கார்பன் ஐந்தாக்சைடு
பண்புகள் | |
---|---|
CO5 | |
வாய்ப்பாட்டு எடை | 92.01 g/mol |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | கார்பன் ஆறாக்சைடு கார்பன் நான்காக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கார்பன் ஐந்தாக்சைடு (Carbon pentaoxide அல்லது carbon pentoxide) என்பது கார்பனுடைய நிலைப்புத் தன்மையற்ற மூலக்கூறு ஆக்சைடு ஆகும். இம்மூலக்கூறு , தாழ்வெப்பநிலைகளில் உருவாக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகிறது. வளிமண்டல வேதியியலில் கார்பன் ஐந்தாக்சைடு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. சூரியக் குடும்பத்துக்கு வெளியேயும் விண்மீனிடை பிரதேசத்திலும் உள்ள குளிர்ந்த பனிக்கட்டி தொடர்பான ஆய்வில் கார்பன் ஐந்தாக்சைடு பெரும்பங்கு வகிக்கிறது[1] . கனிமீடு மற்றும் டிரைட்டன் ஆகிய சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள துணைக்கோள்களில் இச்சேர்மம் உருவாகி அங்கு ஒரு பகுதிப்பொருளாகவும் காணப்படுகிறது. மேலும் இம்மூலக்கூறானது C2 சீர்மையில் ஒரு கார்பன் மற்றும் நான்கு ஆக்சிசன் கொண்டுள்ள ஐந்து உறுப்பினர் வளையத்தைப் பெற்றுள்ளது. ஐந்தாவதாக உள்ள ஆக்சிசன் அணு கார்பனுடன் ஒரு இரட்டைப் பிணைப்பில் பிணைந்திருக்கிறது. இதன் அமைப்பு குறித்த வேதியியல் கணக்கீடுகளின் முடிவானது ஒரு கோட்பாட்டு அமைப்பாக வெளிப்படுகிறது. வடிவில் எப்போதுமே ஐங்கோண வடிவமாக இல்லாமல் அவ்வப்போது இது நீளம் மற்றும் கோணங்களில் மாறுபடுகிறது. கார்பனுடன் இணைக்கப்படாத ஆக்சிசன் அணுக்களுக்கிடையே உள்ள தொலைவு 1.406 Å ஆகவும் மாறாக கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆக்சிசன் அணுவுக்கும் இவ்வணுவுக்கும் இடையே உள்ள தொலைவு 1.457 Å ஆகவும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இச்சேர்மத்தில் இடம்பெற்றுள்ள கார்பன் ஆக்சிசன் பிணைப்பின் நீளம் 1.376 Å ஆகவும் இரட்டைக் கார்பனுக்கும் ஆக்சிசனுக்கும் இடையே உள்ள பிணைப்பின் நீளம் மிகவும் குறைவாக 1.180 Å தொலைவிலும் காணப்படுகிறது. சேர்மத்தில் ஒரேயொரு கார்பன் மட்டுமே இடம்பெற்றிருப்பதால் கார்பன் கார்பன் பிணைப்புக்கு இங்கு இடமில்லை. ஆக்சிசன் – ஆக்சிசன் – ஆக்சிசன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்புக் கோணம் 100.2° , ஆக்சிசன் – ஆக்சிசன் – கார்பன் பிணைப்பின் கோணம் 109.1° மற்றும் ஆக்சிசன் – கார்பன் – ஆக்சிசன் பிணைப்பின் கோணம் 125.4° என்ற அளவுகளில் பிணைப்புக் கோணங்களும் காணப்படுகின்றன.[2]
உற்பத்தி
[தொகு]தாழ்வெப்பநிலைக்கு உறைந்த கார்பன்டை-ஆக்சைடுடன் 5 கிலோவோல்ட் எலக்ட்ரான்களை கதிர்வீச்சொளிர்வுக்கு உட்படுத்தினால் கார்பன் ஐந்தாக்சைடு உண்டாகிறது. கார்பன் நான்காக்சைடு ஆக்சிசனுடன் வினைபுரிகிறது என்பதே இவ்வினைக்கான வினைவழி முறையாகும். இவ்வினையில் 17.0 கிலோசூல் மோல் -1 ஆற்றல் வெளிப்படுகிறது[2] ஓசோன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு வினைவழி உற்பத்திக்கு 165.6 கிலோசூல் மோல் -1 ஆற்றல் தேவைப்படுகிறது. இதேபோல கார்பன் மூவாக்சைடு, ஈராக்சிசன் மூலக்கூறுடன் ஈடுபடும் வினைக்கும் 31.6 கிலோசூல் மோல் -1 ஆற்றல் தேவைப்படுகின்றது.[3]
பண்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kaiser, Ralf I.; Alexander M. Mebel (2008). "On the formation of higher carbon oxides in extreme environments". Chemical Physics Letters 465 (1–3): 1–9. doi:10.1016/j.cplett.2008.07.076. பன்னாட்டுத் தர தொடர் எண்:00092614. Bibcode: 2008CPL...465....1K.
- ↑ 2.0 2.1 Jamieson, Corey S.; Alexander M. Mebel; Ralf I. Kaiser (2007). "First detection of the C2 symmetric isomer of carbon pentaoxide (CO5) at 10K". Chemical Physics Letters 443 (1–3): 49–54. doi:10.1016/j.cplett.2007.06.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:00092614. Bibcode: 2007CPL...443...49J.
- ↑ Elliott, Ben M.; Alexander I. Boldyrev (2005). "The Oxygen-Rich Carboxide Series: COn(n= 3, 4, 5, 6, 7, or 8)". The Journal of Physical Chemistry A 109 (16): 3722–3727. doi:10.1021/jp0449455. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. பப்மெட்:16839040.