பிளாசுமா (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A பிளாஸ்மா விளக்கு, filamentation உட்படப் பிளாஸ்மாவின் சில சிக்கலான தோற்றப்பாடுகளை விளக்கும் படம்.
இது 30,000 ஒளியாண்டுகள் நீளமுள்ள பிளாஸ்மா.

பிளாஸ்மா (மின்மக் கலவை) என்பது இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின்படி பொருளொன்றின், திண்மம், நீர்மம் (திரவம்), வளிமம்(வாயு) ஆகிய மூன்று இயல்பான தனி நிலைகளுக்குப் (phase) புறம்பாகவுள்ள நான்காவது ஒரு தனி நிலையாகும். இதனை (மின்மமாக்கப்பட்ட) அயனாக்கம் அடைந்த வளிம நிலை எனலாம். பிளாஸ்மா என்னும் மின்மக் கலவை நிலை, சுதந்திரமாக இயங்கும் இலத்திரன்களையும், அயன்கள் எனப்படும் (எதிர்மின்னிகளை)இலத்திரன்களை இழந்த மின்னூட்டம் பெற்ற அணுக்களையும் கொண்டது. அதாவது நேர்மின்மப்(+) பொருட்களும், எதிர்மின்மப்(-) பொருட்களும் ஈடான (சமமான) எண்ணிக்கையில் கலந்து ஒரு வளிமம் போன்ற நிலையில் உள்ளது இம் மின்மக்கலவை என்னும் பிளாஸ்மா . அணுக்களிலிருந்து இலத்திரன்களை (எதிர்மின்னிகளை) வெளியேற்றிப் பிளாஸ்மா நிலையை உருவாக்குவதற்கும், எதிர்மின்னிகளும் (இலத்திரன்களும்), அயன்களும் தனித்தனியாக இருக்கும் நிலையைத் தக்கவைப்பதற்கும், சக்தி தேவைப்படுகின்றது. இவ்வாறு தேவைப்படும் சக்தி வெப்பம், மின்சாரம், கட்புலனாகாத புற ஊதாக்கதிர்கள், கட்புலனாகும் செறிவாக்கப்பட்ட லேசர் கதிர்கள் போன்ற பல மூலங்களிலிருந்து கிடைக்கக் கூடும். பிளாஸ்மா நிலையைத் தக்கவைப்பதற்குரிய சக்தியில் குறைவு ஏற்படும்போது அது மீண்டும் மின்னேற்றம் இல்லாத (வளிம) வாயு நிலையை அடைகின்றது. தனியாக இயங்கக்கூடிய மின்னேற்றம் கொண்ட துணிக்கைகள் (துகள்கள்) இருப்பதன் காரணமாகப் பிளாஸ்மா மின்கடத்துதிறன் கொண்டது. அத்துடன் மின்காந்தப் புலங்களினால் தூண்டப்படக்கூடியது.

கண்டுபிடிப்பு[தொகு]

1879 ஆம் ஆண்டில் சர். வில்லியம் குறூக்ஸ் (Sir William Crookes) என்பார் மின்இறக்கக் குழாய் (discharge tube) ஆய்வுகளின்போது பொருளின் இந்த நான்காவது நிலையை அடையாளம் கண்டார். 1928 இல் இர்விங் லாங்மூயர் (Irving Langmuir) என்பவர் இதற்குப் பிளாஸ்மா என்று பெயரிட்டு அழைத்தார்.

இயற்கையில் பிளாசுமா[தொகு]

புவியில் நாம் பெருமளவுக்கு எதிர்கொள்ளும் பொருட்களின் நிலை திண்மம், நீர்மம் (திரவம்), வளிமம் (வாயு)ஆகிய மூன்று நிலைகளாகும். அண்டத்தைக் கருத்துக்கு எடுத்தால், இயற்கையில் அதி கூடிய அளவில் காணப்படும் பொருளின் நிலை பிளாஸ்மா நிலையாகும். சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் பிளாஸ்மா நிலையிலேயே காணப்படுகின்றது. புவியிலும் குறைந்த அளவுக்குப் பிளாஸ்மா காணப்படுகின்றது. இவற்றைவிட செயற்கையாகவும் பிளாஸ்மாக்கள் உருவாக்கப்படுகின்றன.

பிளாஸ்மாவின் பொதுவான வடிவங்கள்
செயற்கைப் பிளாஸ்மா
புவிசார் பிளாஸ்மாக்கள்
  • தீச்சுவாலை(தீப் பிழம்பு, தீ நாக்கு)
  • மின்னல்
  • வளிமண்டலத்தின் உயர் நிலைகளில் உள்ள மின்ம மண்டலம்ionosphere (ionosphere)
  • நில உருண்டையின் முனைப் பகுதிகளில் காணப்படும் வானில் தெரியும் வண்ணக்கோலங்கள் (Aurora)
விண்வெளி மற்றும் விண்வெளி இயற்பியல்சார் பிளாஸ்மாக்கள்

பிளாஸ்மா அளவுருக்கள்[தொகு]

பிளாஸ்மாவின் அளவுருகள் அவற்றின் அளவைப்பொருத்து மாறுபடும்,ஆனால் அவற்றின் குணநலன்கள் ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கும்.பிளாஸ்மாக்கள் குவார்க்குகளைப் போல வித்தியாசமான குணநலன்களைக் கொண்டிருப்பதில்லை.

பிளாஸ்மா அளவுருக்கள் (OOM)
குணம் புவிசார் பிளாஸ்மா விண்வெளிசார் பிளாஸ்மா
அளவு
மீட்டர்களில்
10−6 மீ (ஆய்வுக்கூட பிளாஸ்மா) முதல்
102 மீ (மின்னல்) வரை (~8 OOM)
10−6 மீ (விண்கல உறையில்) முதல்
1025 மீ (நெபுலா) வரை (~31 OOM)
வாழ்நாள்
நொடிகளில்
10−12 நொடி (லேசரால் உருவாக்கப்பட்ட பிளாஸ்மா) முதல்
107 நொடி (ஒளிரும் விளக்ககள்) வரை (~19 OOM)
101 நொடி (சூரிய கதிர்களில்) முதல்
1017 நொடி (உலகளாவிய பிளாஸ்மா) வரை (~16 OOM)
அடர்த்தி
ஒருகன மீட்டருக்குள் உள்ள துகள்கள்
107 மீ−3 முதல்
1032 மீ−3 வரை (நிலைம வரையறை பிளாஸ்மா)
1 மீ−3 (உலகளாவிய பிளாஸ்மா) முதல்
1030 மீ−3 வரை (நட்சத்திர அடுக்கு)
வெப்பம்
கெல்வினில்
~0 K (படிகத்திலுள்ள சமநிலை பிளாஸ்மா)[1]) முதல்
108 K (காந்த இணைவு உள்ள பிளாஸ்மா) வரை
102 K (aurora) முதல்
107 K (சூரிய அடுக்கில்) வரை
காந்த புலம்
டெஸ்லாவில்
10−4 T (ஆய்வுக்கூட பிளாஸ்மா) முதல்
103 T வரை
10−12 T (உலகளாவிய பிளாஸ்மா) முதல்
1011 T (நியூட்டரான் நட்சத்திரங்களில்) வரை

மேற்கோள்கள்[தொகு]

  1. See The Nonneutral Plasma Group at the University of California, San Diego

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாசுமா_(இயற்பியல்)&oldid=2225737" இருந்து மீள்விக்கப்பட்டது