கடவுள் வாழ்த்து
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கடவுள் வாழ்த்துப் பாடலோடு நூலைத் தொடங்கும் மரபு ஒன்று தமிழிலக்கிய வரலாற்றில் இருந்து வருகிறது. தொல்காப்பியத்தில் இந்த மரபு இல்லை. பத்துப்பாட்டு தொகுப்புக்குத் திருமுருகாற்றுப்படையைக் கடவுள் வாழ்த்துப்போல முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர். திருக்குறள், நாலடியார் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடல்கள் நூலாசிரியரின், அல்லது நூல் தொகுப்பாளரின் சமய உணர்வைப் புலப்படுத்துகின்றன.