பீ. எம். புன்னியாமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீ. எம். புன்னியாமீன்
பன்முக எழுத்தாளர் பீ. எம். புன்னியாமீன்
பிறப்புபுன்னியாமீன்
(1960-11-11)நவம்பர் 11, 1960
உடதலவின்ன, இலங்கை
இறப்புமார்ச்சு 10, 2016(2016-03-10) (அகவை 55)
கண்டி, இலங்கை
இருப்பிடம்இலங்கை
பணிசுதந்திர ஊடகவியலாளர், பதிப்பாசிரியர்
சமயம்இசுலாம்
வாழ்க்கைத்
துணை
மஸீதா புன்னியாமீன்
பிள்ளைகள்சஜீர் அஹமட், பாத்திமா சம்ஹா

பீ. எம். புன்னியாமீன் (நவம்பர் 11, 1960 - 10 மார்ச் 2016) இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர், ஊடகவியலாளர் எனப் பல கோணங்களில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள உடதலவின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பீர் முகம்மது புன்னியாமீன். இவர் சைதா, உம்மா தம்பதியினரின் புதல்வர். இவர், கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினைப் பெற்றார்.

மாணவப் பருவத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 சூலை 2ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து 162 சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதினார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம், தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும், ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின.

தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார்.

வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டு முழுநேர ஊடகவியலாளராகவும், தமிழ் இலக்கிய ஆய்வாளராகவும் செயலாற்றினார். 170 நூல்களை தமிழ்மொழி மூலம் எழுதி வெளியிட்டார்.

பதிவுகள்[தொகு]

'இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு’ எனும் தலைப்பில் இவரது 15 தொகுதிகளிலும் இலங்கையைச் சேர்ந்த 350 ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரங்களும், புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த 44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் பதிவாக்கப்பட்டது.

இவரால் எழுதப்பட்ட முதல் 110 நூல்களும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ந. செல்வராஜாவினால் தொகுத்து வெளியிடப்பட்டுவரும் ஈழத்துத் தமிழ் நூல்களின் பன்னாட்டு ஆவணக் களஞ்சியமான நூல் தேட்டத்தில் பதிவாக்கப்பட்டுள்ளன.

இணையத்தளங்களின் ஊடான பங்களிப்பு[தொகு]

இவரின் 340க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், அறிவியல், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக பன்னாட்டு நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவர் எழுதினார்.

சிந்தனைவட்டம்[தொகு]

1987 நவம்பர் 11 இல் இவரால் உருவாக்கப்பட்ட வெளியீட்டு அமைப்பான “சிந்தனைவட்டம்” மூலம் 1988 முதல் 2010 நவம்பர் 11 வரை 330 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் மூலமாக நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் புகழ்பெற்று விளங்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் இனங்கண்டு விருது வழங்கி கௌரவித்து வந்தார்.

பத்திரிகையாளராக[தொகு]

புன்னியாமீன் 1979ஆம் ஆண்டு ‘விடிவு’ எனும் இலக்கிய சஞ்சிகையையும், 1980களில் ‘அல்ஹிலால்’ எனும் பத்திரிகையையும் ஆசிரியராகவிருந்து நடத்தியவர். இலங்கையில் தேசிய பத்திரிகைகள் பலவற்றில் நிருபராக பணியாற்றினார். ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’, ‘லண்டன் குரல்’ ஆகிய பத்திரிகைகளிலும், ‘தேசம்’ சஞ்சிகையினதும், ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றினதும் இலங்கைச் செய்தியாளராகப் பணியாற்றினார்.

இவரது பல இலக்கியப் பேட்டிகள் இலங்கையில் ‘ஐ’ தொலைக்காட்சி, பிரித்தானியாவில் ‘தீபம்’ தொலைக்காட்சி, பிரித்தானியாவின் பன்னாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘(ஐ.பி.சி.) வானொலி’, ‘இலண்டன் தமிழ் வானொலி’, ஜெர்மனியில் ‘ஐரோப்பியத் தமிழ் வானொலி’, Swiss Government FM Radio "Jeevan for U" தமிழ் வானொலி’ ஆகியவற்றில் நேரடி ஒளி / ஒலிபரப்பாக இடம்பெற்றன.

சிறப்புகள்[தொகு]

இவரது பன்முகத்தன்மைகொண்ட இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர்- டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. இலங்கையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான மல்லிகை 2005 மார்ச்சு இதழிலும், மற்றொரு இலக்கிய சஞ்சிகையான ஞானம் சஞ்சிகை தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தன. கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும், கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘செங்கதிர்’ இலக்கிய சஞ்சிகையின் [2009]ஆகஸ்ட் இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கி வெளிவந்தன.

எழுதிய நூல்கள்[தொகு]

சிறுகதை நூல்கள்[தொகு]

 • தேவைகள் - 1ம் பதிப்பு: 11.11.1979
 • நிழலின் அருமை - 1ம் பதிப்பு: மார்ச் 1986
 • கரு - 1ம் பதிப்பு: பெப்ரவரி 1990
 • நெருடல்கள் - 1ம் பதிப்பு: பெப்ரவரி 1990
 • அந்தநிலை - 1ம் பதிப்பு: ஜனவரி 1990
 • யாரோ எவரோ எம்மை ஆள - 1ம் பதிப்பு: ஜுலை 1996
 • இனி இதற்குப் பிறகு - ஜுலை 2003: 1ம் பதிப்பு

2010இல் சப்ரகமுவ பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிறப்புக்கற்கை மாணவி எம்.ஐ.எப். நபீலா என்பவர் இவரின் சிறுகதைகளை ஆய்வுக்குட்படுத்தினார்.

புதினங்கள்[தொகு]

 • அடிவானத்து ஒளிர்வுகள் - 1ஆம் பதிப்பு: அக்டோபர் 1987, 2ம் பதிப்பு: ஜுலை 2003

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

 • புதிய மொட்டுக்கள் - 1ம் பதிப்பு: பெப்ரவரி 1990
 • அரும்புகள் - 1ம் பதிப்பு: நவம்பர் 1990
 • பாலங்கள் - 1ம் பதிப்பு: நவம்பர் 1996

அரசியல் ஆய்வு நூல்கள்[தொகு]

 • இலங்கையின் தேர்தல்கள் (அன்றும், இன்றும்)- 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1994
 • 94 பொதுத் தேர்தலும் சிறுபான்மையினங்களும்- 1ம் பதிப்பு: நவம்பர் 1994, 2ம் பதிப்பு: ஜனவரி 1995
 • 94 ஜனாபதித் தேர்தலும் சிறுபான்மையினங்களும் - 1ம் பதிப்பு: நவம்பர் 1994, 2ம் பதிப்பு: ஜனவரி 1995
 • 21ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தலைமைத்துவம் - 1ம் பதிப்பு: 2000 ஜனவரி
 • 2000 பாராளுமன்றத் தேர்தலும் சிறுபான்மை சமூகத்தினரும் - 1ம் பதிப்பு: நவம்பர் 2000
 • 2002 ஜனவரியில் ‘சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம் - 1ம் பதிப்பு: 2002 ஜனவரி
 • 2002 ஜுனில் ‘மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சுப் பதவிக்கு சாவுமணி - 1ம் பதிப்பு: சூன் 2000

அரசறிவியல் நூல்கள்[தொகு]

 • அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 01). - 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1990
 • அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 02). - 1ம் பதிப்பு: செப்டம்பர் 1990
 • அரசறிவியல் கோட்பாடுகள். - 1ம் பதிப்பு: நவம்பர் 1992
 • இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகழ்வுகள் 1995. - 1ம் பதிப்பு: மே 1995
 • பிரித்தானியாவின் அரசியல் முறை. - 1ம் பதிப்பு: ஜனவரி 1988, 7ம் பதிப்பு: பெப்ரவரி 1997
 • அரசிறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும். (Political Science Supplimentary Series – 01) - 1ம் பதிப்பு: ஜனவரி 1992, 7ம் பதிப்பு: பெப்ரவரி 1997
 • இலங்கையில் அரசியல் திட்ட வளர்ச்சி. (Political Science Supplimentary Series – 02) - 1ம் பதிப்பு: மே 1993, 7ம் பதிப்பு ஜனவரி 1998
 • தெரிவு செய்யப்பட்ட நாடுகள்(Political Science Supplimentary Series – 03). - 1ம் பதிப்பு: ஜனவரி 1993, 6ம் பதிப்பு: ஒக்டோபர் 1997
 • உள்ளுராட்சி முறையும், கட்சி முறையும், வெளிநாட்டுக் கொள்கைகளும் (Political Science Supplimentary Series – 04). - 1ம் பதிப்பு: ஜனவரி 1991, 6ம் பதிப்பு பெப்ரவரி 1997
 • பல்தேர்வு மாதிரி வினா, விடைத் தொகுதி 01. - 1ம் பதிப்பு: நவம்பர் 1997
 • பரீட்சை மாதிரி வினா, விடை. - 1ம் பதிப்பு: பெப்ரவரி 1998
 • B.A.. அரசறிவியல் (பொதுக் கலைத் தேர்வு) - 1ம் பதிப்பு: ஜனவரி 1999
 • G.A.Q.. அரசறிவியல் (முதல் கலைத் தேர்வு) - 1ம் பதிப்பு ஜனவரி 1999
 • அரசறிவியல். - 1ம் பதிப்பு: நவம்பர் 2003

இலக்கிய மற்றும் இலக்கிய திறனாய்வு நூல்கள்[தொகு]

 • இலக்கிய விருந்து - 1ம் பதிப்பு: ஏப்ரல் 1987
 • இலக்கிய உலா - 1ம் பதிப்பு: மே 1987
 • நூல்தேட்டம் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெரு நதி – 1ம் பதிப்பு: பெப்ரவரி 2007
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 01- 1ம் பதிப்பு ஆகஸ்ட் 2004. ISBN 955-8913-14-6
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 02- 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 2004. ISBN 955-8913-16-2
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 03- 1ம் பதிப்பு: செப்டம்பர் 2005. ISBN 955-8913-20-2 பிழையான ISBN
 • மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கௌரவிப்பு விழா – 1ம் பதிப்பு: டிசம்பர் 1999
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 04- 1ம் பதிப்பு: நவம்பர் 2006. ISBN 955-8913-55-3
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 05- 1ம் பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 955-8913-63-4
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 06- 1ம் பதிப்பு: ஜனவரி 2007. ISBN 955-8913-64-2
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 07- 1ம் பதிப்பு: பெப்ரவரி 2007. ISBN 955-8913-65-0
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 08- 1ம் பதிப்பு: செப்டம்பர் 2007. ISBN 955-8913-66-6 பிழையான ISBN
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 09- 1ம் பதிப்பு: நவம்பர் 2007. ISBN 955-8913-67-3 பிழையான ISBN
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 10- 1ம் பதிப்பு: பெப்ரவரி 2008. ISBN 978-955-1779-11-5
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 11- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01- 1ம் பதிப்பு: சூன் 2008. ISBN 978-955-1779-12-2
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 12- இவர்கள் நம்மவர்கள் பாகம் 02- 1ம் பதிப்பு: சூன் 2008. ISBN 978-955-1779-13-9
 • மறைந்தும் மறையாத நவமணி அஸ்ஹர் - 1ம் பதிப்பு: ஒக்டோபர் 2008. ISBN 978-955-1779-19-1
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 13- இவர்கள் நம்மவர்கள் பாகம் 03- 1ம் பதிப்பு: நவம்பர் 2008. ISBN 978-955-1779-15-3
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 14- இவர்கள் நம்மவர்கள் பாகம் 04- 1ம் பதிப்பு: நவம்பர் 2008. ISBN 978-955-1779-16-0
 • இலங்கை முஸ்லிம், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு – தொகுதி 15- இவர்கள் நம்மவர்கள் பாகம் 05- 1ம் பதிப்பு: நவம்பர் 2009. ISBN 978-955-1779-17-7

பொது அறிவு நூல்கள்[தொகு]

 • பொது அறிவுச்சரம் (தொகுதி 01) - 1ம் பதிப்பு: செப்டம்பர் 2006, ISBN 955-8913-50-2
 • பொது அறிவுச்சரம் (தொகுதி 02) - 1ம் பதிப்பு: செப்டம்பர் 2006, ISBN 955-8913-51-0
 • பொது அறிவுச்சரம் (தொகுதி 03) - 1ம் பதிப்பு: செப்டம்பர் 2006, ISBN 955-8913-52-9
 • பொது அறிவுச்சரம் (தொகுதி 04) - 1ம் பதிப்பு: ஒக்டோபர் 2006, ISBN 955-8913-53-7
 • பொது அறிவுச்சரம் (தொகுதி 05) - 1ம் பதிப்பு: ஒக்டோபர் 2006, ISBN 955-8913-56-1
 • பொது அறிவுச்சரம் (தொகுதி 06) - 1ம் பதிப்பு: ஒக்டோபர் 2006, ISBN 955-8913-56-X பிழையான ISBN
 • பொது அறிவு நிகழ்காலத் தகவல்கள் (தொகுதி 01) - 1ம் பதிப்பு: ஒக்டோபர் 2006, 1SBN 955-8913-58-8
 • சர்வதேச நினைவு தினங்கள் (பாகம் 01) - 1ம் பதிப்பு: ஜுலை 2010, ISBN 978-955-1779-43-6
 • சர்வதேச நினைவு தினங்கள் (பாகம் 02) - 1ம் பதிப்பு: ஜுலை 2010, ISBN 978-955-1779-44-3
 • சர்வதேச நினைவு தினங்கள் (பாகம் 03) - 1ம் பதிப்பு: ஜுலை 2010, ISBN 978-955-1779-45-0

பல்துறை நூல்கள்[தொகு]

 • கிராமத்தின் ஒரு தீபம். - 1ம் பதிப்பு: 1978
 • எம்.வை. அப்துல் ஹமீத். - 1ம் பதிப்பு: மார்ச் 2004
 • ஆப்கான் மீது அமெரிக்கத் தாக்குதல், - 1ம் பதிப்பு: நவம்பர் 2001, 2ம் பதிப்பு: மார்ச் 2002
 • Wills Wolrd Cup 96 நினைவுகள். - 1ம் பதிப்பு: மார்ச் 1996, 3ம் பதிப்பு: சூன் 1996
 • தமிழ் - முஸ்லிம் இன உறவு. - 1ம் பதிப்பு: பெப்ரவரி 2006

பாடவழிகாட்டி நூல்கள்[தொகு]

 • க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான வரலாறும், சமூகக்கல்வியும் பாடம் தொடர்பான நூல்கள் மொத்தம்: 08
 • தனது மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான நூல்கள் மொத்தம்: 93

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

 • மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 1995 – விசேட கௌரவ விருது
 • ரெபாஹ் இஸ்லாமிய சேமநல அமைப்பு 1997 – இலக்கிய செம்மல் விருது
 • கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 1998 – விசேட விருது
 • மலையக கலை கலாசார சங்கம் 1999 – ரத்னதீப விருது
 • மலையக கலை கலாசார சங்கம் 2000 – விசேட ரத்னதீப விருது
 • இலங்கை அரசு 2003 – கலாபூசணம் விருது
 • ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் (டியுஸ்பேக்) 2007 – விசேட விருது
 • சுடர் ஒளி "கல்விச் சுடர்" – கௌரவ விருது 2009

மறைவு[தொகு]

புன்னியாமீன் 10 மார்ச் 2016 அன்று காலமானார்[1].

மேற்கோள்கள்[தொகு]

 1. "பிரபல எழுத்தாளர் புன்னியாமீன் காலமானார்". தமிழ் மிர்ரர். 10 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

தளத்தில்
பீ. எம். புன்னியாமீன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ._எம்._புன்னியாமீன்&oldid=3654134" இலிருந்து மீள்விக்கப்பட்டது