ஐகோசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐகோசேன்
ஐகோசேன் கட்டமைப்பு வாய்ப்பாடு
ஐகோசேன் மூலக்கூறு பந்து குச்சி வடிவ மாதிரி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐகொசேன்[1]
இனங்காட்டிகள்
112-95-8 Y
Beilstein Reference
1700722
ChEBI CHEBI:43619 Y
ChEMBL ChEMBL1233983 N
ChemSpider 7929 Y
EC number 204-018-1
InChI
  • InChI=1S/C20H42/c1-3-5-7-9-11-13-15-17-19-20-18-16-14-12-10-8-6-4-2/h3-20H2,1-2H3 Y
    Key: CBFCDTFDPHXCNY-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த எய்கோசேன்
பப்கெம் 8222
SMILES
  • CCCCCCCCCCCCCCCCCCCC
UNII 3AYA9KEC48 Y
பண்புகள்
C20H42
வாய்ப்பாட்டு எடை 282.56 g·mol−1
தோற்றம் நிறமற்றது, மெழுகுத்த்ன்மை படிகங்கள்
மணம் நெடியற்றது
உருகுநிலை 36 முதல் 38 °C; 97 முதல் 100 °F; 309 முதல் 311 K
கொதிநிலை 343.1 °C; 649.5 °F; 616.2 K
மட. P 10.897
31 μமோல் பாசுக்கல்−1 கிலோகிராம்−1
வெப்பவேதியியல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
558.6 யூல் கெல்வின்−1 mol−1
வெப்பக் கொண்மை, C 602.5 யூல் கெல்வின்−1 மோல்−1 (6.0 °செல்சியசில்)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை > 113 °C (235 °F; 386 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஐகோசேன் (Icosane) என்பது C20H42 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எய்கோசேன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த ஆல்கேன் 366,319 கட்டமைப்பு மாற்றியங்களைக் கொண்டுள்ளது. அதிகதீப்பற்றும் வெப்பநிலையைக் கொண்டிருப்பதால் பெட்ரோவேதியியல் தொழிற்துறையில் ஐகோசேன் சிறிதளவு மட்டுமே பயன்படுகிறது. நேர்-சங்கிலி அமைப்பு மாற்ரியமாகக் காணப்படும் என்- ஐகோசேன் மெழுகுவர்த்தி தயாரிக்கப் பயன்படும் பாரபின் மெழுகுகளில் காணப்படும் மிகச் சிறிய சேர்மமாகும்.

ஐகோசேனின் அளவு, நிலை அல்லது வேதியியல் செயலற்ற தன்மை ஆகியனவற்றால் இதை ஆல்கேனின் பண்புகளில் இருந்து ஒதுக்கி வைப்பதில்லை.

ஐகோசேன் நிறமற்ற, முனைவுத் தன்மையற்ற ஒரு மூலக்கூறாகும். எரிதலைத் தவிர்த்து கிட்டத்தட்ட எந்த வினையையும் இது நிகழ்த்துவதில்லை. குறைவான அடர்த்தியும் தண்ணீரில் கரையாப் பண்பும் கொண்டதாக ஐகோசேன் உள்ளது. நீர் விலக்கு/ வாண்டர்வால்சு பிணைப்பு போன்ற வலிமையற்ற மூலக்கூற்றிடை பிணைப்புகளை மட்டுமே இது வெளிப்படுத்துகிறது.

மிதமான வெப்பநிலையில் நிலைமாறும் தன்மையைப் பெற்றிருப்பதால் ஐகோசேனை நிலைமாற்றும் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் வெப்ப ஆற்றலை சேமிக்கவும் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் முடியும்.

பெயர்[தொகு]

ஐயுபிஏசி ஐகோசேன் [2] என்ற பெயரையும் அமெரிக்க வேதியியல் கழகம் எய்கோசேன் [3] என்ற பெயரையும் பரிந்துரைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "eicosane - Compound Summary". PubChem Compound (USA: National Center for Biotechnology Information): Identification and Related Records. 16 September 2004. https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=8222&loc=ec_rcs. பார்த்த நாள்: 4 January 2012. 
  2. "Table 11 Basic numerical terms (multiplying affixes)". IUPAC. http://www.acdlabs.com/iupac/nomenclature/93/r93_328.htm. பார்த்த நாள்: 2011-02-16. 
  3. "Footnote for Table 11". IUPAC. http://www.acdlabs.com/iupac/nomenclature/93/r93_332.htm. பார்த்த நாள்: 2011-02-16. 

புற இணைப்புகள்[தொகு]

  • Icosane at Dr. Duke's Phytochemical and Ethnobotanical Databases
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐகோசேன்&oldid=2914856" இருந்து மீள்விக்கப்பட்டது