பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூவே பூச்சூடவா
பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைகாதல்
குடும்பம்
நாடகம்
எழுதியவர்அமல்ராஜ்
இயக்குனர்ஜி. மாணிகண்ட குமார்
நடிப்பு
முகப்பிசைஞர்கிரண்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பாளர்கள்எம். சரவணன்
தயாரிப்பாளர்கள்ஸ்ருதி நாராயணன்
ஆயிஷா அப்துல்லா
ஒளிப்பதிவாளர்டி. ரமேஷ்
தொகுப்பாளர்கள்எஸ். அருள்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்24 ஏப்ரல் 2017 (2017-04-24) –
ஒளிபரப்பில்
வெளியிணைப்புகள்
இணையதளம்

பூவே பூச்சூடவா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஏப்ரல் 24ஆம் 2017 முதல் இந்த தொடர் ஒளிபரப்பானது. [1].

இந்த தொடரை ஜி. மாணிகண்ட குமார் என்பவர் இயக்க,கார்த்திக் வாசுதேவன், ரெஸ்மா, கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த தொடர் ஆகும்.[3]

கதைச்சுருக்கம்[தொகு]

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பஸ் கண்டக்டரின் மகள்களான சக்தி மற்றும் மீனாட்சி. குடுப்பதிற்காக எதையும் செய்பவள். அக்கா மீனாட்சி பணக்கார வீட்டு சுந்தரை காதலிக்க, அக்காவின் திருமணத்திற்காக சுந்தரின் அண்ணா சிவாவை திருமணம் செய்ய வெட்டிய சூழ்நிலை. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்கின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முக்கியகதாபாத்திரம்[தொகு]

 • தினேஷ் கோபாலசாமி (2017-2019) → கார்த்திக் வாசுதேவன் (2019-) - சிவா
  • கோப சுபாவம் கொண்டவன். யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகிவிட மாட்டான். குறிப்பாக பெண்கள் என்றாலே சிவாவிற்கு வெறுப்பு.
 • ரெஸ்மா - சக்தி
  • ரொம்பவும் துருதுருவென ஓடி ஆடும் சக்தி மனதில் பட்டதை வெடுக்கென்று பேசும் குணம் கொண்டவள்.

துணைக்கதாபாத்திரம்[தொகு]

 • கிருதிகா லட்டு - மீனாட்சி சுந்தர்
 • மதன் பாண்டியன் - சுந்தர்
 • உமா பத்மநாபன் - கோதாவரி
 • யுவராணி → மீனாகுமாரி - சுபத்திரா
 • தனலட்சுமி - அணு
 • ஹென்ஷா - தீபா
 • ஸ்ரீதேவி → கிருத்திகா - தாரணி கார்த்திக்
 • கௌசல்யா செந்தாமரை - நாகலட்சுமி
 • சந்தோஷ் - வெங்கட்
 • திவாகர் - ரன்வீர்
 • நித்யலட்சுமி - நந்தினி/கங்கா
 • ஷாமிலி சுகுமார் - ஐஸ்வர்யா
 • சந்தினி பிரகாஷ் - சங்கீதா / சக்தி
 • ராஜா - சுவாமிநாதன்
 • ஸ்ரீ குமார் - கேமியோ தோற்றம்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் ஏப்ரல் 24ஆம் திகதி 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி நேயர்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது. பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணி தொடக்கம் 8:30 மணிவரை நேரத்திற்கு ஒளிபரப்பானது.

அதற்க்கு பிறகு நாச்சியார்புரம் என்ற தொடருக்காக இந்த தொடர் சூலை 8, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. மறுபடியும் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற புதிய தொடருக்காக இந்த தொடர் பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6:30 நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம்
24 பிப்ரவரி 2020 - ஒளிபரப்பில்
திங்கள் - வெள்ளி
6:30 PM
8 சூலை 2019
திங்கள் - வெள்ளி
7:30 PM
25 பெப்ரவரி 2019
திங்கள் - சனி
7:30-8:30 PM
24 ஏப்ரல் 2017
திங்கள் - வெள்ளி
8:00 PM

குறிப்பு[தொகு]

இது ஒரு வருதினி பரிணயம்' என்ற தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பாகும்.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு[தொகு]

இந்த தொடர் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வருதினி பரிணயம்' என்ற தொடரின் தமிழ் மறு ஆக்கத் தொடர் ஆகும். தமிழ் பதிப்பில் இந்த தொடர் வெற்றி அடைந்ததால் தமிழிருந்து கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • கன்னடம்
  • இந்த தொடர் கன்னட மொழியில் கட்டிமேல என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு மார்ச் 11, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஜீ கன்னடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.[4].
 • மலையாளம்
  • மலையாள மொழியில் பூக்களம் வரவாயி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஜீ கேரளம் என்ற தொலைக்காட்ச்சியில் ஜூலை 1, 2019 முதல் வெள்ளி வரை இரவு 9 மாணிக்கு ஒளிபரப்பாகிறது.[5]

இவற்றை பார்க்க[தொகு]

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
Previous program பூவே பூச்சூடவா Next program
பிரியாத வரம் வேண்டும் -
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program பூவே பூச்சூடவா Next program
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் நீதானே எந்தன் பொன்வசந்தம்
(ஒளிபரப்பில்)
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:30 - 8:30 மணி தொடர்கள்
Previous program பூவே பூச்சூடவா Next program
ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
Previous program பூவே பூச்சூடவா Next program
சொல்வதெல்லாம் உண்மை நாச்சியார்புரம்