இருகார்பனேட்டு
கரிம வேதியியலில், இருகார்பனேட்டு (dicarbonate) என்பது கனிம வேதியியலில் இரு இணைதிறன் எண்ணிக்கை கொண்ட [-O-(C=O)-O-(C=O)-O-] அல்லது C
2O
52• என்ற வாய்பாட்டைக் கொண்டிருக்கும் வினைத்தொகுதிகளை அல்லது செயல்படு குழுக்களைக் குறிக்கிறது. ஒர் ஆக்சிசன் அணுவை பங்கீடு செய்துகொள்ளும் இரண்டு கார்பனேட்டு குழுக்களை இவை பெற்றுள்ளன. கற்பிதநிலை இருகார்பானிக் அமிலத்தின், H
2C
2O
5 அல்லது HO-(C=O)-O-(C=O)-OH. இரட்டை எசுத்தர்களாகவும் இச்சேர்மங்களை பார்க்கவியலும். இருமீத்தைல் இருகார்பனேட்டு, H3C-C2O5-CH3 மற்றும் இரு மூவிணைய இருகார்பனேட்டு, (H3C-)3C-C2O5-C(-CH3)3 ஆகிய இரண்டு சேர்மங்களும் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும்.
இது ஆக்சோகார்பனின் எதிர்மின் அயனிகளில் ஒன்றாகும். இந்த ஆக்சோகார்பன் அயனியில் தனி கார்பன் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. இருகார்பனேட்டு உப்புகள் நிலைப்புத்தன்மை அற்றவையாகத் தோன்றினாலும் கார்பனேட்டு கரைசல்களில் கணநேர இருப்பைக் கொண்டுள்ளன.[1]
இருகார்பனேட்டு என்ற சொல்லாட்சி சில சமயங்களில் பைகார்பனேட்டு, [HCO3]− என்ற வினைத்தொகுதியைக் குறிக்க உபயோகிக்கப்படுகிறது. ஐதரசன்கார்பனேட்டு எதிர்மின் அயனி [HCO3]− அல்லது கரிமக் குழு [HCO3-].இரண்டுக்கும் பொதுவான பெயராக இருப்பது இதற்கு காரணமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zeller, Klaus-Peter; Schuler, Paul; Haiss, Peter (2005). "The hidden equilibrium in aqueous sodium carbonate solutions: Evidence for the formation of the dicarbonate anion". Eur. J. Inorg. Chem. 2005 (1): 168–172. doi:10.1002/ejic.200400445.