பயனர் பேச்சு:Kalaiarasy/உயிரியல் கட்டுரைகள்
விக்கித் திட்டம் உயிரியல்
[தொகு]கணிதம், கணினியியல், கட்டிடக்கலை, இயற்பியல், இலத்திரனியல் போன்ற துறைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றவை. உயிரியல் துறையில் தற்போது ஆழமான தலைப்புகளில் பங்களிக்கக்கூடிய குறைந்தது 4 பயனர்கள் உள்ளார்கள். நீங்கள், கார்த்திக், மகிழ்நன், ரவி. முடிந்தால், நீங்கள் நால்வரும் கூட்டாக ஒரு விக்கித் திட்டம் உயிரியல் தொடங்கலாம். கணினியியலில் நல்ல தமிழில் கட்டுரைகள் எழுத அங்கு பரந்த பயன்பாட்டில் இருக்கும் (http://www.tcwords.com/) கலைச்சொற்கள் துணை புரிகின்றன. அது போல, பல அடிப்படைத் தலைப்புகள்/கலைச்சொற்கள் கொண்ட ஒரு விரிவான பட்டியலைத் தொடங்குவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். பல பட்டியல்களின் கூட்டுகாக் கூட இது இருக்கலாம். பாக்க: தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் --Natkeeran 15:22, 19 ஜூலை 2009 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்
[தொகு]விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:04, 19 ஜூலை 2009 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்
[தொகு]நீண்ட நாட்களின் பின்னர் இன்றுதான் இங்கு புகுபதிகை செய்தேன். எனக்கு இன்னமும் விக்கி நடைமுறைகளும், எழுதும் முறைகளும், பாவனை முறைகளும் இலகுவாக கைவரவில்லை :(. அதுவும் நான் மிக மெதுவாக இங்கே இயங்குவதற்கு ஒரு காரணம். தவிர, நேரமின்மையும், மொழிப்புலமை குறைவும், இங்கே அதிகமாக பங்களிக்கும் ஆர்வத்துக்கு பெரும் தடையாக இருக்கிறது. இருந்தாலும், என்னையும் உங்கள் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தில் இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சியும், எனது நன்றிகளும். முடிந்தவரையில் இங்கே பங்களிப்பு செய்ய முயல்கின்றேன். இருந்தாலும், உங்கள் அனைவரதும் மொழிப்புலமை என்னை சிறிது மிரட்சி அடைய வைக்கிறது :(. பார்க்கலாம், நானும் முயற்சி செய்கின்றேன். நன்றி. -- கலை
- மொழிப் புலமையாவது ஒண்ணாவது! அதெல்லாம் இங்கு வேண்டியதில்லைங்க. இங்கு தேவை எளிய நடை, எல்லோருக்கும் புரியுமாறு எழுதுதல். பேச்சுத்தமிழ், தமிங்கில நடையில் இல்லாமல், கட்டுரை நடையில், எவ்வளவுக்கு எவ்வளவு எளிதாகவும் இயல்பாகவும் எழுத முடியுமோ அதுவே மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. சரியான சொல் கிடைக்கவில்லை என்றால், ஆங்கிலச்சொல்லோ, வேறு எந்த மொழியில் தெரிந்த சொல்லோ இட்டு எழுதுங்கள். வேறு யாரேனும் வந்து மேம்படுத்த முயலுவார்கள். நீங்கள் கூறுவது ஒருசிறிதும் தடையாக இருக்கவே கூடாது! கருத்துதான் முதன்மை, தகவல்தான் முதன்மை. அதனைச் சொல்லும் நடையின் எளிமை, பொதுமை இவையும் முக்கியம். ஒரு சொற்றொடர் நீளமாக அமைந்து விட்டால், வேறு யாரேனும் வந்து இரண்டு மூன்று சொற்றொடர்களாக மாற்றியும் உதவுவர். பல நல்ல கருத்துகள் பலரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதுதானே நோக்கம்? மொழிப்புலமை ஏதும் தேவை இல்லைங்க. யாரும் எழுதலாம். பேச்சு நடை தமிங்கில நடை இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம், குழுவுக்கும் குழு மாறும், ஆகவே பொதுமை கருதி கட்டுரை/எழுத்து நடையைப் பரிந்துரைக்கிறோம். மேலும். இது ஒரு சீரிய ஆக்கம் அல்லவா? ஆகவே திருந்திய நடையில் இருப்பது நல்லது (அதனால் கடினமான நடையில் இருக்க வேண்டும், புலமை நடையில் இருக்க வேண்டும் என்று பொருளல்ல). உங்கள் முயற்சி வெற்றிகள் குவிக்க வாழ்த்துகள்.--செல்வா 02:44, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
- நன்றிகள். நிச்சயமாய் எனது பங்களிப்பை தர முயற்சி செய்கிறேன். -- கலை
காச நோய்க் கட்டுரை
[தொகு]கலை மிக அருமையாக நீங்கள் காச நோய் என்னும் கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள். இப்படி இன்னும் பல கட்டுரைகள் உங்கள் நல்லுழைப்பால் உருவாகித் தமிழர்கள் பயன் பெற வேண்டும் என வேண்டுகிறேன். அவர்களில் ஒருவனாகிய நான் நன்றியுடையேன். --செல்வா 23:59, 27 செப்டெம்பர் 2009 (UTC)
- மிகவும் நன்றி. உண்மையில், நீங்கள் எல்லாம் தமிழரது பயன் கருதியும், தமிழின் முன்னேற்றம் கருதியும் உழைப்பதைப் பார்த்தால் நான் செய்வது கணக்கிலேயே வருமா தெரியாது. இருந்தாலும் என்னாலானவரை இங்கே பங்களிக்க முயல்கிறேன். --கலை 22:25, 28 செப்டெம்பர் 2009 (UTC)
ஆஸ்துமா
[தொகு]Asthma பற்றிய கட்டுரை ஒன்றை தொடங்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு வேறு நல்ல தமிழ்சொல் ஏதாவது உண்டா?--கலை 14:24, 3 டிசம்பர் 2009 (UTC)
கலை,
தொய்வு என்றொரு வருத்தம் இருக்கிறது.
அதுதான் Asthma வா?
--Chandravathanaa 15:03, 3 டிசம்பர் 2009 (UTC)
- நன்றி சந்திரவதனா! ஆஸ்துமாவை தொய்வு என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் அது சரியான தமிழ்ச்சொல்தானா என்று தெரியவில்லை.--கலை 23:32, 3 டிசம்பர் 2009 (UTC)
- கலை, இலங்கையில், Asthma என்பதற்குப் பொது வழக்காக "தொய்வு", "இழுப்பு", "முட்டு" போன்ற பல பெயர்கள் வழங்குகின்றன. இவையெல்லாம் தமிழ்ச் சொற்கள் என்பதில் ஐயமில்லை. மதராஸ் தமிழ் அகராதி "தொய்வு" என்னும் சொல்லுக்கு "சுவாச முட்டு", "ஈழை" எனப் பொருள் தருகிறது. "இழுப்பு" என்பதற்கும் Asthma என்று பொருள் கொடுத்துள்ளது. மருத்துவர் சாமி சண்முகம் என்பவரது மருத்துவக் கலைச் சொல் தொகுதி Asthma என்னும் சொல்லுக்கு "ஈழை நோய்" எனத் தமிழ் கொடுத்துள்ளது. விக்சனரியும், "ஈழை நோய்", "மூச்சுத்தடை நோய்", "மூச்சுப் பிடிப்பு நோய்" போன்ற தமிழ்ச் சொற்களைத் தருகிறது. நீங்கள் கட்டுரைக்கு "ஈழை நோய்" என்று தலைப்புக் கொடுத்துக் கட்டுரையில் பிற சொற்களையும் குறிப்பிடலாம் என்பது எனது கருத்து.மயூரநாதன் 05:05, 4 டிசம்பர் 2009 (UTC)
- இப்போதுதான் இந்த 'இழுப்பு', 'முட்டு' என்ற சொற்களும் நினைவில் வருகின்றன. இவையெல்லாம் அறிந்திருந்தவையே, ஆனாலும் மறந்து போய் விட்டேன் :(. நீங்கள் கூறியபடி 'ஈழை நோய்' என்னும் தலைப்பில் கட்டுரையை ஆரம்பித்து, ஏனைய பெயர்களையும் போட்டு விடுகின்றேன். நன்றிகள்--கலை 08:20, 4 டிசம்பர் 2009 (UTC).
- கலை, இலங்கையில், Asthma என்பதற்குப் பொது வழக்காக "தொய்வு", "இழுப்பு", "முட்டு" போன்ற பல பெயர்கள் வழங்குகின்றன. இவையெல்லாம் தமிழ்ச் சொற்கள் என்பதில் ஐயமில்லை. மதராஸ் தமிழ் அகராதி "தொய்வு" என்னும் சொல்லுக்கு "சுவாச முட்டு", "ஈழை" எனப் பொருள் தருகிறது. "இழுப்பு" என்பதற்கும் Asthma என்று பொருள் கொடுத்துள்ளது. மருத்துவர் சாமி சண்முகம் என்பவரது மருத்துவக் கலைச் சொல் தொகுதி Asthma என்னும் சொல்லுக்கு "ஈழை நோய்" எனத் தமிழ் கொடுத்துள்ளது. விக்சனரியும், "ஈழை நோய்", "மூச்சுத்தடை நோய்", "மூச்சுப் பிடிப்பு நோய்" போன்ற தமிழ்ச் சொற்களைத் தருகிறது. நீங்கள் கட்டுரைக்கு "ஈழை நோய்" என்று தலைப்புக் கொடுத்துக் கட்டுரையில் பிற சொற்களையும் குறிப்பிடலாம் என்பது எனது கருத்து.மயூரநாதன் 05:05, 4 டிசம்பர் 2009 (UTC)
கலை, இந்த கட்டுரை உங்களை ஆர்வமூட்டக்கூடும். சிறு வயதில் இதை பற்றி எங்கோ படித்த ஞாபகம். --அராபத்* عرفات 08:21, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
குழந்தைப்பேறு
[தொகு]கலை, குழந்தைப்பேறு தொடர்பான கட்டாயம் இருக்க வேண்டிய தலைப்புகளில் நீங்கள் கட்டுரைகளை எழுதி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. அந்த வரிசையில் சவலைப் பண்பைப் பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 04:27, 14 செப்டெம்பர் 2010 (UTC)
- சவலைப் பண்பு என்றால் என்ன?--கலை 13:20, 14 செப்டெம்பர் 2010 (UTC)
- கருவுற்றுள்ள தாயின் முந்தைய குழந்தை தன் மீதான கவனம் குறைந்து விடுமோ என்று அஞ்சி அடம் செய்தலும் மாறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுதலும். -- சுந்தர் \பேச்சு 14:22, 14 செப்டெம்பர் 2010 (UTC)
- சுந்தர், ஊட்டச்சத்து குறைவான, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை சவலைக் குழந்தைகள் என அழைப்பதும் நடைமுறையில் உள்ளது. பார்க்கவும். சவலைப் பண்பு, சவலைக் குழந்தைகள் வேறு வேறா? --அராபத்* عرفات 04:27, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- அராபத்து, நான் முன்னர் கேள்விப்பட்டிருந்தது மாசமாயிருக்கும் தாய்மாரின் முந்தைய குழந்தை தன்மீதான அக்கறை குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக சேட்டைகள் செய்வது, உண்ண மறுப்பது போன்றவற்றைத் தான். இத்தகைய குழந்தைகள் ஊட்டம் குறைந்து உடல் மெலிவதும் உண்டு.
- ஆனால் நீங்கள் காட்டிய பொருளும் உள்ளதை பிற்பாடுதான் அறிந்தேன். கழகப் பேரகரமுதலியிலும் கிட்டத்தட்ட அந்தப் பொருளையே தந்துள்ளனர். முந்தையது பிந்தையதின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வோ என்னவோ? வேறு யாரும் அறிந்திருந்தால் கேட்டுப் பார்க்கலாம். செல்வா? -- சுந்தர் \பேச்சு 04:47, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- ஃவேபிரியசு அகரமுதலியில் நான் குறிப்பிட்ட முதலாவது பொருளைத் தந்துள்ளார்கள். -- சுந்தர் \பேச்சு 04:48, 15 செப்டெம்பர் 2010 (UTC)
நோய்களை வகைப்படுத்தல்
[தொகு]நாம் நோய்களை பொதுவான நோய்கள் என்ற பகுப்புக்குள் இட்டு வருகிறோம். அந்தப் பகுப்பு பெரிதாகி வளருகிறது. இதை ஒரு நல்ல முறைப்படி வகைப்படுத்தல் அவசியமாகும். எ.கா நோய்களுக்கும் தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான சர்வதேச புள்ளிவிய வகைப்பாடு. இதை மருத்துவம், உயிரியல் துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும். நன்றி. --Natkeeran 15:58, 9 அக்டோபர் 2010 (UTC)
வேளாண்மை, மருத்துவம்
[தொகு]கலை, இப்போது வேளாண் தொழில் தொடர்பான கட்டுரைகளும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளும் பெருகி வரும் நிலையில் உயிரியல் விக்கித்திட்டத்தின் துணைத் திட்டங்களாக அவற்றை உருவாக்கலாமா? -- சுந்தர் \பேச்சு 11:38, 20 ஏப்ரல் 2011 (UTC)
- இங்கே வேளாண்மையும் இருந்தபடியால்தான், அது தொடர்பான கட்டுரைகளையும் விக்கித்திட்டம் உயிரியலில் இன்று சேர்த்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி துணைத் திட்டங்கள் உருவாக்கலாம். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நலவியல் ஏற்கனவே உள்ளது. அதனையும் பாருங்கள்.--கலை 11:46, 20 ஏப்ரல் 2011 (UTC)
- ஓ, நலவியல் திட்டத்தை நான் பார்க்கவில்லை, கலை. நன்றி. இப்போது செந்தியும், கார்த்தியும், நீங்களும் பல மருத்துவக் கட்டுரைகளை உருவாக்குவதால் அவற்றை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டு வருவோம். வேளாண்மைத் திட்டம் இல்லாத நிலையில் நீங்கள் அக்கட்டுரைகளை உயிரியல் திட்டத்தில் சேர்த்தது முற்றிலும் சரியே. -- சுந்தர் \பேச்சு 13:57, 20 ஏப்ரல் 2011 (UTC)
துணைத் திட்டங்களாக உருவாக்கி விட்டு ஏதாவது வார்ப்புரு சேர்க்க வேண்டுமா? துணைத் திட்டத்தில் கட்டுரைகளைச் சேர்ப்பது எவ்வாறு?--கலை 19:26, 20 ஏப்ரல் 2011 (UTC)
நாரீனி / நாரினி வேறுபாடு
[தொகு](நாரினி (புரதம்), நாரீனி (புரதம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்சுப் பக்கப்படி.. 19:00, 11 மே 2011 பேச்சுப்பக்கப்படி நாரீனி என்பது பொருத்தமாக உள்ளது என்பதால் அன்று நான் இதனை வழிமாற்றி இருந்தேன்; தாங்கள் மீண்டும் (நாரீனி (புரதம்),நாரினி (புரதம்) பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: எழுத்து ... வழிமாற்றி இருந்தீர்கள், நாரினி என்று அழைப்பதா நாரீனி என்று அழைப்பதா என்பதைப் பற்றிய தங்களது பரிந்துரையை அருள்கூர்ந்து பேச்சு:நாரினி (புரதம்) இல் இடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.--செந்தி//உரையாடுக// 17:32, 22 மே 2011 (UTC)
- செந்தி! மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அண்மையில் பார்த்த சில பக்கங்களில் இந்த 'நாரினி (புரதம்)' என்ற சொல்லைக் கண்டிருந்தேன். உண்மையில் அந்த இரு சொற்களில் எந்தச் சொல் சரியானது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. எனக்கு தமிழாக்கத்தில் அதிகளவு அறிவு இல்லை. அதனால் பொதுவாக மற்றவர்கள் கொடுக்கும் விளக்கத்தை வைத்தே நான் சொற்களைத் தெரிவு செய்வேன். இன்று அந்தப் பக்கத்திற்கு வந்தபொழுது, தலைப்பில் நாரீனி (புரதம்) என்றும், கட்டுரையின் ஆரம்பத்தில் நாரினி (புரதம்) என்றும் இருந்ததைப் பார்த்தேன். அத்துடன் அண்மையில் பல இடங்களிலும் நாரினி (புரதம்) என்ற சொல்லையே கண்டிருந்தமையால், தலைப்பில் தவறுதலாக எழுத்துப் பிழை வந்து விட்டதோ என்று எண்ணித்தான் நகர்த்தினேன். நகர்த்துவதற்கு முன்னர் வரலாற்றையும், பேச்சுப் பக்கத்தையும் பார்த்திருக்க வேண்டும். அவற்றில் எதையுமே பார்க்காமல் நகர்த்தியது எனது தவறுதான். மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். அந்தப் பக்கத்தை மீண்டும் பழையபடி நகர்த்திவிட்டேன். அத்துடன், கட்டுரையில் உள்ள முதல் சொல்லையும் மாற்றி விடுகின்றேன்.--கலை 22:59, 22 மே 2011 (UTC)
- விக்சனரி மின்னஞ்சல் மூலம் தங்கள் மடலைப் படித்தேன்; அனைவருக்கும் தவறு ஏற்படுவது இயல்பே, எனக்கும் கூட தமிழ் பெரிதாக தெரியும் என்றில்லை; நான் உருவாக்குவதில் தவறுகள் இருக்கலாம், அதனால் செல்வா போன்றோரின் இறுதித் தீர்மானத்துக்குப் பின்னரே முடிவான சொற்கள் என எடுக்கவேண்டும் எனக் கருதுகிறேன், எனினும் சில சொற்கள் தெளிவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றைப் பயன்படுத்தலாம், பின்னர் மாற்றவேண்டிவரின் மாற்றலாம், துப்பரவாகப் பொருந்தாத சொற்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும், இப்போது அவை சிக்கல் தருகின்றன, எனினும் காலம் போகவில்லை. தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் இருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் அதிகமானவை தவறானது என்று நான் விக்சனரிக்கு இணைந்த காலம் தொடக்கம் வலியுறுத்தி வருகிறேன், அதன்படி தற்போதைய கலைச்சொல்லாக்கம் நன்மை தரும் ஒன்றாக உள்ளது. தங்களின் சேவை அளப்பெரியது. விக்கி உயிரியல் ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து இவற்றை காலப்போக்கில் களைவோம் எனும் நம்பிக்கை உள்ளது. நீங்கள் கூறியது போல தமிழ் விக்சனரியிலும் ஒரு துணைத்திட்டம் உருவாக்குவது நன்று.--செந்தி//உரையாடுக// 16:18, 25 மே 2011 (UTC)
நோய்கள் கட்டுரைகள்
[தொகு]நோய்கள் பற்றி நாம் ஒரு அடிப்படைக் கட்டுரை (3-5 வசனங்கள்) எழுதக் கூடியவாறு ஒரு அட்டவணை தாயரித்து தந்தீங்கள் என்றால், அந்த அட்டவணையை கூடாக பூர்த்தி செய்து, தானிங்கி மூலம் கட்டுரைகளை உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கருத்துக்களைப் இங்கே பகிருங்கள்.
தானியங்கி கட்டுரை
[தொகு]விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள் அட்டவணையாகவோ, பட்டியலாகவோ தகவல்களைத் தொகுக்கலாம். பட்டியலாகத் தகவல்களைத் தொகுப்பது இலகுவாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் கட்டுரைகள் உருவாக்கத்தில் நேர்த்தி இருக்கும். பின்னர் இந்த தகவல்களைத் தொகுத்து ஒரு தரவுத்தளம் உருவாக்கலாம். அது பின்னர் பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். மேலும் உங்கள் கருத்துக்களைக் அறிந்து. --Natkeeran 21:11, 12 சூன் 2011 (UTC)
அமீபா
[தொகு]வணக்கம்
அமீபா கட்டுரையில் சில செய்திகளைச் சேர்த்துள்ளேன். சரிபாருங்கள். நன்றி.பயனர்:Parvathisri
கேள்வி- cephalopod fins
[தொகு]வணக்கம் கலை, cephalopod fins -என்பதன் தமிழாக்கச் சொல் வேண்டும். நன்றி--Booradleyp 15:31, 26 சனவரி 2012 (UTC)
- எனக்கும் சரியாகத் தெரியவில்லை. Cephalopod இற்குத் தமிழ் அகரமுதலியில் தலைக்காலி என்று போட்டிருக்கின்றார்கள். Cephalopod இன் தமிழாக்கத்தைப் பார்க்கும்போதும், அந்த உயிரியின் உடல் அமைப்பை நோக்கும்போதும், இந்தப் பெயர் பொருத்தமானதாகவே தோன்றுகின்றது. எனவே Cephalopod fins ஐ தலைக்காலி துடுப்புக்கள் எனக் கூறலாமா?--கலை 10:15, 27 சனவரி 2012 (UTC)
நன்றி கலை.--Booradleyp 15:47, 27 சனவரி 2012 (UTC)
- ஆமாம் கலை மிகப்பொருத்தமாகக் கூறியிருக்கின்றீர்கள். cephalopod என்பது தலைக்காலிதான். cephal என்னும் பகுதி தலையைக் குறிக்கும், pod என்பதௌ காலைக் குறிக்கும் (tripod = முக்காலி). fin என்பதை, மீன் போன்ற நீர்வாழ்விலங்குக்குச் சிறகு, சிறை என்பர். மீன்சிறை, மீன்சிறகு என்பர். நீங்கள் தந்த பெயர் பொருத்தமான ஒன்றே.--செல்வா 11:09, 27 சனவரி 2012 (UTC)
பிடரிக்கோடன் பற்றி
[தொகு]பிடரிக்கோடன் கட்டுரையில், "ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும்," என்றுள்ளதே. இந்த வசனம் சரியா? பல்லி என்பது ஒரு species இல்லையா? ஓணான், ஓந்தி போன்றவை பல்லி வகைக்குள் வருவதுபோல் வசனம் இருப்பது சரியா? நான் அந்தக் கட்டுரையை குறுன்தட்டுத் திட்டத்திற்காக உரைதிருத்த முற்பட்டபோது எழுத சந்தேகம் இது. அறிந்து கொள்வதற்காகக் கேட்கின்றேன்.--கலை 08:59, 23 பெப்ரவரி 2012 (UTC)
- கலை, பல்லி என நாம் சில சிற்றினங்களை அழைக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் en:Lizard எனும் துணைவரிசை பல குடும்பங்களை உள்ளடக்கியது. தமிழில் அந்தத் துணைவரிசையையும் நாம் பல்லி என்ற பெயரிலேயே கட்டுரையாக ஆக்கியுள்ளோம். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டுமானால் அதன் இலத்தீனப் (கிரேக்கப்?) பெயரான Lacertilia என்பதன் வேர்களை அறிந்து தமிழில் மொழிபெயர்த்துப் பயன்படுத்தலாம். செல்வா போன்றோர் உதவக்கூடும். -- சுந்தர் \பேச்சு 14:40, 23 பெப்ரவரி 2012 (UTC)
- சுந்தர் Lacertili என்றால் "plural of Lizard tribe" என்கிறது ஆக்ஃசுபோர்டு அகராதி. இதுவொரு இலத்தீன் மொழிச்சொல்லில் இருந்து பிறந்தது. Lacertilian என்றால் "Belonging to Lacertilia" என்கிறது. ஆங்கிலத்தில் 1854 இல் Lacertilian வரிசை (order) பற்றி முதலில் பதிவாகியது, பின்னர் இன்று புகழ் பெற்றிருக்கும் நேச்சர் ஆய்விதழில், அன்றைய 1881 இல் பதிவவன ஒரு தொடரைக் குறிக்கின்றது அவ் அகராதி, "Nature 14 Apr. 551/1 Its lacertilian affinities are well shown in its long and rat-like tail.". இச்சொல்லின் மூலம் Lacert (இலத்தீன்) = A. Lizard (ஆங்கிலம்). இச்சொல் வைக்கிளிஃவு (Wycliff) விவிலியத்தில் கி.பி. 1382 இல் பதிவாகியது (OED: "1382 Bible (Wycliffite, E.V.) Lev. xi. 30 A lacert, that is a serpent that is clepid a liserd."). எனவே அடிக்கருத்து நீளமாக இருப்பது என்பது போல் தெரிகின்றது. இன்னொரு பொருள் சதைப் பற்றுள்ள என்பதாகும் (lacert என்றால் சதைப் பற்றுள்ள தசை என்றும் இன்னொரு பொருள் உண்டு). எனவே Lacertilia என்பது "பல்லி (உயிரின) வரிசை" என்பதுதான். நாம் "தட்டுமுட்டு", "அடிதடி" என்று கூட்டாகப் பேர் வைப்பது போல பல்லியோந்தித் துணைவரிசை எனப் பெயரிடலாம். செதிளூர்வன (Squamata) என்னும் வரிசைக்குள் இருக்கும் பழைய பகுப்பின் படி மூன்று துணைப்பகுப்புகள் உண்டு (1) பல்லியோந்திகள், (2)பாம்புகள், (3) மண்புழு போல் தோற்றமளிக்கும் ஆனால் செதிளுடைய புழுக்கள் = செதிற்புழுக்கள் Amphisbaenia. இவை தவிர, இப்பொழுது பொது ஒப்புதல் இல்லாத உடும்பு இனங்கள் (ஓந்தியுடும்புகள் (Iguania))முதலிய வேறு நான்கு விதமாகவும் பகுப்புகள் கூறுகின்றார்கள். எப்படியாயினும் பல்லி என்பதைத் துணைவரிசை என்று கொள்வது தவறாகாது. Cat family என்பதில் புலி, அரிமா (சிங்கம்) எல்லாம் இருப்பது போலக் கொள்ளலாம். நாம் புலிப்பூனைப் பேரினம், பல்லியோந்தித் துணைவரிசை எனக் குறிக்கலாம் என்பது என் கருத்து. Lcert என்றால் பல்லிதான் (lizard). --செல்வா 17:39, 23 பெப்ரவரி 2012 (UTC)
கலைச்சொற்கள்
[தொகு]வணக்கம், பட்டாம்பூச்சிகள்/வண்ணாத்திப் பூச்சிகள் பற்றிய கட்டுரைகளில் அவற்றின் பெயர்களை தமிழில் எப்படி எழுதுவது? எ.கா: Ceylon Rose என்பதை சிலோன் றோஸ் என எழுதலாமா? --Anton (பேச்சு) 05:46, 13 சூன் 2012 (UTC)
- Ceylon Rose என்பது அறிவியல் பெயரா? அவ்வாறாயின் சிலோன் றோஸ் (சரிந்த எழுத்துக்கள்) என எழுதிவிட்டு அடைப்புக் குறிக்குள் ஆங்கிலப் பெயரையும் கொடுக்கலாம். அறிவியல் பெயரை எழுதுவதற்கான முறை ஒன்று உள்ளது. [இருசொற் பெயரீடு]] பக்கத்தைப் பாருங்கள்.--கலை (பேச்சு) 07:56, 13 சூன் 2012 (UTC)
- இந்தப் பக்கத்தில் நீங்கள் கொடுத்த Ceylon Rose பெயரை உள்ளிட்டுப் பார்த்தேன். அது இந்தப் பக்கத்துக்கு இட்டுச் செல்கின்றது. அது Painted stork எனப்படும் பறவையின் பெயராக உள்ளது. அதன் அறிவியல் பெயர் Mycteria leucocephala என்பதாக இருக்கின்றது. அதாவது பேரினம் Mycteria ஆகவும், இனம் leucocephala ஆகவும் இருக்கும். அப்படியானால், Ceylon Rose ஒரு துணை இனமாக இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் பட்டாம்பூச்சி/வண்ணத்துப்பூச்சி தொடர்பான பெயரா அது?--கலை (பேச்சு) 08:10, 13 சூன் 2012 (UTC)
மிக்க நன்றி! மேலும் ஓர் கேள்வி. பறவைகளின் ஆங்கிலப் பெயர்களுக்கு தனித் தமிழ்ப் பெயர்கள் உள்ளதுபோல் வண்ணாத்திப் பூச்சிகளுக்கு இல்லையா? எ.கா. en:Oriental White-eye (Zosterops palpebrosus) எனும் பறவையின் தமிழ்ப்பெயர் வெள்ளைக் கண்ணி. Lime Butterfly (Papilio demoleus) பற்றிய ஓர் கட்டுரை எழுதுவதென்றால் தமிழில் லைம் பட்டபிளை என்றா தலைப்பிடுவது? --Anton (பேச்சு) 09:42, 13 சூன் 2012 (UTC)
- சிலவற்றுக்காவது தமிழ்ப்பெயர்கள் இருக்குமென்றே நினைக்கின்றேன். ஆனால் அத்தனையும் நாம் அறிந்ததாக இருக்காது. லைம் பட்டபிளை என்று தலைப்பிடுவதைவிடவும், நீங்களே பொருத்தமான தமிழ்ப் பெயரை உருவாக்கலாம் என நினைக்கின்றேன். நீங்கள் உருவாக்கும் பெயர் கட்டாயமாக ஆங்கிலத்தின் தமிழாக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சியைப் பற்றி அறிந்திருப்பின், அதற்கு மிகப் பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்யலாம். ஏனெனில், எல்லா வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தமிழில் பெயர் ஏற்கனவே இருக்குமா எனத் தெரியாது. தலைப்பைத் தெரிவு செய்து கட்டுரை உருவாக்கும்போது, அதன் பொதுப்பெயரை ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் கொடுப்பதுடன், கட்டுரையில் அதன் அறிவியல் பெயரையும் கொடுக்கலாம். மேலும் விக்கியிடை இணைப்புக்களும் பொருத்தமான இடங்களில் கொடுப்போம்தானே. இவை எனது கருத்துக்களே.--கலை (பேச்சு) 10:32, 13 சூன் 2012 (UTC)
- நன்றி! முயற்சித்துப் பார்க்கிறேன். --Anton (பேச்சு) 10:55, 13 சூன் 2012 (UTC)
உதவி
[தொகு]நண்டு
[தொகு]வணக்கம் கலை, நண்டு கட்டுரையில் நண்டின் வகைகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் குதிரைலாட நண்டு, தேங்காய் நண்டு இரண்டும் நண்டு இனமா? ஆங்கில விக்கியில் அவையும் அவைதவிர துறவி நண்டு போன்ற இன்னும் சிலவும் உண்மையான நண்டுகள் அல்ல எனத் தரப்பட்டுள்ளதே? மேலும் அவற்றுக்குரிய கட்டுரைகளைப் (ஆங்கிலத்தில்) பார்த்தால் அவைகள் கணுக்காலிகளாக உள்ளன. எனக்குப் பெரிதாக நண்டுக்கும் கணுக்காலிக்கும் வேறுபாடு தெரியாதெனினும் சந்தேகம் எழுகிறது.
நீலக்கால் நண்டு -இதுவும் நண்டின் வகையா? இதற்கு ஆங்கில விக்கியில் கட்டுரை உள்ளதா? எனது சந்தேகத்தைத் தெளிவுபடுத்துங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 00:46, 31 ஆகத்து 2012 (UTC)
- நீலக்கால் நண்டு -இதுவும் நண்டின் வகையா? இதற்கு ஆங்கில விக்கியில் கட்டுரை உள்ளதா?
எனது சந்தேகத்தைத் தெளிவுபடுத்துங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 00:46, 31 ஆகத்து 2012 (UTC)
- நண்டுகள் கணுக்காலி அல்லது ஆத்ரோபோடா தொகுதியினுள் வரும், கிரஸ்டேசியா (Crustacea) துணைத்தொகுதியினுள் அடங்குகின்றன. எனவே நண்டுகள் கணுக்காலிகள்தான். இவற்றில்:
- குதிரைலாட நண்டு என்பது உண்மையான நண்டு அல்ல என்பதனால் (அது கிரஸ்டேசியா துணைத்தொகுதியினுள் வரவில்லை), அதனை நண்டுகளின் வகைக்குள் கொடுக்க முடியாதென நினைக்கின்றேன்.
- தேங்காய் நண்டானது, நண்டு போன்று தோற்றமளித்தாலும், உள்வரிசை Anomura இன் கீழ் வருவதனால், அது உண்மையான நண்டு அல்ல என ஆங்கிலக் கட்டுரை கூறுகின்றது. அது சரியாகவே இருக்குமெனத் தோன்றுகின்றது. Brachyura] எனும் உள்வரிசைக்குள் அடங்குவையே உண்மையாக நண்டுகள் என நினைக்கின்றேன். (முன்னர் படித்தது அத்தனையும் நினைவில் இல்லை). :(
- நீலக்கால் நண்டின் ஆங்கிலப் பெயர் தெரியவில்லை. அதனால் ஆங்கிலக் கட்டுரை எது எனத் தெரியவில்லை. ஆனாலும் அதன் படமும், விளக்கம் பார்க்கும்போது, அது ஒரு நண்டு வகையே எனத் தோன்றுகின்றது.
--கலை (பேச்சு) 13:23, 31 ஆகத்து 2012 (UTC)
- மிகவும் நன்றி. --Booradleyp (பேச்சு) 16:24, 31 ஆகத்து 2012 (UTC)
கட்டாத்தி
[தொகு]வணக்கம் கலை. பேச்சு:கட்டாத்தி இப்பக்கத்தைப் பார்த்து சரி செய்ய முடியுமா என்று பாருங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 14:49, 27 அக்டோபர் 2012 (UTC)
- தற்போர்து கொஞ்சம் நேரம் குறைவாக உள்ளது. பின்னர் பார்க்கின்றேன்.--கலை (பேச்சு) 14:10, 28 அக்டோபர் 2012 (UTC)
குறிப்பிட்ட கட்டுரையையும், அதன் பேச்சுப் பக்கத்தையும் பார்த்தேன். ஆனால் எனக்கு அதுபற்றிச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் தகவலுழவன், ஜீவா ஆகியோர் பல தகவல்களைத் தந்திருக்கின்றார்கள். நன்றி.--கலை (பேச்சு) 15:13, 30 அக்டோபர் 2012 (UTC)
இணைய Cochrane Library க்கான அணுக்கம்
[தொகு]விக்கித் திட்டம் மருத்துவத்தில் பங்குபற்றும் பயனர் மற்றும் மருத்துவ, அறிவியல், உடல்நல கட்டுரைகளை எழுதுபவர் எனும் நோக்கில் பின்வரும் தகவல் தங்களுக்கு வழங்கப்படுகின்றது: en:Cochrane Library என்பது மருத்துவ ஆய்வுக்கட்டுரைகள், அண்மைய ஆய்வுகள் அடங்கியுள்ள தரவுத்தளம். இதற்கான சந்தா 300 - 800 $ ஆகும். விக்கிபீடியாவில் மருத்துவத்தில் சிறப்பாகப் பங்களிக்கும் நூறு நபர்களுக்கு இலவசமாக இதன் அணுக்கம் கிடைக்கவுள்ளது. இதில் ஈடுபாடு இருக்குமெனின் தங்களின் நுழைவுப்பதிவை ஆங்கில விக்கிபீடியாவில் இடலாம். ஆலமரத்தடியிலும் இதைப்பற்றிய சிறுகுறிப்பு உள்ளது. en:Wikipedia:COCHRANE சென்றால் விவரங்களை அறிந்து பதியலாம்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 22:48, 19 சூன் 2013 (UTC)
Immunology
[தொகு]கலையரசி, பகுப்பு எதிர்ப்பியலை எடுத்துவிட்டு நோய் எதிர்ப்பு முறைமைகள் பகுப்பை அல்லவா சேர்க்க வேண்டும். மருத்துவம் பகுப்பை ஏன் எடுத்துவிட்டீர்கள்? கவனிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 10:29, 6 ஆகத்து 2013 (UTC)
பகுப்புக்களைச் சேர்க்கும்போது, நாம் சேர்க்கும் பகுப்பு, வேறொரு பெரும் பகுப்பினுள் அடங்குமாயின், அந்த பெரும் பகுப்பை நாம் குறிப்பிட்ட கட்டுரையில் சேர்க்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, நோய் எதிர்ப்பு முறைமைகள் பகுப்பானது, உடலியங்கியல் பகுப்பினுள் வருகின்றது. உடலியங்கியல் பகுப்பானது, உயிரியல், மற்றும் மருத்துவம் பகுப்பினுள் வருகின்றது. அதனால், உயிரியல் பகுப்பையோ, அல்லது மருத்துவம் பகுப்பையோ நாம் நோய் எதிர்ப்பு முறைமைகள் பகுப்பிற்குச் சேர்க்கத் தேவையில்லை. இவ்வாறுதான் பகுப்புகள் சேர்க்கப்பட வேண்டும் என்று முன்னர் எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். கிளைத்தல் வடிவம் (hierarchy of categories) போன்றது. மருத்துவம் பெரிய பகுப்பினுள் பல துணைப்பகுப்புகள் வருகின்றன. அதில் ஒன்று உடலியங்கியல் எனில், அதனுள் வேறு பல துணைப் பகுப்புக்கள் வருகின்றன. அதே வேளை சில கட்டுரைகள் நேரடியாகவும் உடலியங்கியல் பகுப்பினுள் சேர்க்கப்படுகின்றன. சரியாகப் புரிய வைத்திருக்கின்றேனா தெரியவில்லை. பலரும் பகுப்புக்களைச் சேர்க்கும்போது இதனைக் கவனிப்பதில்லை என நினைக்கின்றேன். இதற்கும் ஒரு வழிகாட்டல் எழுதினால் நன்று.
மேலும் எதிர்ப்பியலை எடுத்து விடுவதா என்பதில் குழப்பம் இருந்ததால், அதனை நீக்கவில்லை. அதனை நீக்கட்டுமா? --கலை (பேச்சு) 10:46, 6 ஆகத்து 2013 (UTC)
- பகுப்புகளைக் குறித்து விளக்கியமைக்கு நன்றி. எதிர்ப்பியல் பகுப்பை எடுத்துவிடுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:04, 6 ஆகத்து 2013 (UTC)
கட்டுரை வேண்டுகோள்
[தொகு]நரம்பு கட்டுரையை உருவாக்கி உதவுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:45, 2 நவம்பர் 2013 (UTC)
- விரைவில் முயற்சிக்கின்றேன் தமிழ்க்குரிசில்.--கலை (பேச்சு) 13:28, 3 நவம்பர் 2013 (UTC)
- கட்டுரையை எழுதத் தொடங்கியுள்ளேன். ஆனால் பல சொற்களுக்குத் சரியான தமிழ்ச் சொற்கள் தேடித் தேடி எழுதுவதனால், வேறு யாராவது வளர்த்தெடுப்பதில் உதவினாலன்றி, கட்டுரை மிக மெதுவாகவே வளரும் :).--கலை (பேச்சு) 16:15, 7 நவம்பர் 2013 (UTC)
- நன்றி! என்னால் ஆகக் கூடியது ஏதும் இருக்கும் என்றால் செய்வேன் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:23, 9 நவம்பர் 2013 (UTC)
- தற்போது நான் ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, எனது கற்ற அறிவினையும் துணை கொண்டு கட்டுரையை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றேன். இவற்றிற்கு மேற்கோள்கள் தேடி இணைக்க வேண்டும். உங்களால் முடிந்தால் செய்யுங்கள். கடினமென்றால் நானே பின்னர் அதனைச் செய்கின்றேன். உதவ முடியும் எனக் கேட்டதற்கு நன்றி.--கலை (பேச்சு) 12:40, 9 நவம்பர் 2013 (UTC)