பூஜா பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூஜா பட்
தாய்மொழியில் பெயர்पूजा भट्ट
பிறப்பு24 பெப்ரவரி 1972 (1972-02-24) (அகவை 49)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை, இயக்குநர், தயாரிப்பாளர்
பெற்றோர்மகேசு பட்
கிரன் பட்
வாழ்க்கைத்
துணை
மணிஷ் மஹிஜா (2003–2014) (பிரிவு)
உறவினர்கள்ராகுல் பட் (சகோதரர்) சஹீன் மற்றும் அலீயா பட் (ஒருவழிச்சகோதரிகள்) . இம்ரான் ஹாஷ்மி மற்றும் ஹிராத் பட் (உறவுமுறைப் பங்காளிகள் ).

பூஜா பட் (Pooja Bhatt (பிறப்பு 24 பெப்ரவரி , 1972) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை பின்னணி குரல் கலைஞர், வடிவழகி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.[2] இவர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மகேசு பட்டின் மூத்த மகள் ஆவார்.[3] 1997 ஆம் ஆண்டில் தமன்னா திரைப்படத்தில் நடித்தற்காக இந்தியத் தேசியத் திரைப்பட விருது பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பூஜா பட் பெப்ரவரி 24, 1972 ஆம் ஆண்டில் மும்பை, மகாராட்டிரம், இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை மகேசு பட் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆவார். இவர் குஜராத்தி மரபைச் சேர்ந்தவர். தாய் கிரண் பட் இசுக்கொட்லாந்து, ஆர்மீனியா, மியான்மர் மரபைச் சேர்ந்தவர் ஆவார்.[4][5][6][7] கிரண் பட், சோனி ரஸ்தானின் மாற்றாந்தாயின் மகள் ஆவார். பூஜா பட்டிற்கு ராகுல் பட் எனும் சகோதரரும் சஹீன் மற்றும் அலீயா பட் எனும் ஒருவழிச் சகோதரிகளும் உள்ளனர். இம்ரான் ஹாஷ்மி மற்றும் ஹிராத் பட் எனும் உறவுமுறைப் பங்காளிகள் உள்ளனர்.

தொழில் வாழ்க்கை[தொகு]

பூஜா பட் தனது 17 ஆம் வயது முதல் நடித்து வருகிறார். இவரின் முதல் நாடகத் திரைப்படம் 1989 ஆம் ஆண்டு ஒளிபரப்பான டாடி ஆகும். இதனை இயக்கியது இவரின் தந்தை மகேசு பட் ஆகும். இதில் அவர் அனுபம் கெர் உடன் இணைந்து நடித்திருப்பார்.

இவரின் முதல் திரைப்படம் 1991 ஆம் ஆண்டில் வெளியான தில் ஹை கே மந்தா நஹின் ஆகும். இந்தத் திரைப்படம், 1934 ஆம் ஆண்டில் வெளியாகி அகாதமி விருது வென்ற ஹாலிவுட் திரைப்படமான இட் ஹேப்பன்ட் ஒன் நைட் திரைப்படத்தின் தழுவல் ஆகும். ஸ்டார் டஸ்ட் உள்ளிட்ட சில தைரியமான கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

1991 இல் வெளியான சதக் திரைப்படத்தில்சஞ்சய் தத்துடன் இணைந்து நடித்தார். அதே ஆண்டில் ராகுல் ராயுடன் இணைந்து ஜுனான் திரைப்படத்தில் நடித்தார். மேலும் ஆமிர் கானுடன் இணைந்து தில்ஹை கி மந்தா நஹின் , 1993 இல் சார்,பிர் டெரி கஹானி யாட் ஆயே மற்றும் டதிபார் 1994 இல் குனேஹர், நாராஸ், ரிசி கபூருடன் இணைந்து ஹும் தோனோ , சன்னி தியோலுடன் அங்ரஷக், 1996 இல் சாருக் கானுடன் இணைந்து சஹத், 1997 இல் தமன்னா, 1998 இல் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்த சாஹம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

இவரின் கடைசித் திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளியான எவ்ரிபடி சேய்ஸ் ஐ யேம் ஃபைன் (அனைவரும் கூருகிறார்கள் நான் நலமாக உள்ளதாக) .அதன் பின்பு தயாரிப்பாளர், இயக்குநர் ஆகிய பணிகளில் கவனம் செலுத்தினார். இவர் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வெளியான பாப் ஆகும். இதில் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் உதிதா கோஸ்வாமி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இதன் பிறகு 2006 இல் ஹாலிடே, 2007 இல் தோஹா, 2010 இல் கஜ்ராரே, 2012 இல் ஜிசம் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

சான்றுகள்[தொகு]

  1. AP/AFP/PTI/Agencies/Twitter/Movie stills. "Birthday Exclusive: Pooja Bhatt". Deccan Chronicle. பார்த்த நாள் 2016-08-09.
  2. "Pooja Bhatt photos: 50 best looking, hot and beautiful HQ and HD photos of Pooja Bhatt".
  3. Pooja Bhatt Bollywood Actress Biography
  4. Bollywood Trade News Network (July 2007). "Tulip's one exciting girl to watch for!". பார்த்த நாள் 27 July 2014.
  5. "Pooja Bhatt auctions role for women's cause" (23 May 2013). பார்த்த நாள் 27 July 2014.
  6. "My mother is Scottish,Burmese,Armenian,English. My father is half Brahmin,half Muslim & Soni is Half Kashmiri & half German." (21 November 2013). பார்த்த நாள் 27 July 2014.
  7. "Did you know my maternal great-grandmother was Burmese? I now have the chance to celebrate my roots. Come join me!" (13 August 2013). பார்த்த நாள் 27 July 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பூஜா பட்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_பட்&oldid=3180906" இருந்து மீள்விக்கப்பட்டது