பேச்சு:ஔவையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கி விளையாட்டு[தொகு]

 • விக்கியில் விளையாட்டுகள் பெருகிவருகின்றன.
 • கட்டுரையில் உள்ள தொகுப்புச் செய்தி மு. அருணாசலம் கருத்து. அதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லலை. மாற்றுக் கருத்து இருப்பின் இன்னார் கருத்து இது. இந்த நூலில் உள்ளது என்று அடிக்குறிப்பு சேர்க்கலாம்.
 • அங்கவை சங்கவை என்னும் பெயர் சங்க நூல்களில் இல்லை. பிற்கால ஔவையார் பாடல்
 • பாரி மகளிர்க்குக் கபிலர் திருமணம் செய்துவைத்தார் என்பது சங்கப்பாடல்கள் தரும் வரலாறு. பாரிமகளிர் என்று சொல்லப்படும் அங்கவை சங்கவைக்கு ஔவையார் திருமணம் செய்துவைத்தார் என்பது பிற்காலக் கதை. பார்க்க.
  • எனவே அடிக்குறிப்பாகச் சேர்ப்பதற்குக்கூட இந்தச் செய்தி தகுதியற்றது.
  • அங்கவை சங்கவை சங்ககாலத்தவர் என மேற்கோள்களுடன் நிறுவித் தனிக் கட்டுரை எழுதலாம்
  • அறிஞர் அருணாசலத்தின் இலக்கிய வரலாற்றுக் காலக் கண்ணோட்டம் பல்லாற்றானும் ஆணித்தரமானது.
  • வரலாற்றுக்கு ஆக்கம் தேடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 22:18, 15 மே 2013 (UTC)

  ஆக்கப்பணி[தொகு]

  • தென்காசியார் இப்போது செய்துள்ளது ஆக்கப்பணி. பாராட்டுவது கடமை. --Sengai Podhuvan (பேச்சு) 22:57, 16 மே 2013 (UTC)

  1[தொகு]

  சங்ககாலத்து ஔவையார் வேறு ஆத்திச்சூடி பாடிய ஔவையார் வேறு. மொத்தம் 3 ஔவையார்கள் இருந்திருக்கிறார்கள். ஆத்திச்சுடி ஔவையார் பிற்காலத்தவர். ஔவையா-1 (கி.பி. 250க்கு முன்னர் வாழ்ந்தவர்), ஔவையார்-2 12-14 ஆம் நூறாண்டுகளில் வாழ்ந்திருக்க வேண்டும். ஔவையார்-3 16 ஆம் நூறாண்டு வாக்கில் வாழ்ந்திருக்க வேண்டும். இப்படியே திருவள்ளுவர் பெயரிலும் மிகப் பிற்காலத்தில் ஓரிருவர் வாழ்ந்துள்ளன்ர், அவற்றுள் சித்தர் என்று கூறும் ஒருவரும் உள்ளனர் (இவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் அல்ல).--C.R.Selvakumar 17:16, 12 ஜூலை 2006 (UTC)செல்வா

  ஒன்றுக்கு மேற்பட்ட ஔவையார் குறித்த தகவல் சுவையானதாகவும் புதிதாகவும் உள்ளது. இதைக் கட்டுரைப் பகுதியில் (இயன்றால ஆதாரங்களுடன்) குறிப்பிட்டால், உங்களுக்குத் தெரியுமா ? பகுதியில் சேர்க்கலாம் --ரவி 12:32, 13 ஜூலை 2006 (UTC)
  ஔவையார் என்ற பெயரில் பல கவிஞர்கள் இருந்துள்ளனர் என்று கேள்விப்பட்டுள்ளேன். இதற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால் கண்டிப்பாக சேர்த்து உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் குறிப்பிடலாம். -- Sundar \பேச்சு 12:40, 13 ஜூலை 2006 (UTC)

  ரவி, சுந்தர், அதியமான் காலத்து (சங்க காலத்து) ஔவையாருடைய மொழிநடை, பொருள் எல்லாம் ஆத்திச்சூடி ஔவையாரில் இருந்து மிக மாறுபட்டது. தற்பொழுது என்னிடம் ஏதும் அராய்ச்சிக் கட்டுரைகள் இல்லை. எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் எங்கோ எழுதியதாக நினைவு. இவரோ வேறு யாரோ, பிற்கால ஔவையார் ஒரு ஆண் என்றும் ஔவையார் என்பது புனைப்பெயர் என்றும் எழுதியுள்ளனர். ஆனால் மொழிநடையை வைத்து யாரும் மிக எளிதாக அதியமான் காலத்து ஔவையாரையும் பிற்கால ஔவயாரையும் அடையாளம் காணலாம். விநாயகர் அகவல் பாடிய ஔவயார் வேறானவர். மேலும் ஏதும் தெரிந்தால் எழுதிகிறேன். --C.R.Selvakumar 02:39, 14 ஜூலை 2006 (UTC)செல்வா

  ஔவையாரைப் பற்றி ஆங்கில வி.பி. கட்டுரையிலிருந்து கிடைத்த ஒரு இணைப்பு... [1]. --மது 16:58, 21 மார்ச் 2007 (UTC)

  ஒவையார் ஒரு புலவரே தவிர சித்தர் அல்ல எனவே சித்தர்கள் என்ற பகுப்பிலிருந்து நீகிவிடலாமே.[பயனர்:sheikfareeth] http://www.infitt.org/pmadurai/pm_etexts/pdf/pm0002.pdf

  This essay contains myths and imagination[தொகு]

  Wiki should provide a histroical or anthropological account of a person. If this person is a myth, then it should be stated clearly.

  இணைப்பில் தவறு[தொகு]

  இரு கட்டுரைகளை இணைக்கும் போது செங்கைப் பொதுவன் எழுதிய கட்டுரைப் பகுதி சேர்க்கவில்லைப் போல் தெரிகிறது. அவரது கட்டுரையை முதன்மைப்படுத்தி இக்கட்டுரையைத் தொடர்வது நல்லது.--Kanags \உரையாடுக 09:18, 31 மே 2012 (UTC)

  ஆம் கனக்ஸ் நான் இணைக்கும்போது ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. சீர்செய்ய உதவமுடியுமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:20, 31 மே 2012 (UTC)

  செங்கைப்பொதுவனின் கட்டுரையை இணைத்துள்ளேன். தவறுக்கு வருந்துகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:43, 31 மே 2012 (UTC)

  தலைப்பு மாற்றம்[தொகு]

  இத்தலைப்பில் முனபு இருந்த கட்டுரை 
  ஔவையார் நினைவோட்டம் என்னும் 
  பொருத்தமான தலைப்பிட்டு 
  அப்படியே மாற்றப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 20:09, 28 சூன் 2012 (UTC)
  

  வேண்டுகோள்[தொகு]

  படங்கள் நினைவோட்டம் காட்டும் கட்டுரையிலேயே இருக்கட்டும்
  ஔவையார் என்னும் இந்தக் கட்டுரையில்
  இணைக்க வேண்டாம் --Sengai Podhuvan (பேச்சு) 20:15, 28 சூன் 2012 (UTC)
  

  கட்டுரைப் பகுதி பேச்சுப் பகுதிக்கு மாற்றம்[தொகு]

  தெளிவில்லாப் பகுதி கருதுகோளுக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.

  மூவரும் ஒருவராகினர்[தொகு]

  ஔவையாரின் வரலாற்றைப் பார்த்தால் மூன்று ஔவைகள் தமிழகத்தில் வேவ்வேறு காலத்தில் 12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தனர் என்பது புலப்படும். இவர்களில் முதலானவர் வள்ளுவர், நக்கீரர் போன்ற புலவர்கள் வாழ்ந்த கடைச்சங்க காலத்திலும், இடையானவர் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் போன்ற பக்தி இலக்கியப் புலவர்கள் காலத்திலும், கடையானவர் கம்பர்,செயங்கொண்டார், புகழேந்தி,ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்ற புலவர்கள் காலத்திலும் வாழ்ந்தனர் என்பர். இம்மூவரும் ஒத்த பெயர் மற்றும் இயல்புகளை உடையவர்களாதலால் பிற்கால மக்களால் ஒருவராக கருதப்பட்டனர் போலும். மேலும் அதியமான் நெடுமான் அஞ்சி கொடுத்த, நீண்டகாலம் வாழ வைக்கும் சிறப்புப் பொருந்திய நெல்லிக்கனியை இவர் உண்டமை, இக்கருத்துக்கு வலுச் சேர்த்திற்று என்பர்.

  இம்மூவரில் ஒருவர் பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் ஏழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையைப் பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். அவ்வெண்பா கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  இட்டமுடன் இன்தலையில் இன்னபடி என்றேழுதி
  விட்டசிவ னும்செத்து விட்டானோ-முட்டமுட்டப்
  பஞ்சமே யானாலும் பாரம் அவனுக் கன்னாய்
  நெஞ்சமே யஞ்சாதே நீ

  பொதுச் சிறப்பியல்புகள்[தொகு]

  இவர் தமிழறிவுடன் பிறந்தவர் என்பர். பெற்றாருண்டி மறந்தவர். பாணரகத்தில் வளர்ந்தவர். சிவபரத்துவந் தெளிந்தவர். வரகவித்துவம் அமைந்தவர். இலௌகிகம், வைதிகம் இரண்டுந் தெரிந்தவர். உள்ளம், உண்மை, மொழி எனும் மூன்றும் சிறந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறிந்தவர். தமிழ்நாடெங்குந் திரிந்தவர். கோவலூரிலும் புல்வேளுரிலும் பலநாள் இருந்தவர். பலர்மீதுங் கவிபாடிப் பரிசு பெற்றவர். பரிசு கொடுத்தவர் சிறியராயினும், வறியராயினும் அவரைப் பெரியராக மதித்துப் பாடினவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பராமுகஞ் செய்தாரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடினவர். மேல் கூறிய சிறப்பியல்புகள் மூன்று ஔவைகளிலும் பொதுவாக இருந்ததாகக் கூறுவர். [1].

  முதலாம் ஔவையார்[தொகு]

  சேரசோழபாண்டியர், மழவர் கோமான் அதியமான் நெடுமான் அஞ்சி, முல்லைக்குத் தேரீந்த பாரி வள்ளல், காஞ்சித் தொண்டைமான். மலையமான் திருமுடிக்காரி, நாஞ்சில் கோமான் வள்ளுவன் போன்ற தமிழகத்தை ஆண்ட கடைச் சங்க கால மன்னர்களை ஔவையார் தமிழால் ஆண்டார் என்றால் மிகையாகாது. இவரின் நண்பனும் பெரும் வீரனுமாகிய தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி மீது படையெடுக்கும் பொருட்டு,சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் மாநாடு கூட்டித் திட்டங்கள் வகுத்த போது, அங்கு வந்த ஔவையார் கூடியிருந்த மன்னர்களுக்குப் பின்வரும் பாடல் மூலமாக, அறமற்ற இப்படையெடுப்பால் அழிவு அதியமானுக்கு அல்ல, கூடியிருக்கும் மன்னர்களுக்குத்தான் என்பதை கூறி படையெடுப்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, கூடியிருந்த மன்னர்களும் இவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இதற்கு இசைந்தனர். அப்பாடலைக் கீழே காட்டுதும்:-[2]

  'புறநானூறு 87'
  திணை: தும்பை
  துறை: தானைமறம்


  களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர்எதிர்ந்து
  எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
  எண்தேர் செய்யும் தச்சன்
  திங்கள் வலித்த கால்அன் னோனே.

  இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

  இரண்டாம் ஔவையார்[தொகு]

  இவர் பிள்ளையாரிடமும் மற்றும் முருகனிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தார், மேலும் அவர்களிடம் பேசும் பெரும் பேறு உடையவராகயிருந்தார். இவர் காட்டு வழி செல்லும் போது இளைப்பாறும் பொருட்டு ஒரு நாவல் மரம் கீழ் அமர்ந்தார். அம்மரத்தே ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு, உண்ண கனிகள் சில கேட்டார். அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவினான். இவ்வினாவினால் குழப்பம் அடைந்த இவர் பழமும் சுடுமா? என்று எண்ணி, சுட்ட பழம் தருமாறு வேண்டினார். அச்சிறுவனும் நாவல் மரக் கிளையை உலுக்க சில பழங்கள் உதிர்ந்து தரையில் விழுந்தன, இவற்றைப் பொறுக்கி அவற்றில் உள்ள மண் போகும் வண்ணம் ஊதினார் ஔவையார். இதைப் பார்த்த சிறுவன் இவரிடம்,

  பழம் சுடுகிறதா நன்கு ஊதி உண்

  எனக் கூறி நகைத்தான். குறும்புத்தனமான மதி நுட்பத்தைக் கண்ட இவர் உன்னிடம் நான் தோற்றேன் என வருந்திப் பின்வரும் செய்யுளைப் பாடினார்.

  கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
  இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில்
  காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
  ஈரிரவும் துஞ்சாதென் கண்

  இதன்பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினாவி, செய்யுள்களில் விடையும் பெற்று மகிழ்ந்தான் என்பர். சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் முறையே கரியிலும் பரியிலுமேறி கயிலைக்குச் செல்வதை அறிந்த இவர் தாமும் அவர்களுடன் அங்கு செல்ல விரும்பி தாம் பிள்ளையாருக்கு வழக்கமாக செய்யும் பூசையை அவசரமாகச் செய்ய, இவர் எண்ணம் அறிந்த பிள்ளையார், அவசரம் வேண்டாம் நான் உன்னைக் கயிலைக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறினார். இதனால் மகிழ்ந்த இவர், பிள்ளையார் மீது விநாயகர் அகவல் பாடினார். பிள்ளையாரும் கூறியவாறு இவரை தும்பிக்கையால் தூக்கிக் கயிலையில் வைத்தார் என்பர். அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ, பின்வரும் செய்யுளில் பிள்ளையாரின் அருளால் இங்கு வந்தேன் என்று விடையளித்தார்.

  மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை
  முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போல்முழங்கி
  அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்
  குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

  இவர், சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் வாழ்ந்ததாகக் கருதப்படும் 8ஆம் மற்றும் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறுவர்.

  மூன்றாம் ஔவையார்[தொகு]

  இவ் ஔவையார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவையில் புலவமணிகளாக திகழ்ந்த கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோர் காலத்தில் வாழ்ந்தவர் என்பர். இவர் வாழ்நாளில் சுவையான நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. அவற்றுள் இரண்டை கீழே கூறுதும். மேல் கூறிய புலவர்கள் கூடியிருந்த சோழனின் அவைக்கு எளிமையை விரும்பும் இவர் வந்தபோது, அங்கு மிகுந்த ஆடம்பரத்தோடும், அளவற்ற செருக்குடனும் கம்பர் இருப்பதைக் கண்டு சினம் கொண்டு, ஆடம்பரமும் தற்பெருமையும் இகழ்ச்சிக்குரியன என்று முறையே கூறும் இரு பின்வரும் அரிய செய்யுள்களைப் பாடி, அவையோருடன் வாதம் செய்தார் என்பர்.

  விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
  விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்- அரையதனில்
  பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
  நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

  வான்குருவி யின்கூடு வல்லார்க்குத் தொல்கறையான்
  தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
  வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
  எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

  நீண்ட தூரம் நடந்த களைப்பால்,ஒரு தாசி வீட்டுத்திண்ணையில் இளைப்பாறும் பொருட்டு இருந்த இவருக்கு அத்தாசியும் கூழ் கொடுத்து உபசரித்தாள். பின்னர் அவ்வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் எழு சீர்கள் மட்டுமே எழுதியிருக்க கண்டு, அத்தாசியிடம் அதுபற்றி வினாவ, கம்பர் 500 பொன்னுக்கு அரை வெண்பா தான் பாடுவராம், மேலும் 500 பொன் வேண்டுமாம் மிகுதியைப் பாட எனக் கூறி அழுதாள் சிலம்பி என்னும் அத்தாசி. ஔவையாரும் உள்ளம் இரங்கி மிகுதியைத் தான் பாடிச் சென்றார் என்பர். அவ்வெண்பாவைக் கீழே காட்டுதும்:-

  தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே
  மண்ணாவதுங் சோழ மண்டலமே- பெண்ணாவாள்
  அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
  செம்பொற் சிலம்பே சிலம்பு.

  இதையறிந்த கம்பர் பின்வருமாறு ஔவையை இகழ்ந்தார் என்பர்.

  கூழுக்குப் பாடி குடி கெடுத்தாள் பாவி

  இவ் ஔவையும் பல தனி நிலைச் செய்யுள்களையும் பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூலைகளையும் பாடியுள்ளார். பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூல்களில் பெரும்பாகம் காலத்தால் அழிந்துவிட்டது. மேலும் இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர்.


  முந்தியவர்[தொகு]

  இவர்களில் முந்தியவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது போன்ற நூல்களைச் சிறுவர்களுக்கு இயற்றி, தமிழ்ச் சிறுவர்கள் நெஞ்சில் ஔவைப் பாட்டியாக நிலைத்து இருப்பவர். முற்கால ஔவைகள் வாழ்க்கையில் கடைப்பிடித்த எளிமையை, இவர் தமிழ் உரைநடையில் கடைப்பிடித்து, சிறுவர்களின் நினைவில் இலகுவில் பதியும் வண்ணம், தமிழ் அறத்தை வலியுறுத்தும் செய்யுள்களை வடித்தவராவார். அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் போன்ற நூல்களை இயற்றியவரும் இவரே என்றும் சிலர் கூறுவர்.[3].

  கல்யாணம் ஆகாம இருக்குற ஒருத்தங்களா[தொகு]

  எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

  கல்யாணம் ஆகாம இருக்குற ஒருத்தங்களா செல்வி-னு தமிழ்ல கூப்பிடுவாங்க ?. சரியா ? அது சரினா, அவங்கள அம்மானு கூப்பிடுவாங்களா?

  அவ்வையார் வயசானவங்க.. அவங்களுக்கு கல்யாணம் ஆகல (நிணைக்கறேன்). அவங்கள செல்வி அல்லது அம்மானு சொல்றது இல்ல...

  சரியான தமிழ் பெயர் என்ன ?

  கன்னி,முதிர்கன்னி என்ற வழக்காறு உள்ளதாக அறிய நேர்ந்தது. அறுபது வயதை கடந்தவருக்கும் அதே பெயர் தானா ? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:28, 29 நவம்பர் 2013 (UTC)

  தினேஷ்குமார் கருத்துக்கள் அனைத்தும் சரி. அவை இக்காலத் தமிழ். சங்ககாலத் தமிழில் ஔவை என்னும் பெயர் அறிவில் முதிர்ந்த பெண்மணியைக் குறிக்கும்.
  • ஒரு வேண்டுகோள் கொச்சைத் தமிழ் விக்கிக்கு வேண்டாம். --Sengai Podhuvan (பேச்சு) 21:26, 29 நவம்பர் 2013 (UTC)
   • விளக்கத்திற்கு நன்றி பொதுவன் ஐயா. முகநூலில் இருந்து அப்படியே நகலெடுத்ததால், கொச்சைத் தமிழ் வந்துவிட்டது :( --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:40, 10 திசம்பர் 2013 (UTC)

  அடிக்குறிப்பு[தொகு]

  1. குமாரசுவாமிப்புலவர், தமிழ் புலவர் சரித்திரம், 1914. பக். 62
  2. தமிழ்நாடு வரலாற்றுக் குழு-தமிழ்நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்' , 1990. பக்.
  3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்., தொகுதி 1, 1984. பக்.

  பக்க வழி நெறிபடுத்ததுதலா அல்லது கட்டுரையா[தொகு]

  இக்கட்டுரையின் இறுதியில் பக்க வழி நெறிபடுத்துதல் வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையில் விரிவான ஔவையார் பற்றிய தகவல்கள் உள்ளன. பக்க வழி நெறிப்படுத்தல் என்றால் பேச்சுப் பக்கத்தில் இடப்படும் வார்ப்புருவை இணைக்கலாம். இல்லை கட்டுரை என்றால், இதன் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள பக்க வழி நெறிப்படுத்துதல் வார்ப்புருவை நீக்கிவிடலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:05, 3 ஏப்ரல் 2015 (UTC)

  • பக்கவழி நெறிப்படுத்துதல், கட்டுரை இரண்டும் ஒருங்கிணைந்த கட்டுரை இது. இப்படி அமைந்திருப்பது கட்டுரைச் செய்தியைத் தெளிவாக்கிக்கொள்ள உதவம். எனவே குறியீடும் இருப்பது இன்றியமையாத்து. --Sengai Podhuvan (பேச்சு) 01:54, 10 ஏப்ரல் 2015 (UTC)

  மீட்கப்பட்டுள்ளது[தொகு]

  மாற்றம் சரியாக அமையவில்லை. சிறப்பாக அமையுமேல் பாராட்டலாம். --Sengai Podhuvan (பேச்சு) 11:12, 20 ஆகத்து 2017 (UTC)

  காலம்[தொகு]

  • mergefrom|ஔவையார் (சங்ககாலப் புலவர்) - நீக்கப்பட்டுள்ளது
  • காலம் கருதுக
  • கட்டுரையின் விரிவு கருதுக
  • சிறப்பினைக் கருதுக --Sengai Podhuvan (பேச்சு) 12:28, 2 செப்டம்பர் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஔவையார்&oldid=2572079" இருந்து மீள்விக்கப்பட்டது