என்.எப்.பி.ஏ 704
NFPA 704 என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் நாட்டு தீக்காப்பு அமைப்பின் (National Fire Protection Association) ஒரு சீர்தரம் ஆகும். தீநிகழ்வுகளில் இருந்து விரைந்து காக்க வரும் பணியாளர்கள் சட்டென (உடனே) கண்டு உணர்ந்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொருட்களை பற்றிய ஒரு அடையாளம் ஆகும். பொருட்களால் விளையவல்ல தீமைகள் எத்தன்மையது என்று அறிவிக்கப் பயன்படும், நிறங்களாலும் எண்களாலும் உணர்த்தும் சாய்க்கட்ட வடிவில் உள்ளக் குறியீடு. இதனை தீ சாய்க்கட்டம் (Fire diamond) என்று பேச்சு வழக்கில் அமெரிக்காவில் கூறுவதுண்டு.
குறியீடு
[தொகு]சட்டென விளங்கிக்கொள்ளுவதற்காக அமைந்த சாய்சதுரத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் வெவ்வேறு நிறக்குறியீடு கொண்டிருக்கும்.. நீல நிறம் உடல்நலத்திற்குத் தரவல்ல கேட்டைக் குறிக்கும், சிவப்பு நிறம் தீப்பற்றும் தன்மையைக் குறிக்கும், மஞ்சள் நிறம் வேதியியல் வினை நிகழவல்லதைக் குறிக்கும், வெள்ளை நிறம் சிறப்பான சில குறிப்பிட்ட கேடுகள் விளைய வல்ல சூழலைக்குறிக்கும். ஒவ்வொரு கேடும் எத்தனை வலிமை உடையதாகும் என்பதை விளையக்கூடிய கேட்டின் வீரியத்தை 0 முதல் 4 என்னும் எண்களால் குறிக்கபடும். எண் 4 என்றால் விளையும் கேடு மிகவும் வலிமையானது என்று பொருள். எண் 0 என்றால் வீரியம் குறைந்தது என்று பொருள்.
நீலம்/உடல்நலம் பற்றியது
[தொகு]- 4. மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டால் இறக்க நேரிடும், அல்லது பெரும் கேடு உடல்நலத்திற்கு விளையக்கூடும். (எடுத்துக்காட்டுகள்: ஹைட்ரஜன் சயனைடு (hydrogen cyanide))
- 3. மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டாலும் தற்காலிகமாக உடல்நலக்கேடு விளையக்கூடும், வற்ருள் சில நிலைத்தும் இருக்கலாம். (எடுத்துக்காட்டு: குளோரின் வளிமம்)
- 2. Intsதற்காலிகமாக உடல்நலக்கேடு விளையலாம். அது கடுமையானதாகவோ, அல்லது நிலைத்ததாகவோ இருக்கலாம். தொடர்ந்து இப்பொருளோடு தொடர்பு கொள்ளுவது கேடு விளைவிக்கலாம்.
- 1. இப்பொருளோடு தொடர்பு கொண்டால் சிறிதளவே எரிச்சல் முதலிய இடையூறு நிகழும், ஆனால் அவை தற்காலிகமானது. (எடுத்துக்காட்டு: டர்ப்பன்ட்டைன்)
- 0. Expo பெரும்பாலும் ஏதும் கேடு விளைவிக்காத பொருள், ஆனால் தீப்பற்றக்க்கூடியதாக இருக்கலாம் (எடுத்துக்காட்டு: கடலை எண்ணெய்)
சிவப்பு/தீப்பற்றும் தன்மை (தீப்பற்றுமை)
[தொகு]- 4. சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் முற்றுமாய் ஆவியாகி காற்றில் எளிதாகக் கலந்து எரியக்கூடிய பொருள். (எடுத்துக்காட்டு: புரோப்பேன் - இதன் தீப்பாற்றும் வெப்பநிலை 73°F க்கும் குறைவானது.
- 3. சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் தீப்பற்றக்கூடிய நீர்மப்பொருளோ அல்லது திண்மப்பொருளோ இது (எடுத்துக்காட்டு: பெட்ரோல்(காசொலீன்) என்னும் எரியெண்ணெய்)
- 2. ஓரளவிற்கு சூடேற்ற வேண்டும், அப்பொழுதுதான் தீப்பற்ற வல்லது. (எடுத்துக்காட்டு: டீசல் எண்ணெய் - இதன் தீப்பற்றும் வெப்பநிலை 100°F முதல் 200°F.
- 1. முதலிலேயே சூடேற்றப்பட்டிருந்தால் தீப்பற்ற வாய்ப்புள்ள பொருள் (எடுத்துக்காட்டு: கனோலா எண்ணெய் -இதன் தீப்பற்றும் வெப்பநிலை 200°F ஐயும் மீறியது.
- 0. Willதீப்பற்றி எரியாத பொருள் (எடுத்துக்காட்டு: நீர்)
மஞ்சள்/வேதியையல் வினை கொள்ள வல்லவை (இயையுமை)
[தொகு]- 4. கடல்மட்ட காற்றழுத்ததிலும், அறை வெப்பநிலையிலும் வேதியியல் வினையால் எளிதாக வெடிக்க வல்லது (எடுத்துக்காட்டு: நைட்ரோகிளிசரீன் (Nitroglycerin)
- 3. Capaஇதுவும் கடல்மட்ட காற்றழுத்ததிலும், அறை வெப்பநிலையிலும் வேதியியல் வினையால் வெடிக்கவல்லது ஆனால் இந்நிகழ்வைத்தொடக்க ஒரு தூண்டுகோல் தேவை. இல்லாவிடில், இத்தகைய நிகழ்வுக்கு இப்பொருட்கள் அடைபட்ட ஓரிடத்தில் சூடாக்கப்படவேண்டும், அல்லது திடீ்ரென தாக்கழுத்தம் தரப்படவேண்டும் (shockwaves), அப்பொழுது வெடிக்கவல்லது. இப்பொருட்கள் நீரோடு சேர்ந்து (வேதியியல் வினையால்) வெடிக்க வல்லது. (எடுத்துக்காட்டு: ஃவுளோரின் (ஃபுளோரின், Florine).)
- 2. Undeuஉயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும், நீருடன் சேர்ந்தோ அல்லது பிற வகைகளிலோ கடுமையான வெடிப்பு போன்ற விளைவு ஏற்படுத்த வல்ல பொருள். (எடுத்துக்காட்டு: கால்சியம்
- 1. Normஇப்பொருள் பெரும்பாலும், அதிகம் மாறாமல், நிலையாக இருக்கக்கூடியது, ஆனால் உயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும் நிலைபிரியக்கூடியது. (எடுத்துக்காட்டு: பாஸ்பரஸ்(phosphorus))
- 0. Normதீயுடன் எதிர்ப்பட்டாலும் பொதுவாக நிலையாக இருக்கக்கூடியது, மேலும் நீரோடும் வினைகொள்ளாதது. (எடுத்துக்காட்டு: நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன்)
வெள்ளை/சிறப்புக் குறிப்புகள்
[தொகு]வெண்மையாக உள்ள கட்டத்தில் இருக்கும் குறிப்பானது ஒரு பொருளைப்பற்றிச் சிறப்பாக குறிப்பிட ஏதும் இருந்தால், அதற்கான குறியீட்டை அங்கு இடுவர். சில சிறப்புக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- '
W' - இக்குறியீடு, நீரோடு வழக்கத்திற்கு மாறான முறையிலோ, அல்லது தீங்குநேரும் வகையிலோ வேதியியல் வினைகொள்ளக் கூடியது (எ.கா: சீசியம் ) - 'OX' - ஆக்சைடாக்கி
- 'COR' - அரிக்கக்கூடியது; வலுமிக்க காடி(அமிலம், புளிமம்) அல்லது காரப் பொருள்(base)
- 'ACID' மற்றும் 'ALK' என்னும் எழுத்துக்கள் முறையே காடிக்கும், காரத்திற்கும் தனியாகவும் குறிப்பிடப்படும்.
- 'BIO' -உயிரியல் தீநேர்வுப்பொருள் (எளிதில் பரவி மனிதர்களின் உயிருக்கு தீமை நிகழ்த்தக்கூடிய உயிரியல் பொருட்கள். இவை நுண்ணியிரிகளாகவோ, நச்சுயிரிகளாகவோ, பிற நச்சுப்பொருட்களாகவோ இருக்கலாம்)
- அணுக்கதிர்வீச்சுக் கேடு உள்ளது என்று குறிக்கப் பயன்படும் மஞ்சள் முக்கோணத்துள் இருக்கும் கரியமூவிலைக் குறி .
- 'CRYO' - மிகுகுளிரியப் பொருள்
குறிப்பு: 'W' மற்றும் 'OX' ஆகிய இரண்டு குறிகள் மட்டும்தான் NFPA 704 ன் சீர்தரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையேற்பான குறிகள். பிறவெல்லாம் எளிதில் விளங்கிக்கொள்ளும் குறிகள் அவைகள் முறையேற்பு ஏதும் இல்லாமல் பயன்படுத்தப்படுவன.