மூதுரை
Appearance
மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம் ”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 31 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.