நீதானே எந்தன் பொன்வசந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதானே எந்தன் பொன்வசந்தம்
நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடர்.jpg
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்முத்துக்குமாரசாமி
நடிப்பு
இசைஜே.வி.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்509
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சேவியர் பிரிட்டோ
நிவாஷினி திவ்யா
தொகுப்புbaraba , captainjegan
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்எஸ்தெல் என்டர்டெய்னர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்24 பெப்ரவரி 2020 (2020-02-24) –
25 திசம்பர் 2021 (2021-12-25)
Chronology
முன்னர்பூவே பூச்சூடவா (19:30)
யாரடி நீ மோகினி (22:00)
பின்னர்நினைத்தாலே இனிக்கும் (19:30)
தொடர்புடைய தொடர்கள்துலா பஹ்ட் ரே

நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெப்ரவரி 24, 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு நேரத்தில் ஒளிபரப்பான காதல் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஜீ மராத்தி தொலைகாட்சித் தொடரான 'துலா பஹ்ட் ரே' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்தத் தொடரில் தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ்[1] என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன்[2] என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த தொடர் 25 திசம்பர் 2021 அன்று 509 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை 20 வயாதான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனு என்ற பெண்ணும் 40 வயதான பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபருக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ஜெய் ஆகாஷ்[3] - சூரிய பிரகாஷ்
  • 40 வயதுடைய ஒரு பணக்காரர்.
 • தர்சனா அசோகன் - அனு
  • 20 வயதுடைய ஒரு நடுத்தர வர்க்கப் பெண்.

துணை கதாபாத்திரம்[தொகு]

 • டேவிட் சோலொமொன் ராஜா - பங்கஜ்; சூர்யபிரகாஷின் செயலாளர் மற்றும் நண்பர்.
 • நிவாஷினி திவ்யா - மீரா; சூர்யபிரகாஷின் பி.ஏ.
 • சோனியா - புஷ்பா; அனுவின் தாய்
 • சாயிராம் - சுப்பு; அனுவின் தந்தை
 • சத்யப்ரியா - சாரதா; சூர்யபிரகாஷ் மற்றும் சந்திரபிரகாஷின் தாய்
 • கார்த்திக் சசிதரன் - சந்திர பிரகாஷ்; சூர்யபிரகாஷின் இளைய சகோதரர்
 • சுபிக்‌ஷா - மான்சி; சந்திரபிரகாஷின் மனைவி
 • ரிஷ்மிதா - ரம்யா; அனுவின் தோழி
 • பவித்ரா - ஸ்வப்னா; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர்
 • ராஜா வெற்றி பிரபு - தீனா; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர்
 • ஜெய் சீனிவாஸ் குமார் - நீல்; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர் மற்றும் சுரேந்தரின் கூட்டாளி (2020)
 • வெற்றி வேலன் - சுரேந்தர்; சூர்யபிரகாஷின் எதிரி (2020)
 • பானுமதி - பிந்து; சாரதாவின் உதவியாளர்
 • சரத் - கோபி; ஒரு சமையல்காரர்
 • கற்பகவல்லி - ரஞ்சினி; ரம்யாவின் தாய்
 • ராஜ் மித்ரன் - ரகுபதி; ரஞ்சினியின் சகோதரர்
 • ரவிவர்மன் - சம்பத்; ரகுபதியின் மகன் மற்றும் ரம்யாவின் உறவினர்

நடிகர்களின் தேர்வு[தொகு]

இது ஒரு வித்தியாசாமான காதல் கதை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடரில் ரோஜாக்கூட்டம், இனிது இனிது காதல் இனிது, அடடா என்ன அழகு போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவர் முதல் முறையாக சின்னத்திரையில் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக மாதிரி நடிகையான தர்சனா அசோகன் என்பவர் அனு என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமாகிறார்.

நேர அட்டவணை[தொகு]

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம்
5 செப்டம்பர் 2021 - 25 திசம்பர் 2021
திங்கள் - சனி
22:30
23 ஆகத்து 2021 - 3 செப்டம்பர் 2021 -
திங்கள் - சனி
22:00
6 ஆகத்து 2020 - 21 ஆகத்து 2021
திங்கள் - சனி
19:30
27 சூலை 2020 - 4 ஆகத்து 2020
திங்கள் - சனி
19:00 - 20:00
24 பெப்ரவரி 2020 - 24 சூலை 2020
திங்கள் - வெள்ளி
19:30

மறு தயாரிப்பு[தொகு]

 • 'துலா பஹ்ட் ரே' என்ற தொடரின் மறு தயாரிப்புகள்:
மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
மலையாளம் நீய்யூம் நஜனம் ஜீ கேரளம் 10 பிப்ரவரி 2020 ஒளிபரப்பில்
கன்னடம் ஜோத்தே ஜோதியாலி ஜீ கன்னடம் 9 செப்டம்பர் 2019 ஒளிபரப்பில்
தெலுங்கு பிரேமா என்தா மதுரமே ஜீ தெலுங்கு 10 பிப்ரவரி 2020 ஒளிபரப்பில்

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 4.2% 5.4%
7.8% 6.6%
2021 3.1% 3.9%
2.6% 1.3%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Jai Akash to make his Tamil TV debut with 'Neethane Enthan Ponvasantham'". timesofindia.indiatimes.com.
 2. "Dharshana Tamil TV Actress". www.newsbugz.com.
 3. "சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ்". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நீதானே எந்தன் பொன்வசந்தம் அடுத்த நிகழ்ச்சி
யாரடி நீ மோகினி ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நீதானே எந்தன் பொன்வசந்தம் அடுத்த நிகழ்ச்சி
பூவே பூச்சூடவா நினைத்தாலே இனிக்கும்