பெராக்சோயிருகார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியலில், பெராக்சோயிருகார்பனேட்டு (peroxodicarbonate) என்பது C2O62− என்ற மூலக்கூறு வாய்பாடுடன் இணைதிறன் எண்ணிக்கை 2 எனப் பெற்றிருக்கும் ஒர் எதிர்மின் அயனியாகும். இந்த ஆக்சோகார்பன் அயனியில் தனி கார்பன் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. இரண்டு கார்பனேட்டு அயனிகள் இணைந்து ஒரு -O-O-பெராக்சைடு பாலம் உருவாகியுள்ள மூலக்கூறு வடிவமைப்பாக இதனைக் காணவியலும்.

உருகிய இலித்தியம் கார்பனேட்டை மின்னாற்பகுக்கும் போது எதிர் மின்வாயில் பெராக்சோகார்பனேட்டுடன் (CO42−) பெராக்சோயிருகார்பனேட்டு எதிர்மின் அயனி உண்டாகிறது.[1] ருபீடியம் கார்பனேட்டின் நிறைவுற்ற கரைசலை தண்ணீரில் மின்னாற்பகுக்கும் பொழுதும் இந்த எதிர்மின்னயனியைத் தயாரிக்க முடியும்.

1895 ஆம் ஆண்டில் கான்சுடம் மற்றும் வான் அன்சென் ஆகியோர் பொட்டாசியம் பெராக்சோயிருகார்பனேட்டைத், K2C2O6 தயாரித்தனர்.[2] இதனுடைய படிகவமைப்பு 2002 ஆம் ஆண்டில்தான் கண்டறியப்பட்டது[3]. இதையும் நிறைவுற்ற பொட்டாசியம் கார்பனேட் கரைசலை 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் மின்னாற்பகுப்பதன் மூலம் தயாரிக்க முடியும். இளம் நீலநிற படிகவடிவ திண்மமாக காணப்படும் இவ்வுப்பு 141 பாகை வெப்பநிலையில் சிதைவடைந்து ஆக்சிசனையும் கார்பன்-டை-ஆக்சைடையும் வெளிவிடுகிறது. தாழ்வெப்பநிலைகளில் இது மிக மெதுவாக சிதைவடைகிறது[3].

இளம் நீலநிற படிகவடிவ திண்மமாக காணப்படும் ருபீடியம் பெராக்சோயிருகார்பனேட்டு 424K வெப்பநிலையில் சிதைவடைகிறது. 2003 ஆம் ஆண்டில் இதனுடைய வடிவமைப்பு வெளியிடப்பட்டது. இவ்விருவகை உப்புகளிலும் உள்ள ஒவ்வொரு இருகார்பனேட்டு அலகுகளும் சமதள அமைப்பில் உள்ளன. ருபீடியம் உப்பில் மூலக்கூறு மொத்தமும் சமதள அமைப்பிலேயே காணப்படுகிறது.[4] . அதே வேளையில் பொட்டாசியம் உப்பில் உள்ள இரண்டு அலகுகளும் O-O பிணைப்பைக் கொண்டு இரண்டு வேறுபட்ட மற்றும் கிட்டத்தட்ட செங்குத்துத் தளங்களில் காணப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chen, Li-Jiang; Lin, Chang-Jian; Zuo, Juan; Song, Ling-Chun; Huang, Chao-Ming (2004). "First Spectroscopic Observation of Peroxocarbonate/ Peroxodicarbonate in Molten Carbonate". The Journal of Physical Chemistry B 108 (23): 7553–7556. doi:10.1021/jp035749l. 
  2. Constam, E. J.; von Hansen, A. (1895). Zeitschrift für Elektrochemie 7. 
  3. 3.0 3.1 Dinnebier, Robert E.; Vensky, Sascha; Stephens, Peter W.; Jansen, Martin (2002). "Crystal Structure of K2[C2O6]". Angewandte Chemie International Edition 41 (11): 1922–1924. doi:10.1002/1521-3773(20020603)41:11<1922::AID-ANIE1922>3.0.CO;2-T. 
  4. 4.0 4.1 Dinnebier, Robert E.; Vensky, Sascha; Jansen, Martin (2003). "Crystal and Molecular Structure of Rubidium Peroxodicarbonate Rb2[C2O6]". Chemistry - A European Journal 9 (18): 4391–4395. doi:10.1002/chem.200304914. பப்மெட்:14502625. 

இவற்றையும் காண்க[தொகு]