உமி


தாவரவியலில் உமி (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது விதையின் வெளிப்புற சுவர் அல்லது பூச்சு ஆகும். இது பெரும்பாலும் செடியில் வளரும் சோளம் போன்ற தாவரத்தின் இலைப்போன்ற வெளிப்பகுதியைக் குறிக்கும். இது விதை, பழம் மற்றும் காய்கறிகளின் பாதுகாப்பு கவசமாகும்.
சமையலில் உமி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளின் கழிவு பொருட்களை குறிக்கும், உதரணமாக ஸ்டாபெரி பழத்தின் புற இதழ் மற்றும் காம்பு பகுதிகள் குறிக்கும்.
.சில பருப்பு வகை தாவரங்களில் இது நெற்று என அழைக்கப்படுகின்றது.
பயிர் தாவரங்களில் பூசணி, ஓட்ஸ் மற்றும் பார்லி பயிர்கள் புற பூச்சு இல்லாதவை என அறியப்படுகின்றது
உமியை - பதரை நீக்குதல்[தொகு]
உமியை நீக்குதல் என்பது தானியங்களில் வெளிபுற பூச்சை / உறையை நீக்குதலாகும். பதரை நீக்குதல் என்பது வைக்கோல் மற்றும் தேவையற்ற விதைகளை நீக்குதலாகும். சில நேரங்களில் இயந்திரங்களின் உதவியுடன் நீக்கப்படுகிறது. விதைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக, விதைகயிலுள்ள அந்நிய பொருட்கள் நீக்கப்படுவது அவசியமாகும். பின்னர் விதையை ஆழ்ந்துள்ள உறை நீக்கப்படுகிறது. பட்டாணி விதையின் பதரை நீக்குதலில் 3 வகையான முறைகள் பின்பற்றபடுகின்றன. • வெப்ப முறையில் பதரை நீக்குதல் • மித வெப்ப முறையில் பதரை நீக்குதல் • குளிர் முறையில் பதரை நீக்குதல் வெப்ப முறையில் பதரை நீக்கும் முறை நேரிடைய வரப்பிலிருந்து பட்டாணியை பெறும்போது பயன்படுத்தப்படுகிறது. மித வெப்ப முறையில் பதரை நீக்குதல் முறையை பட்டாணியை ஏற்றுமதி செய்பவர் பயன்படுத்துகிறார். குளிர் முறையில் பதரை நீக்குதல் பெரும்பாலும் தாவரங்களை ஏற்கனவே உலர்த்திய மற்றும் சீரமைப்பு உபகரணங்களை பயன்படுத்தி அதிக சத்த்தை மேன்படுத்தலாம். வெவ்வேறு விதமாக வெப்பநிலை பதரை நீக்கும் முறையை பட்டாணி தாவிர விதங்களின் உற்பத்தியில் பயன்படுத்தலாம்.
மூன்றாம் உலக நாடுகளில் உமியை நீக்குதல் மற்றும் பதரை நீக்குதல் பெரிய உளக்கையை கொண்டு கைகளினால் செய்யப்படுகின்றது. இவ்வுளக்கை மரத்தால் செய்யப்பட்டதும் ஒன்று அல்லது பலரால் பயன்படுத்த கூடியதாகும் உள்ளது.
உமி மற்றும் பதரானது மக்கும் மற்றும் அழிந்து போகும் தன்மைக் கொண்டது.
மேற்கோள்[தொகு]
வெளிபுற இணைப்புகள்[தொகு]
https://en.wikipedia.org/wiki/Husk இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.