தும்மல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தும்மல் காட்சி

தும்மல், காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல். மூக்குத் துவாரத்தில் சிறிய முடியிழைகள், நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. மேலும் மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர். இவ்வாறு தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது. [1]

ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். [2]

தும்மலின் காரணங்கள்[தொகு]

ஒவ்வாமைதான் தும்மலின் அடிப்படைக் காரணம். வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும். மேலும் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவகுக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தும்மல் ஏன் வருகிறது? எவ்வாறு தடுப்பது?
  2. தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்மல்&oldid=1973137" இருந்து மீள்விக்கப்பட்டது