உள்ளடக்கத்துக்குச் செல்

பியூட்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டேன்
Skeletal structure of a butane molecule 3D model of a butane molecule
பொது
பிற பெயர்கள்
மூலக்கூறு வாய்பாடு
மூலக்கூறு திணிவு 58.08 கிராம்/மோல் (g/mol)
புறத் தோற்றம் நிறமற்ற வளிமம்
CAS எண் [106-97-8]
பண்புகள்
அடர்த்தி மற்றும் இயல் நிலை 2.52 கிராம்/(செ.மீ)3 (g/cm3), 15°C 1 காற்றழுத்த மண்டலம் (atm) {{{பொருள் நிலை}}}
நீரில் கரைமை 6.1 மில்லி கிராம்/100 மில்லி லீ (20 °C)
உருகும் நிலை −138.3°C ( 134.9 K)
கொதி நிலை −0.5°C (272.7 K)
முக்கூட்டு முப்புள்ளி நிலை K, பார் அழுத்தம் (bar)
திடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical) °K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm)
காடித்தன்மை
நகர்ப்பிசுக்கம்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இணையழகுக் குழு (Symmetry group)
மூலக்கூறின் இருமுனைத் தன்மை|
தீநிகழ் வாய்ப்புகள்
பொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS) MSDS வெளியிணைப்பு
ஐரோப்பிய வகையீடு மிகவும் தீபற்றும் இயல்பு (F+)
என்.எப்.பி.ஏ 704

4
1
0
 
R-சொற்றொடர்கள் R12
S-சொற்றொடர்கள் (S2), S9, S16, S33
தீ பற்றும் வெப்ப நிலை −60°C
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை 287°C
மீகம எரியும்
வெப்பநிலை:
°C
வெடிக்கும் எல்லை 1.8–8.4%
மேலதிக தரவுகள் பக்கம்
கட்டமைப்பும்
பண்புகளும்
வெப்ப இயக்கவியல்
தரவுகள்
ஒளிமாலைத் தரவுகள் புற ஊதா/காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு, அகசிவப்பு முறை அளவீடு, அணுக்கருக் காந்தமுறை அளவீடு, பொருண்மை நுண் அளவீடு
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
தொடர்புடைய வேதியியல் பொருட்கள் புரொப்பேன்
பென்ட்டேன்
தொடர்புடைய கூட்டுபொருட்கள் ஐசோபியூட்டேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்
Infobox disclaimer and references

பியூட்டேன் (Butane)என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதைப்) பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு C4H10 ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுதுவது வழக்கம் CH3CH2CH2CH3.

இது நிறமற்ற வளிம நிலையில் உள்ள ஒரு பொருள். மிக எளிதாகத் தீப்பிடிக்க வல்லது. இதனை எளிதாக நீர்ம நிலைக்கு மாற்ற முடியும். அதிக அளவில் ஆக்ஸிஜன் இருக்கும்பொழுது நன்றாக எரிந்து கார்பன்-டை-ஆக்சைடும் (கரிம ஈராக்சைடும்) நீரும் விளைபொருளாய்த் தரக்கூடியது. ஆனால் அதிக அளவில் ஆக்ஸிஜன் இல்லையெனில், விளைபொருட்களில், கரிப்புகையும் (soot), கார்பன் -மோனாக்சைடும் (கரிம ஓராக்சைடு) தரவல்லது. இதன் பெயர் பியூட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட பியூட் மற்றும் அல்கேன்களுக்கான விகுதி ஏன் ஆகியைவ இணைந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சேர்மம் எட்வர்ட் பிரேங்லேண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மாற்றியங்கள்

[தொகு]
பொதுப்பெயர் இயல்பான பியூட்டேன்
பக்கத்தொடரற்ற பியூட்டேன்
n-பியூட்டேன்
ஐசோபியூட்டேன்
i-பியூட்டேன்
IUPAC பெயர் பியூட்டேன் 2-மெதில்புரோப்பேன்
மூலக்கூறு
வரைபடம்
கரியணுத்தொடர்
வரைபடம்

n-பியூட்டேனில் மையத்தில் உள்ள C−C பிணைப்பைப் பொறுத்த சுழற்சி இரண்டு விதமான (டிரான்சு மற்றும் காஸ்) வகை (டிரான்சு மற்றும் காசு) புறவெளி அமைப்பு மாற்றியங்களைத் தோற்றுவிக்கிறது.[2]

வேதிவினைகள்

[தொகு]

அதிக அளவு ஆக்சிசனின் முன்னிலையில் பியூட்டேன் ஆக்சிசனில் எரிந்து கார்பனீராக்சைடு மற்றும் நீராவியைத் தருகிறது; குறைவான அளவில் ஆக்சிசன் இருக்கும் போது, கார்பன்(புகை) அல்லது கார்பன் மோனாக்சைடும் சேர்த்து உருவாக்கப்படலாம்.

போதுமான ஆக்சிசனின் முன்னிலையில்:

2 C4H10 + 13 O2 → 8 CO2 + 10 H2O

வரையறுக்கப்பட்ட அல்லது குறைவான ஆக்சிசனின் முன்னிலையில்:

2 C4H10 + 9 O2 → 8 CO + 10 H2O

காற்றில் எரியும் போது பியூட்டேனின் உயர்ந்தபட்ச வெப்பமாறா தழல் வெப்பநிலையானது2,243 K (1,970 °C; 3,578 °F).

n-பியூட்டேனானது மேலியிக் நீரிலியின் தயாரிப்பின் போதான டூபாண்ட் எனப்படும் வெடிமருந்தின் வினைவேகமாற்றிச் செயல்பாட்டின் தொடக்கநிலை மூலப்பொருளாக உள்ளது:

2 CH3CH2CH2CH3 + 7 O2 → 2 C2H2(CO)2O + 8 H2O

n-பியூட்டேன், அனைத்து இதர ஐதரோகார்பன்களைப் போலவும் தனி உறுப்பு குளோரினேற்ற வினைகளில் ஈடுபட்டு 1-குளோரோ மற்றும் 2-குளோரோபியூட்டேன்கயும், மேலும் அதிக குளோரினேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்களையும் தருகின்றது. குளோரினேற்ற வினையின் வேகங்களின் ஒப்புமையானது n-பியூட்டேனில் காணப்படும் இரண்டு வகை c-H பிணைப்புகளின் பிணைப்பு சிதையும் ஆற்றல்களில் உள்ள வேறுபாட்டைக் (425 and 411 கிலோயூல்/மோல்) கொண்டு விளக்கப்படுகிறது.

பயன்கள்

[தொகு]

பியூட்டேனானது பெட்ரோல் (அ) பாறை எண்ணெய் உடன் கலவைப்பொருளாகவும், எரிபொருளாகப் பயன்படும் வாயுவாகவும், நறுமணப் பொருட்களைத் தயாரிக்கும் போது தனித்தோ அல்லது புரொப்பேனுடன் சேர்ந்த கலவையாகவோ கரைப்பானாகவும், எத்திலீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகியவற்றைத் தயாரிக்க தொடக்க மூலப்பொருளாகவும், தொகுப்பு முறை இரப்பரில் ஒரு தலையாய பகுதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஐசோபியூட்டேன் முதன்மையாக பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணெய் அதிகப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.[3][4][5][6]

புரொப்பேன் மற்றும் இதர ஐதரோகார்பன்களுடன் கலக்கும் போது இது பொதுவாக, வணிகவியல்ரீதியாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என குறிப்பிடப்படுகிறது. பாறை எண்ணெயின் பகுதிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு நீராவியாற் பகுப்பு செயல்முறையில் இதர அடிப்படையான பெட்ரோவேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான தொடக்கநிலை மூலப்பொருளாகவும் சிகரெட் பற்றவைப்பானில் எரிபொருளாகவும், நாற்றமகற்றிகள் போன்ற தெளிப்பு வகைக் கரைசல்களில் உந்துபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7]

பியூட்டேனின் மிகத்துாய்மையான வடிவங்களானவை, குறிப்பாக ஐசோபியூட்டேன் ஓசோன் சிதைவுபடுத்திகளாக இருந்த ஆலோமீத்தேன்களுக்குப் பதிலியாக, வீட்டு உபயோக குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களில் குளிர்பதனூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், பியூட்டேன் ஒரு தீமூட்டி எரிபொருளாகவும், பியூட்டேன் பந்தம் போன்ற பொதுவான தீமூட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.chem.qmul.ac.uk/rschg/OccPapers/OccPap6.pdf
  2. Roman M. Balabin (2009). "Enthalpy Difference between Conformations of Normal Alkanes: Raman Spectroscopy Study of n-Pentane and n-Butane". J. Phys. Chem. A 113 (6): 1012–9. doi:10.1021/jp809639s. பப்மெட்:19152252. 
  3. MarkWest Energy Partners, L.P. Form 10-K. Sec.gov
  4. Copano Energy, L.L.C. Form 10-K. Sec.gov. Retrieved on 2012-12-03.
  5. Targa Resources Partners LP Form10-k. Sec.gov. Retrieved on 2012-12-03.
  6. Crosstex Energy, L.P. FORM 10-K. Sec.gov
  7. A Primer on Gasoline Blending. An EPRINC Briefing Memorandum

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பியூட்டேன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


 
ஆல்க்கேன்கள்

மெத்தேன்
CH4

|
 

எத்தேன்
C2H6

|
 

புரொப்பேன்
C3H8

|
 

பியூட்டேன்
C4H10

|
 

பென்ட்டேன்
C5H12

|
 

எக்சேன்
C6H14

எப்டேன்
C7H16

|
 

ஆக்டேன்
C8H18

|
 

நோனேன்
C9H20

|
 

டெக்கேன்
C10H22

|
 

ஆண்டெக்கேன்
C11H24

|
 

டோடெக்கேன்
C12H26

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டேன்&oldid=3969987" இலிருந்து மீள்விக்கப்பட்டது