்றை அறுவையால் நீக்க வேண்டும்.[2]இந்நிலையில் இன்சுலினோமா புற்றை நீக்க, அறுவை மேற்கொள்ள முடியாதவருக்கு, டயாசோ ஆக்சைடு, ஆக்டிரியோடைடு ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தலாம்.[2]

நோய்ப்பரவல் நிலை[தொகு]

இரத்த்ச் சர்க்கரைக் குறைவு முதல் வகை நீரிழிவு நோயிலும் இரண்டாம் வகை நீரிழிவு நோயிலும் இன்சுலின், கிளைனைடுகள் சல்போனில்யூரியா போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது வழக்கமாக ஏற்படுகிறது.[1][3] முதல் வகை நீரிழிவில் ஒருவாரத்தில் இருமுறை வலிவு குறைந்த இரத்தச் சர்க்க்கரைக் குறைவு நிகழ்வுகள் ஏற்படுகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. [3] கூடுதலாக, முதல் வகை நீரிழிவில் ஒராண்டில் ஒருமுறை நோயாற்றல் உதவி தேவைப்படும் அளவுக்கு கடுமைவாய்ந்த இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுகிறது.[3] இறப்பு வீதத்தைப் பொறுத்தவரையில், முதல்வகை நீரிழிவிலலிரத்தச் சர்க்கரைக் குறைவினால் 6-10% அளவாக அமைகிறது.[3][மெய்யறிதல் தேவை]

இரண்டாம் வகை நீரிழிவில், முதல் வகையோடு ஒப்பிடுகையில், இரத்தச் சர்க்க்கரைக் குறைவு வழக்கமாக குறைவாகவே ஏற்படுகிறது; ஏனெனில், இரன்டாம் வகை நீரிழிவுக்குத் தரப்படும் மெட்பார்மின், கிளிட்டாசோன்கள், ஆல்பா குளூக்கோசிடேசு தடுப்பிகள், குளூக்ககானையொத்த பெப்டைடு-1 ஏற்பி உணர்விழப்பிகள், டைபெப்டைல் பெப்டிடேசி-4 தடுப்பிகள் ஆகிய மருந்துகள் இரத்த்ச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்துவதில்லை.[1][3] இன்சுலின், கிளைனைடுகள், சல்போனில்யூரியாக்கள் ஆகிய மருந்துகளை உட்கொள்ளும் இரண்டாம் வகை நீரிழிவில் இரத்தச் சர்க்கரைக் குறைவு வழக்கமாக ஏற்படுகிறது.[1][3] இருவகை நீரிழிவிலும் இன்சுலின் மருந்தூட்டம் அல்லது இன்சுலின் ஊசி போடலே இரத்தச் சர்க்கரைக் குறைவை உருவாக்கும் பொதுவான இடராக அமைகிறது.[1][3]

முழுமையான மருந்தாகும் இரத்தச் சர்க்கரைக் குறைவு[தொகு]

இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது மாற்று மருந்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகவும் உள்ளது. இது மாறிய மனநிலையின் நோயறிகுறிகளின் மீண்டும் மீண்டும் நிகழும் நிலையையும், தற்சார்புடைய புலன் உணர்வு சார்ந்த செயல்திறனையும் குறிக்கிறது, சில வேளைகளில், இதில் அண்ணீரக வினைசார் நோயறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இவை தாழ் இரத்த குளூக்கோசுடன் இணைந்ததாக அல்லது தொடர்பற்றதாக இருக்கலாம். இங்கு முதன்மையாக, மாறிய மனநிலை, நடத்தை, உளச் செயல்திறன் ஆகியவையே நோயறிகுறிகளாகக் கருதப்படும். வழமையாக, இந்த நிலைக்கு எளிமையானது முதல் விரிவுபடுத்தியது வரையான உணவு மாற்றங்களால் சிகிச்சையளிக்கப்படும். இந்த நிலையைக் கையாள்வது குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்குவதென்பது மாற்று மருந்து குறித்த கவனத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.

குறிப்புதவிகள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK). "Low Blood Glucose (Hypoglycemia)". NIDDK.nih.gov (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 28 July 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 2.51 2.52 2.53 2.54 2.55 2.56 2.57 2.58 2.59 2.60 2.61 2.62 2.63 2.64 2.65 2.66 2.67 2.68 2.69 2.70 2.71 2.72 2.73 2.74 2.75 2.76 2.77 2.78 2.79 2.80 2.81 2.82 2.83 2.84 2.85 2.86 "Evaluation and management of adult hypoglycemic disorders: an Endocrine Society Clinical Practice Guideline". The Journal of Clinical Endocrinology and Metabolism 94 (3): 709–728. March 2009. doi:10.1210/jc.2008-1410. பப்மெட்:19088155. 
 3. 3.000 3.001 3.002 3.003 3.004 3.005 3.006 3.007 3.008 3.009 3.010 3.011 3.012 3.013 3.014 3.015 3.016 3.017 3.018 3.019 3.020 3.021 3.022 3.023 3.024 3.025 3.026 3.027 3.028 3.029 3.030 3.031 3.032 3.033 3.034 3.035 3.036 3.037 3.038 3.039 3.040 3.041 3.042 3.043 3.044 3.045 3.046 3.047 3.048 3.049 3.050 3.051 3.052 3.053 3.054 3.055 3.056 3.057 3.058 3.059 3.060 3.061 3.062 3.063 3.064 3.065 3.066 3.067 3.068 3.069 3.070 3.071 3.072 3.073 3.074 3.075 3.076 3.077 3.078 3.079 3.080 3.081 3.082 3.083 3.084 3.085 3.086 3.087 3.088 3.089 3.090 3.091 3.092 3.093 3.094 3.095 3.096 3.097 3.098 3.099 3.100 3.101 3.102 3.103 3.104 3.105 3.106 3.107 3.108 3.109 3.110 3.111 3.112 3.113 3.114 3.115 3.116 3.117 3.118 3.119 3.120 3.121 3.122 3.123 3.124 3.125 3.126 3.127 3.128 3.129 3.130 3.131 3.132 3.133 3.134 3.135 3.136 3.137 3.138 3.139 3.140 3.141 3.142 Jameson JL, Kasper DL, Longo DL, Fauci AS, Hauser SL, Loscalzo J (2018). Harrison's principles of internal medicine (20th ed.). New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-259-64403-0. இணையக் கணினி நூலக மைய எண் 1029074059. Archived from the original on 29 August 2021. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
 4. 4.0 4.1 4.2 Young VB (2016). Blueprints medicine. William A. Kormos, Davoren A. Chick (6th ed.). Philadelphia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4698-6415-0. இணையக் கணினி நூலக மைய எண் 909025539. Archived from the original on 26 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 American Diabetes Association (ADA). "Hypoglycemia (Low Blood Glucose)". www.diabetes.org. Archived from the original on 13 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
 6. 6.0 6.1 6.2 "Causative anti-diabetic drugs and the underlying clinical factors for hypoglycemia in patients with diabetes". World Journal of Diabetes 6 (1): 30–36. February 2015. doi:10.4239/wjd.v6.i1.30. பப்மெட்:25685276. 
 7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 "Recommendations from the Pediatric Endocrine Society for Evaluation and Management of Persistent Hypoglycemia in Neonates, Infants, and Children" (in English). The Journal of Pediatrics 167 (2): 238–245. August 2015. doi:10.1016/j.jpeds.2015.03.057. பப்மெட்:25957977. https://archive.org/details/sim_journal-of-pediatrics_2015-08_167_2/page/238. 
 8. "FDA approves first treatment for severe hypoglycemia that can be administered without an injection". FDA (in ஆங்கிலம்). 11 September 2019. Archived from the original on 17 May 2020. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 "Collip discovers hypoglycemia". Treating Diabetes. Archived from the original on 8 September 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
 10. 10.00 10.01 10.02 10.03 10.04 10.05 10.06 10.07 10.08 10.09 Vella A. "Hypoglycemia in adults without diabetes mellitus: Clinical manifestations, diagnosis, and causes". www.uptodate.com. Archived from the original on 26 January 2022. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
 11. 11.00 11.01 11.02 11.03 11.04 11.05 11.06 11.07 11.08 11.09 11.10 11.11 11.12 11.13 11.14 11.15 11.16 11.17 11.18 11.19 Mathew P, Thoppil D (2022). "Hypoglycemia". StatPearls. Treasure Island (FL): StatPearls Publishing. PMID 30521262. Archived from the original on 30 August 2021. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
 12. Rix, Iben; Nexøe-Larsen, Christina; Bergmann, Natasha C.; Lund, Asger; Knop, Filip K. (2000), Feingold, Kenneth R.; Anawalt, Bradley; Boyce, Alison; Chrousos, George (eds.), "Glucagon Physiology", Endotext, South Dartmouth (MA): MDText.com, Inc., PMID 25905350, archived from the original on 15 January 2021, பார்க்கப்பட்ட நாள் 26 January 2022
 13. edited by Allen I. Arieff, Robert C. Griggs (1992). Metabolic brain dysfunction in systemic disorders. Boston: Little, Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-316-05067-9. இணையக் கணினி நூலக மைய எண் 24912204. {{cite book}}: |author= has generic name (help)
 14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 Johnson‐Rabbett, Brianna; Seaquist, Elizabeth R. (September 2019). "Hypoglycemia in diabetes: The dark side of diabetes treatment. A patient‐centered review" (in en). Journal of Diabetes 11 (9): 711–718. doi:10.1111/1753-0407.12933. பன்னாட்டுத் தர தொடர் எண்:1753-0393. பப்மெட்:30983138. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/1753-0407.12933. 
 15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 15.6 Ibrahim, Mahmoud; Baker, Jason; Cahn, Avivit; Eckel, Robert H.; El Sayed, Nuha Ali; Fischl, Amy Hess; Gaede, Peter; Leslie, R. David et al. (November 2020). "Hypoglycaemia and its management in primary care setting" (in en). Diabetes/Metabolism Research and Reviews 36 (8): e3332. doi:10.1002/dmrr.3332. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-7552. பப்மெட்:32343474. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/dmrr.3332. 
 16. 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 16.6 16.7 Martín-Timón, Iciar (2015). "Mechanisms of hypoglycemia unawareness and implications in diabetic patients" (in en). World Journal of Diabetes 6 (7): 912–926. doi:10.4239/wjd.v6.i7.912. பன்னாட்டுத் தர தொடர் எண்:1948-9358. பப்மெட்:26185599. பப்மெட் சென்ட்ரல்:4499525. http://www.wjgnet.com/1948-9358/full/v6/i7/912.htm. 
 17. Lucidi, Paola; Porcellati, Francesca; Bolli, Geremia B.; Fanelli, Carmine G. (18 August 2018). "Prevention and Management of Severe Hypoglycemia and Hypoglycemia Unawareness: Incorporating Sensor Technology". Current Diabetes Reports 18 (10): 83. doi:10.1007/s11892-018-1065-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1539-0829. பப்மெட்:30121746. https://pubmed.ncbi.nlm.nih.gov/30121746. 
 18. 18.0 18.1 18.2 18.3 18.4 "Clinical review: Drug-induced hypoglycemia: a systematic review". The Journal of Clinical Endocrinology and Metabolism 94 (3): 741–745. March 2009. doi:10.1210/jc.2008-1416. பப்மெட்:19088166. 
 19. 19.0 19.1 19.2 19.3 Awad DH, Gokarakonda SB, Ilahi M (2022). "Factitious Hypoglycemia". StatPearls. Treasure Island (FL): StatPearls Publishing. PMID 31194450. Archived from the original on 26 January 2022. பார்க்கப்பட்ட நாள் 21 January 2022.
 20. 20.0 20.1 20.2 Jeanmonod R, Asuka E, Jeanmonod D (2022). "Inborn Errors Of Metabolism". StatPearls. Treasure Island (FL): StatPearls Publishing. PMID 29083820. Archived from the original on 13 October 2021. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
 21. 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 "Autoimmune forms of hypoglycemia" (in en-US). Medicine 88 (3): 141–153. May 2009. doi:10.1097/MD.0b013e3181a5b42e. பப்மெட்:19440117. 
 22. "Antibody". Genome.gov (in ஆங்கிலம்). Archived from the original on 9 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
 23. 23.0 23.1 23.2 23.3 "First aid glucose administration routes for symptomatic hypoglycaemia". The Cochrane Database of Systematic Reviews 4: CD013283. April 2019. doi:10.1002/14651858.cd013283.pub2. பப்மெட்:30973639. 
 24. "Severe Low Blood Sugar (Hypoglycemia) Treatment | Lilly GLUCAGON". www.lillyglucagon.com. Archived from the original on 24 January 2022. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
 25. "Glucacon Emergency Kit". Glucagon Emergency Kit (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 24 January 2022. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
 26. 26.0 26.1 26.2 26.3 "An inpatient hypoglycemia committee: development, successful implementation, and impact on patient safety". The Ochsner Journal 13 (3): 407–412. 2013. பப்மெட்:24052773. 
 27. 27.0 27.1 "HIGHLIGHTS OF PRESCRIBING INFORMATION. These highlights do not include all the information needed to use ZEGALOGUE® safely and effectively. See full prescribing information for ZEGALOGUE. ZEGALOGUE (dasiglucagon) injection, for subcutaneous use" (PDF). Accessdate.fsa.gov. Archived (PDF) from the original on 15 May 2021. பார்க்கப்பட்ட நாள் 10 November 2021.
 28. Harrold A. "Diabetic patients should be warned about changes to Lucozade glucose content". Nursing in Practice. Archived from the original on 28 February 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.
 29. Langendam, Miranda; Luijf, Yoeri M; Hooft, Lotty; DeVries, J Hans; Mudde, Aart H; Scholten, Rob JPM (18 January 2012). "Continuous glucose monitoring systems for type 1 diabetes mellitus". Cochrane Database of Systematic Reviews 1 (2): CD008101. doi:10.1002/14651858.cd008101.pub2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1465-1858. பப்மெட்:22258980. பப்மெட் சென்ட்ரல்:6486112. https://doi.org/10.1002/14651858.CD008101.pub2. 
 30. 30.0 30.1 30.2 Azhar, Anam; Gillani, Syed W.; Mohiuddin, Ghasna; Majeed, Rukhsar A. (2020). "A systematic review on clinical implication of continuous glucose monitoring in diabetes management". Journal of Pharmacy & Bioallied Sciences 12 (2): 102–111. doi:10.4103/jpbs.JPBS_7_20. பன்னாட்டுத் தர தொடர் எண்:0976-4879. பப்மெட்:32742108. 
 31. 31.0 31.1 31.2 Mian, Zainab; Hermayer, Kathie L.; Jenkins, Alicia (2019). "Continuous Glucose Monitoring: Review of an Innovation in Diabetes Management" (in en). The American Journal of the Medical Sciences 358 (5): 332–339. doi:10.1016/j.amjms.2019.07.003. பப்மெட்:31402042. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002962919302678. 
 32. 32.0 32.1 "Continuous Glucose Monitoring | NIDDK". National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 January 2022. பார்க்கப்பட்ட நாள் 25 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்