உயர் ஆல்க்கேன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயர் ஆல்க்கேன்கள் (Higher alkanes) என்பவை ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட கார்பன்களைக் கொண்டிருக்கும் ஆல்க்கேன்களாகும்.. நோனேன் என்ற மிக இலேசான ஆல்க்கேனின் தீப்பற்று நிலை 25 பாகை செல்சியசு ஆகும். எனவே இதை அபாயகரமான எரிதன்மை கொண்ட சேர்மமென வகைப்படுத்தவில்லை.

அதிகமான எண்ணிக்கையில் கார்பனைப் பெற்றுள்ள ஆல்க்கேன்கள் உயர் ஆல்க்கேன்கள் என்ற போக்கிலும் இதனை வரையறுக்கலாம். ஆல்க்கேன்களை உயர் ஆல்க்கேன்களில் இருந்து வேறுபடுத்தி அறியவேண்டுமெனில், சாதாரண இயற்கைச் சூழலில் ஆல்க்கேன்கள் திண்மநிலையில் காணப்படும் என்பதைக் கொண்டு மட்டுமே பிரித்துணர முடியும்.

பயன்கள்[தொகு]

ஒன்பது கார்பன் அணுக்களைக் கொண்டஆல்க்கேன் நோனேன் முதல் பதினாறு கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்க்கேன் எக்சாடெக்கேன் வரையுள்ள ஆல்க்கேன்கள் உயர்பாகுநிலை கொண்ட திரவங்களாகும். இவை பெட்ரோலுடன் சேர்த்து பயன்படுத்துவதற்கு ஏற்புடைய பண்புகளையும் மிகக்குறைவாகவே கொண்டுள்ளன. மாறாக அவை டீசல் மற்றும் விமானப் போக்குவரத்திற்குத் தேவையான எரிபொருளில் பெரும்பங்கு வகிக்குமளவில் உருவாகின்றன. எரிதல் வேகத்தின் அளவீடான சிடேன் எண் மதிப்பைக் கொண்டு டீசல் எரிபொருட்கள் வகைப்படுத்தப்படுகின்றன. எக்சாடெக்கேனின் பழைய பெயர் சிடேன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தாழ்ந்த வெப்பநிலைகளிலும் துருவப் பகுதிகளிலும் இந்த அதிகவெப்பநிலை கொண்ட ஆல்க்கேன்களால் சில பிரச்சினைகள் நிகழ்கின்றன. இங்கெல்லாம் எரிபொருள் மிகவும் கெட்டியாவதால் சரியான பாய்வின்றி பாதிப்பு உண்டாகிறது. வாயு நிரலியல் பகுப்பாய்வின் தூண்டப்பட்ட காய்ச்சி வடித்தல் செயல்முறைக்கு சாதரணநிலை ஆல்க்கேன்களின் கலவைகள் கொதிநிலை தரமறியப் பயன்படுகின்றன.[1]


எக்சா டெக்கேனுக்குப் பிறகு உள்ள ஆல்க்கேன்கள் எரிபொருள் எண்ணெய் மற்றும் உயவு எண்ணெய் போன்ற முக்கியமான பொருட்களாக உருவாகின்றன. இரண்டாவது செயல்பாடாக அவை அரிப்பை எதிர்க்கும் முகவராகவும் அச்சமயத்தில் செயல்பட்டன ஏனெனில் அவற்றின் நீரெதிர்ப்பு தன்மை காரணமாக தண்ணீரானது உலோகத்தின் மேற்பரப்பை எட்டுவதில்லை. பல ஆல்க்கேன்கள் மெழுகு தயாரிக்கப் பயன்படும் பாரபின் மெழுகாக பயன்படுகின்றன. தேன்மெழுகோடு இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தல் கூடாது. அவை முதன்மையாக எசுத்தர்களைக் கொண்டிருக்கின்றன.

35 கார்பன் அணுக்களுக்கு மேற்பட்ட வளையங்களைக் கொண்டிருக்கும் ஆல்க்கேன்கள் நிலக்கீலில் காணப்படுகின்றன. அவை சாலைகள் மேம்பாட்டுக்கு மாதிரியாகப் பயன்படுகின்றன. எனினும் உயர் ஆல்க்கேன்கள் பொதுவாக சிதைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாகப் பயன்படுகின்றன.

பண்புகள்[தொகு]

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பண்புகள் நேரியல் ஆல்க்கேன்களைச் சார்ந்தவையாகும்.

நோனேன் முதல் எக்சா டெக்கேன் வரை[தொகு]

நேரியல் ஆல்க்கேன்கள் பொதுவாக பொதுவாக சாதாரண சூழலில் திரவநிலையில் காணப்படுகின்றன.[2]

நோனேன்
டெக்கேன்
அண்டெக்கேன்
டோடெக்கேன்
டிரைடெக்கேன்
டெட்ராடெக்கேன்
பெண்டாடெக்கேன்
எக்சாடெக்கேன்
வாய்ப்பாடு C9H20 C10H22 C11H24 C12H26 C13H28 C14H30 C15H32 C16H34
சிஏஎசு எண் [111-84-2] [124-18-5] [1120-21-4] [112-40-3] [629-50-5] [629-59-4] [629-62-9] [544-76-3]
வாய்ப்பாட்டு எடை
(கி/மோல்)
128.26 142.29 156.31 170.34 184.37 198.39 212.42 226.45
உருகுநிலை
(°C)
−53.5 −29.7 −25.6 −9.6 −5.4 5.9 9.9 18.2
கொதிநிலை
(°C)
150.8 174.1 195.9 216.3 235.4 253.5 270.6 286.8
அடர்த்தி
(கி/மோல்l 20 °C இல்)
0.71763 0.73005 0.74024 0.74869 0.75622 0.76275 0.76830 0.77344
பாகுத்தன்மை
(cP 20 °Cஇல்)
0.7139 0.9256 1.185 1.503 1.880 2.335 2.863 3.474
தீப்பற்று நிலை
(°C)
31 46 60 71 79 99 132 135
தானாகத் தீப்பற்றும்
வெப்பநிலை
(°C)
205 210   205   235   201
வெடிபொருள்
வரம்புகள்
0.9–2.9% 0.8–2.6%         0.45–6.5%  

எப்டாடெக்கேன் முதல் டெட்ராகோசேன் வரை[தொகு]

இக்குழுவில் தொடங்கி ஆல்க்கேன்கள் பொதுவாக சாதாரண சூழலில் திண்ம நிலையில் காணப்படுகின்றன.

   
எப்டாடெக்கேன் 
 
ஆக்டாடெக்கேன் 
 
நோனாடெக்கேன் 
 
ஐசோசேன் 
 
எனிவைகோசேன் 
 
டோகோசேன் 
 
டிரைகோசேன் 
 
டெட்ராகோசேன் 
வாய்ப்பாடு C17H36 C18H38 C19H40 C20H42 C21H44 C22H46 C23H48 C24H50
சிஏஎசு எண் [629-78-7] [593-45-3] [629-92-5] [112-95-8] [629-94-7] [629-97-0] [638-67-5] [646-31-1]
வாய்ப்பாடு எடை (கி/மோல்) 240.47 254.50 268.53 282.55 296.58 310.61 324.63 338.66
உருகுநிலை (°செ) 21 28–30 32–34 36.7 40.5 42 48–50 52
கொதிநிலை (°செ) 302 317 330 342.7 356.5 224 2 kPa இல் 380 391.3
அடர்த்தி (கி/மி.லி) 0.777 0.777 0.786 0.7886 0.792 0.778 0.797 0.797
தீப்பற்று நிலை (°செ) 148 166 168 176        

பெண்டாகோசேன் முதல் டிரையகோண்டேன் வரை[தொகு]

   
பெண்டாகோசேன் 
 
எக்சாகோசேன் 
 
எப்டாகோசேன் 
 
ஆக்டாகோசேன் 
 
நோனாகோசேன் 
 
டிரையாகோண்டேன் 
வாய்ப்பாடு C25H52 C26H54 C27H56 C28H58 C29H60 C30H62
சிஏஎசு எண் [629-99-2] [630-01-3] [593-49-7] [630-02-4] [630-03-5] [638-68-6]
வாய்ப்பாட்டு எடை (கி/மோல்) 352.69 366.71 380.74 394.77 408.80 422.82
உருகுநிலை (°செ) 54 56.4 59.5 64.5 63.7 65.8
கொதிநிலை (°செ) 401 412.2 422 431.6 440.8 449.7
அடர்த்தி (கி/மிலி) 0.801 0.778 0.780 0.807 0.808 0.810

என்டிரையாகோண்டேன் முதல் எக்சாடிரையாகோண்டேன் வரை[தொகு]

   என்டிரையா
கோண்டேன்
 
 டோடிரையா
கோண்டேன் 
 டிரைடிரையா
கோண்டேன் 
 டெட்ராடிரையா
கோண்டேன் 
 பெண்டாடிரையா
கோண்டேன் 
 எக்சாடிரையா
கோண்டேன் 
வாய்ப்பாடு C31H64 C32H66 C33H68 C34H70 C35H72 C36H74
சிஏஎசு எண் [630-04-6] [544-85-4] [630-05-7] [14167-59-0] [630-07-9] [630-06-8]
வாய்ப்பாட்டு எடை (கி/மோல்) 436.85 450.88 464.90 478.93 492.96 506.98
உருகுநிலை (°செ) 67.9 69 70–72 72.6 75 74–76
கொதிநிலை (°செ) 458 467 474 285.4 at 0.4 kPa 490 265 at 130 Pa
அடர்த்தி (கி/மிலி) 0.781 at 68 C[3] 0.812 0.811 0.812 0.813 0.814

மேற்கோள்கள்[தொகு]

  1. ASTM D5399-09, Standard Test Method for Boiling Point Distribution of Hydrocarbon Solvents by Gas Chromatography
  2. Karl Griesbaum, Arno Behr, Dieter Biedenkapp, Heinz-Werner Voges, Dorothea Garbe, Christian Paetz, Gerd Collin, Dieter Mayer Hartmut Höke "Hydrocarbons" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_227 10.1002/14356007.a13_227
  3. Weast, Robert C., தொகுப்பாசிரியர் (1982). CRC Handbook of Chemistry and Physics (63rd ). Boca Raton, Fl: CRC Press. பக். C-561. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்_ஆல்க்கேன்கள்&oldid=1872386" இருந்து மீள்விக்கப்பட்டது