மகேசு பட்
மகேசு பட் | |
---|---|
![]() 2011 இல் மகேசு பட் | |
தாய்மொழியில் பெயர் | મહેશ ભટ્ટ |
பிறப்பு | 20 செப்டம்பர் 1948[1] மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர் |
பெற்றோர் | நானாபாய் பட் ஷிரின் முகமது அலி |
பிள்ளைகள் | பூஜா பட் (பி. 1972) இராகுல் பட் (பி. 1982) ஷாகீன் பட் (பி. 1988) அலீயா பட் (பி. 1993) |
மகேஷ் பட் (Mahesh Bhatt பிறப்பு 1948, செப்டம்பர் 20);[2] இந்திய பிரபல இந்தித், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமாவார். இவர் தேசிய திரைப்பட விருது, ‘சிறப்பு நடுவர் குழு’ விருது (Special jury), நர்கிசு தத் விருது (Nargis Dutt Award), மற்றும் பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மகேசு பட், ஐக்கிய அமெரிக்காவின் ‘டீச் எய்ட்ஸ்’ (TeachAIDS) என்ற தன்னார்வ அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.[3]
வாழ்க்கை குறிப்பு[தொகு]
பிறப்பு[தொகு]
1948, செப்டம்பர் 20இல் மும்பையில் பிறந்த மகேஷ், சிறுவயதிலேயே அவரது பெற்றோர்கள் பிரிந்ததின் காரணமாக தனது அம்மாவான 'ஷிரின் முகமது அலி' (Shirin Mohammad Ali) அரவணைப்பில் வளர்க்கப் பட்டார் (அவரது தந்தை 'நானாபாய் பட்' (Nanabhai Bhatt, 1915 யூன் 12 - 1999 ஏப்ரல் 23), ஒரு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்).[4] மகேஷ் பட்டின் தந்தை ஒரு இந்து சமயத்தைச் சார்ந்த குசராத்தி பிராமணராகவும், மற்றும் அவரது தாயார் 'தாவூதி போரா' பின்னணியில் உருவான குசராத்தி இசுலாமிய சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.[5]
இயக்குனர்[தொகு]
மகேஷ் பட் அவரது குடும்ப நண்பர் ஒருவரின் உதவி யால் ராஜ் கோஸ்லா (Raj Khosla) என்பவரிடம் துணை இயக்குநராக சேர்ந்தவர், தனது 21ஆவது வயதிலேயே இயக்குநராக அறிமுகமானார். 1984இல் இவர் தயாரித்த ‘ஸாரான்ஷ்’ திரைப்படம் 14ஆவது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், 1986இல் வெளிவந்த ‘நாம்’ திரைப்படம் இவரது முதல் வர்த்தகத் திரைப்படமாக கருதப்பட்டது.[6]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ Sawhney, Anubha (18 ஜனவரி 2003). "The Saraansh of Mahesh Bhatt's life". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/delhi-times/The-Saraansh-of-Mahesh-Bhatts-life/articleshow/34774326.cms. பார்த்த நாள்: 17 பிப்பிரவரி, 2012.
- ↑ "Mahesh Bhatt". www.filmibeat.com (ஆங்கிலம்). (c) 2014 -2015. 2016-10-03 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "The Info List - Mahesh Bhatt". www.theinfolist.com (ஆங்கிலம்) - 2016. 2016-10-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Nanabhai Bhatt (1915–1999)". www.imdb.com (ஆங்கிலம்) - 1990-2016. 2016-10-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mahesh Bhatt24indianews9". 24indianews.com (ஆங்கிலம்) - AD4 PUBLISH. 2016-10-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mahesh Bhatt". www.moviebuff.com (ஆங்கிலம்) - 25 Jul 2014. 2016-10-07 அன்று பார்க்கப்பட்டது.