கிரியாட்டினைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரியாட்டினைன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-Amino-1-methyl-5H-imidazol-4-one[சான்று தேவை]
முறையான ஐயூபிஏசி பெயர்
2-Amino-1-methyl-1H-imidazol-4-ol[சான்று தேவை]
வேறு பெயர்கள்
2-Amino-1-methylimidazol-4-ol[சான்று தேவை]
இனங்காட்டிகள்
60-27-5 Y
3DMet B00175
Beilstein Reference
112061
ChEBI CHEBI:16737 N
ChEMBL ChEMBL65567 N
ChemSpider 21640982 Y
EC number 200-466-7
InChI
  • InChI=1S/C4H7N3O/c1-7-2-3(8)6-4(7)5/h2,8H,1H3,(H2,5,6) Y
    Key: BTXYOFGSUFEOLA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H7N3O/c1-7-2-3(8)6-4(7)5/h2H2,1H3,(H2,5,6,8)
    Key: DDRJAANPRJIHGJ-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D03600 Y
ம.பா.த Creatinine
பப்கெம் 26009888
588 minor tautomer
SMILES
  • CN1C=C(O)N=C1N
UNII AYI8EX34EU Y
UN number 1789
பண்புகள்
C
4
N
3
H
7
O
வாய்ப்பாட்டு எடை 113.1179 g mol-1
தோற்றம் White crystals
அடர்த்தி 1.09 g cm-3
மட. P -1.76
காடித்தன்மை எண் (pKa) 12.309
காரத்தன்மை எண் (pKb) 1.688
சமமின்புள்ளி 11.19
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R34, R36/37/38, R20/21/22
S-சொற்றொடர்கள் S26, S36/37/39, S45, S24/25, S36
தீப்பற்றும் வெப்பநிலை 290 °C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

கிரியாட்டினைன் (Creatinine cre·at·i·nine) (சதை எனப்பொருள்படும் கிரேக்க மொழிச் சொல் κρέας இருந்து பெறப்பட்டது) தசைகளில் கிரியாட்டைன் பாசுபேட் உடைக்கப்படும் போது உருவாகும் பொருளாகும். உடலில் தசைநார்களின் திண்மையைப் பொறுத்தும் அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்தும் சீரான வீதத்தில் இது உடலில் உருவாக்கப்படுகிறது. 295 °C வெப்பத்திற்கு மேல் இது உருக்குலையத் துவங்குகிறது.

வேதியியலின்படி கிரியாட்டினைன் கிரியாட்டினின் தானாக உருவான வழிப்பொருளாகும். இதனை சிறுநீரகங்கள் வழியே பிரித்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட கிரியாட்டினைன் மீண்டும் உடலில் உட்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் சிறுநீரகம் செயலிழக்கும்போது வடிகட்டும் திறன் குறைந்து குருதியில் கிரியாட்டினைன் அளவு கூடுகிறது. எனவே ஒருவரது குருதியிலும் சிறுநீரிலும் உள்ள கிரியாட்டினைன் அளவைக் கொண்டு குளோமரூலர் வடிகட்டல் வீதம் (GFR) தொடர்புள்ள கிரியாட்டினைன் பிரிப்பு (CrCl) மதிப்பிடப்படுகிறது.

சிறுநீரகச் செயலிழப்பு தன்மையை அளவிட சிறுநீர்க்குழல் வடிகட்டல் வீதம் (GFR) மருத்துவச்சோதனைகளில் முதன்மையாக விளங்குகிறது. இருப்பினும் சிறுநீரகம் மிகவும் மோசமடைந்த நிலையில் சிறுநீர்க்குழல்களில் சுரக்கும் கிரியாட்டினைனால் கிரியாட்டினைன் பிரிப்பு வீதம் "மிகையாக மதிப்பிட"ப்படக் கூடும். கீடோ அமிலங்கள், சிமேடைடின் மற்றும் டிரைமெதோபிரிம் போன்ற வேதிப்பொருட்கள் இக்குழல்களில் கிரியாட்டினைன் சுரத்தலை குறைப்பதால் இத்தகைய நோயாளிகளுக்கு சரியாக வடிகட்டல் வீதத்தை அளவிட உதவுகிறது.

சிறுநீரகச் செயலிழப்பினை இன்னும் முழுமையாக குருதியில் கிரியாட்டினைனின் அளவும் யூரியாவின் அளவும் உள்ள விகிதத்தைக் கொண்டு மதிப்பிட முடியும். குருதி யூரியா நைத்தரசன்- கிரியாட்டினைன் விகிதம் கொண்டு சிறுநீரகக் கோளாறுகளைத் தவிர அதற்கு வழிகோலும் நிலைமைகளையும் அறிய முடியும். காட்டாக யூரியாவின் அளவு கிரியாட்டினைனதை விடக் கூடுதலாக இருந்தால் சிறுநீரச் செயலிழப்பு நேர்வதற்கு முன்பான நீர்மக் குறைவின் அடையாளமாக் கொள்ளலாம்.

பெண்களைவிட ஆண்களுக்கு உடலியல்படி கூடுதலான தசைத்திண்மை உள்ளதால் குருதியில் கிரியாட்டினைன் அளவு கூடுதலாகக் காணப்படும். சைவ உணவு உட்கொள்வோருக்கு கிரியாட்டினைன் அளவு பொதுவாக குறைந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Delanghe J; De Slypere JP, De Buyzere M, Robbrecht J, Wieme R, Vermeulen A (Aug 1989). "Normal reference values for creatine, creatinine, and carnitine are lower in vegetarians" (PDF). Clin. Chem. 35 (8): 1802–3. பப்மெட்:2758659. http://www.clinchem.org/cgi/reprint/35/8/1802.pdf. பார்த்த நாள்: 2009-03-01. "As shown, measured serum and erythrocyte creatine content, and estimated muscle creatine content, are lower in vegetarians than in the reference population". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியாட்டினைன்&oldid=3752571" இலிருந்து மீள்விக்கப்பட்டது