பயனர் பேச்சு:Subramachandran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Subramachandran!

வாருங்கள் Subramachandran, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 15:13, 27 டிசம்பர் 2009 (UTC)

வணக்கம், சபரிமலை பற்றிய கட்டுரைக்கு நன்றி. பொதுவாக தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் தவிர வேறு மொழிகளில் கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதில்லை. எனவே, Sabarimala என்ற தலைப்பு சபரிமலை என மாற்றப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \பேச்சு 09:09, 6 பெப்ரவரி 2010 (UTC)

இன்றும் குருவாயூர் ஏகாதசி என்ற கட்டுரையை கூகுள் தமிழாக்கம் மூலமாக ஆங்கிலத்தலைப்பில் உள்ளிட்டுள்ளீர்கள். தலைப்புகளை தமிழில் இடுமாறு மீண்டும் வேண்டுகிறோம். தவிர விக்கியாக்கம் மற்றும் உசாத்துணைகள் இன்றி தமிழ் விக்கிப்பீடியா நடைக்கு ஏற்ப கட்டுரைகள் இல்லை. உங்கள் பங்களிப்பு பயனுள்ளதாக இருக்க த.வி வழிகாட்டல் பக்கங்களைக் காணவும்.--மணியன் 14:11, 15 பெப்ரவரி 2010 (UTC)

அச்சன்கோவில் நதி[தொகு]

Subramachandran,நீங்கள் இட்டக்கட்டுரையை மீளவும் பார்த்தீர்களா ? ஒரு விக்கிப்பீடியாக் கட்டுரை போன்றே இல்லை. அடைப்புகளில் எண்கள் அப்படியே உள்ளன. சில hidden tooltips போன்ற ஆங்கில வாக்கியங்கள் இல்லை. மூல ஆங்கிலவிக்கியில் உள்ளப் படங்கள், உள்ளிணைப்புகள் இல்லை. தயவு செய்து விக்கி வழிகாட்டல்களை படித்து செயல்படுங்கள். ஏதேனும் உதவி/ஐயம் தீர்வு தேவை எனில் தயங்காது கேளுங்கள். இல்லையெனில் இப்பக்கங்கள் நீக்கப்படலாம்.--மணியன் 04:48, 12 மார்ச் 2010 (UTC)

அணுசக்தி[தொகு]

இந்தியாவில் அணுசக்தி தொடர்பான கட்டுரைகளை உருவாக்கிவருவதற்கு எனது பாராட்டுகள். ஆங்கில விக்கியில் உள்ள வார்ப்புருவை இங்கு உருவாக்கியுள்ளேன். பின்வரும் நிரலை உங்கள் கட்டுரைகளின் இறுதியில் இணைத்தால்

{{இந்தியாவில் அணுசக்தி}}

கீழுள்ள வார்ப்புரு இணைந்துவிடும். இந்த வார்ப்புருவில் உள்ள ஆங்கில தலைப்புகளை தமிழில் மாற்ற, இதில் “தொ” என்ற தொடுப்பை சொடுக்குங்கள். மாற்றி விட்டு அப்படியே இங்கிருந்து கூடு கட்டுரைகளை உருவாக்கி விடலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

--சோடாபாட்டில் 14:14, 28 அக்டோபர் 2010 (UTC)

nowiki[தொகு]

முன்னும் பின்னுமுள்ள் "nowiki" விடுத்து இடையிலுள்ள நிரல்துண்டை மட்டும் காபி செய்து ஒட்டுங்கள். --சோடாபாட்டில் 08:18, 29 அக்டோபர் 2010 (UTC)

இரு விஷயங்கள்[தொகு]

  1. கட்டுரையின் தலைப்பை மீண்டும் தலைப்பு போல கட்டுரையுள் தரத் தேவையில்லை. அதற்கு பதிலாக. அறிமுக வாக்கியத்தில் தலைப்பின் சொற்களை தடித்த எழுத்துகளாக மாற்றி விடுங்கள்
  2. <references/> டேக் சேர்க்கும் இடத்துக்கு மேல் ஒரு தலைப்பு ==மேற்கோள்கள்== என்று கொடுத்துவிடுங்கள். இணைப்புகள் கட்டுரையில் தனிப்பகுதியில் வருவது போல அமைய வேண்டும்.

இதுவரை நீங்கள் உருவாக்கியுள்ள அணுசக்தி தொடர்பான கட்டுரைகளில் நான் இந்த மாற்றங்களை செய்துள்ளேன். ஏதேனும் ஐயம் இருப்பின் அவற்றை ஒரு முறை பாருங்கள்.--சோடாபாட்டில் 14:39, 2 நவம்பர் 2010 (UTC)

ஒரு சிறு திருத்தம். மேற்கோள்கள் references க்கு மேல் இட வேண்டும். (நீங்கள் கீழே இட்டிருந்தீர்கள், நான் மாற்றி விட்டேன்).--சோடாபாட்டில் 13:53, 3 நவம்பர் 2010 (UTC)

ஒரு சந்தேகம்[தொகு]

எனக்கு ஒரு சந்தேகம். Kalpakkam Atomic Reprocessing Plant = கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம் என்று எழுதியுள்ளீர்கள். அணுக்கரு என்றால் nuclear தானே?. இங்கே சரியாக வருமா?--சோடாபாட்டில் 10:08, 6 நவம்பர் 2010 (UTC)


திரு சோடாபாட்டில் அவர்களே:

வணக்கம்.

இதோ வெப் துனியாவில் ஒரு செய்தி: இங்கே அணு எரிபொருள் மறு சுழற்சி என பொருள் படும் படி கல்பாக்கத்தின் அணுமின் நிலைய இயக்குனர் கூறியுள்ளார்:


1.வேக ஈனுலைத் தொழில் நுட்பத்தில் இந்தியா தலைமையிடம் பெறும்: பல்தேவ் ராஜ்! செவ்வாய், 25 நவம்பர் 2008( 17:08 IST )

வேக ஈனுலை அணு மின் தொழில் நுட்ப ஆய்விலும் நடைமுறையிலும் முன்னனியில் இருந்துவரும் நமது நாடு, 2020ஆம் ஆண்டு உலகின் தலைமை இடத்தை வகிக்கும் நாடாக உயரும் என்று அணு விஞ்ஞானி பல்தேவ் ராஜ் கூறியுள்ளார்.


பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மீண்டும் இத்தொழில் நுட்பத்தை கையாளத் துவங்கியுள்ளதென்றும் கூறிய பல்தேவ் ராஜ், கல்பாக்கத்தில் நிறுவப்படும் வேக ஈனுலை 2010ஆம் ஆண்டு செயல்படத்துவங்கும் என்றும், அது 40 ஆண்டுகளுக்கு செயல்படும் என்றும் கூறினார். அணு மின் சக்தித் தொழில் நுட்பத்தில் வேக ஈனுலை தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே அணு எரிபொருள் மிக பாதுகாப்பான முழுமையான மறு சுழற்சியின் வாயிலாக ஆபத்தின்றி பயன்படுத்தி முடிக்கப்படுகிறது என்றும், அதன் மூலம் அணு எரிபொருள் சுழற்சி முழுமை பெருகிறது என்றும் கூறினார்.

அணு மின் தொழில் நுட்பத்தில் முதல் கட்டமான கடின நீர் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளில் இருந்து உருவாகும் புளூடோனியத்தை, யுரேனியத்துடன் கலந்து அதனை வேக ஈனுலையில் (Fast breeder Reactor) பயன்படுத்தும்போது, எந்த அளவிற்கு அணு எரிபொருள் ஈனுலையில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு ஈடாக மேலும் அணு எரிபொருள் கிடைக்கும் என்பதால் இது அணு எரிபொருளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு உதவுவது மட்டுமின்றி, கதிர் வீச்சு ஆபத்தற்ற இறுதிக் கழிவை அளிக்கிறது. எனவே இதனை எரிபொருள் சுழற்சியின் முழுமை என்று அழைக்கப்படுகிறது.

கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுவரும் 500 மெகா வாட் வேக ஈனுலைக்கான கட்டமைப்புப் பணிகள் முடிந்துவிட்டதெனவும், அணு உலையை நிறுவுவதற்கான பணிகள் துவங்கிவிட்டதாகவும் கூறிய பல்தேவ் ராஜ், வேக ஈனுலைத் தொழில் நுட்பத்தின் மூலம் மட்டும் 2052ஆம் ஆண்டில் 275 கிகா வாட் (ஒரு கிகா வாட் = 1000 மெகா வாட்) மின்சாரம் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

இந்தியா கடைபிடித்துவரும் 3 கட்ட அணு ஆய்வுத் திட்டத்தில் வேக ஈனுலை இரண்டாம் கட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ வெப் துனியாவில் மற்றும் ஒரு செய்தி: இங்கே அணு எரிபொருள் மறு ஆக்கம் என பொருள் படும் படி கல்பாக்கத்தின் அணுமின் நிலைய இயக்குனர் கூறியுள்ளார்:


2.அணு எரிபொருள் மறு ஆக்கத்தில் இந்தியா முன்னணி நாடு : பல்தேவ் ராஜ்! வியாழன், 2 ஆகஸ்ட் 2007( 21:27 IST ) Webdunia

webdunia photo FILE அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை நாடாக உள்ளது என்றும், இதில் எந்த நாட்டின் தொழில்நுட்ப உதவியும் இந்தியாவிற்குத் தேவையில்லை என்று அணு விஞ்ஞானி பல்தேவ் ராஜ் கூறினார்!

சென்னை உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று நடந்த இயற்பியல் ஆய்வு கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றியதற்குப் பிறகு தமிழ்.வெப்துனியா.காம் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு செவ்வியில், அணு எரிபொருள் மறு ஆக்கத்திற்கு உயர் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளிடம் இந்தியா எதிர்பார்த்திருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் அடிப்படையற்றது, வெறும் மாயை என்று பல்தேவ் ராஜ் கூறினார்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு சக்தி மையத்தின் இயக்குநராக உள்ள முனைவர் பல்தேவ் ராஜ், 1960 ஆம் ஆண்டிலேயே அணு எரிபொருளை மறு ஆக்கம் செய்யும் தொழில்நுட்பத்தை நோக்கிய ஆய்வில் இந்தியா ஈடுபடத் துவங்கியது என்று கூறினார்.

"மறு ஆக்க தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆய்வை இந்தியாவின் அணு சக்தி ஆராய்ச்சியின் முன்னோடிகளில் ஒருவரான ஹெச்.என். சேத்னா துவக்கி வைத்தார். அந்த ஆய்வு நடவடிக்கையின் இயக்குநராக எம்.ஆர். சீனிவாசன் பொறுப்பேற்று முன் நடத்தினார்.

அன்றிலிருந்து சற்றேறக்குறைய 50 ஆண்டுகளாக மறு ஆக்க தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்திய அணு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக இன்று அத்தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் எந்தவொரு நாட்டையும் விட முன்னணியில் உள்ளது" என்று கூறிய பல்தேவ் ராஜ், கார்பைட் எரிபொருளை மறு ஆக்கம் செய்து மீண்டும் பயன்படுத்திய சாதனை இந்தியா மட்டுமே நிகழ்த்தியுள்ளது என்று கூறினார்.

"அணு எரிபொருள் மறு ஆக்க தொழில்நுட்பம் முற்றிலும் சுயச்சார்புடையது. 100 விழுக்காடு அது நாம் உருவாக்கிய உள்நாட்டு தொழில்நுட்பம். எனவே, இத்துறையில் எந்த நாட்டையும் நாம் சார்ந்திருக்கவில்லை என்று பல்தேவ் ராஜ் கூறினார்.


இதன் அடிப்படையில் தலைப்பை அணு எரிபொருள் மறு ஆக்க அல்லது மறு சுழற்சி நிலையம் என்று அமைக்கலாம்.

subramachandran


உங்கள் மின்னஞ்சலும், இந்த விளக்கமும் என் சந்தேகத்தைப் போக்கின. எனக்கு இயற்பியல்/அணு இயற்பியல் எல்லாம் +2 வில் படித்ததோடு சரி :-). ரொமப யோசிக்காமல் atomic =அணு ; nuclear = அணுக்கரு என்று மனதில் கொண்டிருந்ததால் இப்படியொரு சந்தேகம் வந்து விட்டது. உங்கள் விரிவான விளக்கங்களுக்கு நன்றி.--சோடாபாட்டில் 05:52, 7 நவம்பர் 2010 (UTC)

செய்தி[தொகு]

த. விக்கியில் செய்திக் கட்டுரைகள் வெளியிடுவதில்லை. அவற்றை விக்கி செய்திகளில் வெளியிடுகிறோம். நீங்கள் உருவாக்கிய புற்றுநோய் சிகிச்சை: டிஆர்டிஒ அறிவியலறிஞர்கள் கண்டுபிடித்த புதிய சிகிச்சை முறை விக்கி செய்திகளுக்கு பொருத்தமானது. http://ta.wikinews.org என்ற தளத்தில் கணக்கேற்படுத்தில் உருவாக்கி விடுங்கள்.--சோடாபாட்டில் 05:46, 17 நவம்பர் 2010 (UTC)

உ.தெ. அறிவிப்பு[தொகு]


தகவல் அளித்தமைக்கு நன்றி. தற்பொழுது என்னால் எழுத இயலவில்லை, நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் நான் எழுதுவதற்கு முனைவேன். Subramachandran

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Subramachandran&oldid=979499" இருந்து மீள்விக்கப்பட்டது