ந. செல்வராஜா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ந. செல்வராஜா | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 20, 1954 ஆனைக்கோட்டை |
இருப்பிடம் | பிரித்தானியா |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | எழுத்தாளர், நூலகவியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர் |
வலைத்தளம் | |
https://noolthettam.com/ |
நடராஜா செல்வராஜா (பி. அக்டோபர் 20, 1954) ஈழத்து நூலகவியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பிறநாடுகளிலும் வெளிவந்த ஈழத்து நூல்கள், ஈழம் தொடர்பான நூல்களின் விபரங்களைத் திரட்டி நூல் தேட்டம் எனும் பெயரில் தொகுத்து வருகிறார். 2024 ஆம் ஆண்டு வரை ஒவ்வொன்றும் ஆயிரம் நூல்கள் பற்றிய தகவல்களுடன் பதினேழு நூல் தேட்டத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் சிங்கப்பூர், மலேசிய நூல்களுக்கான நூல் தேட்டத் தொகுதியொன்றும் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு செல்வராஜா எழுதிய பல நூல்களிலொன்றாகும்.[1][2] அயோத்தி நூலக சேவைகள் என்னும் பதிப்பு முயற்சியினூடாகப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் 1985 முதல் 1991 வரை வெளியிட்ட நூலகவியல் காலாண்டிதழின் பிரதம ஆசிரியராகவிருந்த செல்வராஜா இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார்.
நூலகராக
[தொகு]நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.[3]
அயோத்தி நூலக சேவை
[தொகு]இவரால் 1985 இல் அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும் நூலகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை நிறுவனரீதியில் வழங்குவதுமாகும்.[4]
இவரது நூல்கள்
[தொகு]- உருமாறும் பழமொழிகள் (1988)
- A Select Bibliography of Dr. James T. Rutnam (1988)
- An Index to the Journal of the Royal Asiatic Society (Ceylon Branch) (1989)
- கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி (1989)
- கிராம நூலகங்களும் அபிவிருத்தியும் (1989)
- நூலகப் பயிற்சியாளர் கைநூல் (1989)
- நூலக அபிவிருத்திக் கருத்தரங்கு, ஏப்ரல் 6-8, 1990: நூலகர்களுக்கான வழிகாட்டி (1990)
- சனசமூக நிலையங்களுக்கான கைநூல் (1990)
- ஆரம்ப நூலகர் கைநூல் (1991)
- யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு (2001)
- நூல்தேட்டம்: தொகுதி ஒன்று (2002)
- Rising from the Ashes: Tragic episode of the Jaffna Library (2003)
- நூல்தேட்டம்: தொகுதி இரண்டு (2004)
- நூல்தேட்டம்: தொகுதி மூன்று (2005)
- நூலியல் பதிவுகள் (2005)
- வாய்மொழி மரபில் விடுகதைகள் (2006)
- நூல்தேட்டம்: தொகுதி 4 (2006)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8.
- நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்: ஒரு நூல்விபரப் பட்டியல் (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8913-69-7
- சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-59-6.
- மலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 1 (2007)
- மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்: தொகுதி 1 (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-6-3
- நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8913-82-6.
- நூல்தேட்டம்: தொகுதி 5 (2008)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils (2009)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-9-4.
- நூல்தேட்டம்: தொகுதி 6 (2010)
வெளி இணைப்பு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு - Tamilnation.org - ராயர் எஸ்.ஜெபநேசன், 1 June 2004
- ↑ தமிழர்களின் அறிவுப் புதையல் யாழ். நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 40 ஆண்டுகள் கடக்கின்றன
- ↑ நடராஜா செல்வராஜா-ezhunaonline.com
- ↑ நூலியல் – நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி - எழுநா, November 7, 2024