மு. இளங்கோவன்
மு. இளங்கோவன் | |
|---|---|
அக்டோபர் 2008-இல் இளங்கோவன் | |
| பிறப்பு | 20 சூன் 1967 இடைக்கட்டு, திருச்சினாப்பள்ளி மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
| அறியப்படுவது | தமிழ் ஆய்வாளர், எழுத்தாளர் |
| பெற்றோர் |
|
மு. இளங்கோவன் என அறியப்படும் முருகேசன் இளங்கோவன் (Mu. Elangovan; பிறப்பு: 20 சூன் 1967) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆய்வாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பிறப்பு
[தொகு]இன்றைய அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20 சூன் 1967 அன்று மு. அசோதை அம்மாள் - சி. முருகேசன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் இளங்கோவன்.
கல்வி
[தொகு]உள்கோட்டையில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளி (1972-1976), அரசினர் உயர்நிலைப் பள்ளி (1976 -1982) ஆகியவற்றில் பயின்றார். பின் 1982-84 காலகட்டத்தில் மீன்சுருட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இதைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் விவசாயப் பணிகளால் கல்வியை இடைநிறுத்தினார்.
புலவர் ந. சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் காசிமடத்துக்கு உட்பட்ட செந்தமிழ்க் கல்லூரியில் 1987 முதல் 1992 வரை இளங்கலை, முதுகலை பட்டங்களை முதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றார். பின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க. ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல் துறையில் “மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்" எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர் (1992-1993). பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிதியுதவியுடன் “பாரதிதாசன் பரம்பரை’" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை (1993 - 1996) நிறைவு செய்தார். இந்த ஆய்வில் தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்தார். இதே காலகட்டத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் (1995) முதலான நூல்களை வெளியிட்டார்.
பணிகள்
[தொகு]1997-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆவணம்" எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார். வீ. ப. கா. சுந்தரம் இயற்றிய தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதிக்கான பணி உதவியாளராக 1998-99 காலகட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயலாற்றினார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு உரிமையான கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக (16 சூன் 1999 - 17 ஆகத்து 2005) பணியாற்றினார். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) தேர்ந்தெடுக்கப் பெற்று 18 ஆகத்து 2005 முதல் புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கவிதையில் ஆர்வம் கொண்ட இளங்கோவன், தமிழக நாட்டார் பாடல்களைப் பாடியும், ஆய்வு செய்தும் வருகிறார். கேரள, ஈழத்து நாட்டார் பாடல்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.[மேற்கோள் தேவை] திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் வழியே இவரின் நாட்டார் பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப் பட்டுள்ளன.
இளங்கோவனின் மேற்பார்வையில் வயல்வெளிப் பதிப்பகம் (இடைக்கட்டு), பாரதிதாசன் உயராய்வு மையம், புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகம் இயங்குகின்றன.
நூல்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | வகை | குறிப்பு | பதிப்பகம் |
|---|---|---|---|---|
| 1990 | மாணவராற்றுப்படை | வயல்வெளிப் பதிப்பகம் | ||
| 1991 | பனசைக்குயில் கூவுகிறது | |||
| 1992 | அச்சக ஆற்றுப்படை | |||
| 1994 | மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் | வரலாற்றுவரைவியல் | ||
| 1995 | விடுதலைப் போராட்ட வீரர்
வெ. துரையனார் அடிகள் |
வாழ்க்கை வரலாறு | இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற
தென்னாபிரிக்கத் தமிழர் வெ. துரையனார் குறித்த வரலாறு | |
| 1996 | பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு | |||
| 1997 | இலக்கியம் அன்றும் இன்றும் | |||
| மணல்மேட்டு மழலைகள் | ||||
| 2000 | தமிழிசைக் கலைக்களஞ்சியம்
(நான்காம் தொகுதி) |
கலைக்களஞ்சியம் | முதன்மைத் தொகுப்பாசிரியர் - வீ. ப. கா. சுந்தரம் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| 2001 | வாய்மொழிப் பாடல்கள் | வயல்வெளிப் பதிப்பகம் | ||
| பாரதிதாசன் பரம்பரை | ||||
| 2002 | பழையன புகுதலும் | |||
| அரங்கேறும் சிலம்புகள் | ||||
| 2003 | பொன்னி பாரதிதாசன் பரம்பரை [?] | |||
| 2004 | பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.) | |||
| 2006 | நாட்டுப்புறவியல் | |||
| 2009 | அயலகத் தமிழறிஞர்கள் | |||
| 2009 (?)
/2016 |
இணையம் கற்போம் | |||
| 2013 | கட்டுரைக் களஞ்சியம் | |||
| செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் | ||||
| 2019 | தொல்லிசையும் கல்லிசையும் | |||
| 2022 | இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல் | |||
| 2024 | இணைய ஆற்றுப்படை |
விருதுகள்
[தொகு]தன் கல்விக் காலத்தில் தமிழ்நாட்டு அளவிலும் கல்லூரி, பல்கலைக்கழக அளவிலும் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றார் இளங்கோவன். இவை தவிர்த்த குறிப்பிடத்தக்க விருதுகள்:
| ஆண்டு | விருது | வழங்கியவர் / அமைப்பு | குறிப்பு |
|---|---|---|---|
| > 1995 | தங்கப் பதக்கம்
(முதல் பரிசு) |
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
/ செயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் |
“தாய்மொழிவழிக் கல்வி" எனும் தலைப்பிலான
ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் [மேற்கோள் தேவை] |
| ? | தங்கப்பதக்கம்
(இரண்டு) |
நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் | "மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்"
மற்றும் "பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு" எனும் ஆய்வுக்கட்டுரைகளுக்காக.[மேற்கோள் தேவை] |
| 2010 | செம்மொழி இளம் அறிஞர் விருது | தமிழ்நாட்டு முதலமைச்சர் | மார்ச்சு 28 அன்று வழங்கப்பட்டது ;
ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களுடன் |
| 2021 | தூய தமிழ் ஊடக விருது
(காட்சி ஊடகப் பிரிவு) |
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் | இணையம் வலையொளி அலைவரிசைக்காக.[2][3][மேற்கோள் தேவை] |
| 2023 | தமிழ் விக்கி பெரியசாமித் தூரன் விருது | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (ஜெயமோகன்) |