உள்ளடக்கத்துக்குச் செல்

தூற்றுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெற்கதிர் தூற்றுதல்,உத்தரகாண்டு, இந்தியா
காற்றில் தூற்றுதல் தமிழ்நாடு, இந்தியா
காற்றில் தூற்றும் கிடுக்கிகளின் பயன்

காற்றில் தூற்றுதல் (Wind winnowing) என்பது நெல் தாளில் இருந்து நெல்மணிகளப் பிரிக்க பண்டைய பண்பாடுகளில் பயன்படுத்திய வேளாண்மை முறையாகும் இம்முறை தேக்கிவைக்கப்பட்ட நெல்மணிகளில் இருந்து தீங்குயிரிகளைப் பரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நெற்கதிர்களை கால்நடைகளைக் கொண்டு மிதித்துப் போரடித்த பிறகு காற்றில் தூற்றி நெல்மணிகள் பிரிக்கப்படுகின்றன.

மிக எளிய முறையில் கூலமும் பதரும் கலந்த கலவை காற்றில் எறியப்படுகிறது. அப்போது பதர்கள் காற்றில் அடித்துச் செல்ல கூலமணிகள் நேரடியாக கீழே விழுகின்றன. இங்குத் தூற்றுதலுக்குக் கூடையோ முறமோ அறுவடை செய்து மிதித்த கலவையைக் காற்றில் தூவப் பயன்படுகின்றன.

தூற்றுதலை எந்திரமயமாக்கல்

[தொகு]
1839 இல் இருந்து பயன்படும் தூற்றுதல் எந்திரம்

முதலில் 1737 இல் ஆந்திரூ உரோட்சர் எனும் உழவர் உரோக்சு பர்குசயரில் உள்ள கேவர்சு தோட்ட வளாகத்தில், கூலங்களைத் தூற்றுதலுக்கான தூற்றுதல் எந்திரத்தை உருவாக்கினார். இது தூற்றி எனப்பட்டது. இது வெற்றிபெற்றதால் அக்குடும்பம் இவ்வெந்திரங்களை இசுகாட்லாந்து முழுவதும் பல ஆண்டுகளாக விற்பனை செய்துள்ளனர். அன்றைய இசு காட்லாந்து மட அதிபதிகள் இச்செயலைக் கடவுளுக்கு எதிரான செயலாகக் கருதினர். காற்று கடவுள் படைத்தது. அதற்கு மாற்றாக செயற்கை முறையில் காற்றை உருவாக்குதல் கடவுள் பொருளைத் திருடுவதாகும் எனக் கூறியுள்ளனர்.[1] தொழிற்புரட்சியில், தூற்றுதல் செயல்முறை எந்திரமயமாக்கப்பட்டு, தூற்றுதல் ஆலைகள் பல உருவாக்கப்பட்டன.

கிரேக்கப் பண்பாட்டில்

[தொகு]

தூற்றுதல் விசிறி (λίκνον [líknon], "தொட்டில்" எனும் பொருள் கொண்டது) தியோனிசசு அளித்த சடங்கிலும் எலியூசினிய மர்மங்களிலும் விவரிக்கப்படுகிறது: " இது ஒரு எளிய வேளாண்கருவி. ஆனால் இது தியோனிசசு சமயத்தில் மருள்படுத்தப்படுகிறது," என்கிறார் ஜேன் எல்லன் ஆரிசன்.[2]

சீனப் பண்பாட்டில்

[தொகு]
சீன சுழல்வகைத் தூற்றுதல் எந்திரம் தூற்றுதல் எந்திரம், தியாங்கோங் கைவு கலைக்களஞ்சியம் (1637)

தொல்சீனாவில், சுழல்வகை விசிறி கண்டுபிடித்ததும் தூற்றுதல் நுட்பம் மேம்படலானது. இது காற்றை உருவாக்க திருகிய அலகுகளைப் பயன்படுத்தியது.[3] இது கி.பி 1313 ஆண்டைய வாங் ழென் இயற்றிய நோங் சூ எனும் நூலில் தரப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில்

[தொகு]

மத்தேயு நற்செய்தி 3:12 இன்படி, ஒரு தொடர் கோதுமையையும் அதன் பதரையும் பிரிக்கும் கருவியை " அவரது கையில் உள்ள தூற்றுதல் விசிறி" (அமெரிக்கச் செந்தர விவிலியம்) எனக் குறிக்கிறது. புதிய பன்னாட்டுப் பதிப்பும் புதிய அமெரிக்கச் செந்தர விவிலியமும் "தூற்றுதல் கவை" என மொழிபெயர்க்கின்றன; கோல்மன் கிறிஸ்தவச் செந்தர விவிலியம் இச்சொல்லை "தூற்றுதல் முறம்" என மொழிபெயர்க்கிறது.

ஐக்கிய அமெரிக்காவில்

[தொகு]

அமெரிக்காவில் தூற்றுதல் கோட்டில்கள் உருவாக்கபட்டதும் தென்கரோலினா நெற்பயிர் விளைச்சல் வேகமாகப் பெருகலானது.

ஐரோப்பாவில்

[தொகு]
லெ வன்னெயூர் ( தூற்றி) , ழீன் பிராங்குவாயிசு மில்லெத் உருவாக்கிய எந்திரம், 19 ஆம் நூற்றாண்டு தூற்றுதல் காற்றாடி

பேதே அடுசெஃப்ரின் கூறுகிறபடி, நார்தம்பர்லாந்து சேக்சான் குடியிருப்புகளில் [4] அங்கு நடந்த அகழாய்வு செய்தவரின் மீள்கட்டமைப்பு படத்தின்படி எதிரெதிராக அமைந்த வாசல்களுக்கு இடையில் உள்ள காற்றுவீச்சால் நடுவில் கொட்டில்களில் உள்ள கூலக்கலவை தூற்ரப்பட்டுள்ளது.[5]

ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டு வரை காற்றில் தூற்றுதலுக்கான சீன நுட்பங்கள் பயன்படுத்தவில்லை. அக்காலத்தில் ஐரோப்பாவில் தூற்றுதல் எந்திரங்கள் மரக்கலவகைக் காற்றாடிகளையே ப்யன்படுத்தின.[6] ஐரோப்பாவுக்கு டச்சு கிழக்கிந்தியக் குழுமத்தின் கடலோடிகளே சுழல்வந்த் தூற்றுதல் எந்திரங்களை 1700- 1720 கால இடைவெளியில் ஜாவாவில் உள்ள பதாவியாவில் இருந்து கொண்டு வந்துள்ளனர். இதே கால இடைவெளியில் சுவீடியர்கள் தென்சீனாவில் இருந்து இவ்வெந்திரங்களை இறக்குமதி செய்துள்ளனர். இயேசு பாதிரியார்கள் 1729 கால அளவில் பல எந்திரங்களைப் பிரான்சுக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனவே, 18 ஆம் நூற்றாஆண்டின் தொடக்க காலம் வரை, மேற்கு நாடுகளில் சுழல்வகைத் தூற்றுதல் விசிறிகள் பயனில் இல்லை.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chambers, Robert (1885). Domestic Annals of Scotland. Edinburgh : W & R Chambers. p. 397.
  2. Harrison, Prolegomena to the Study of Greek Religion, 3rd ed. (1922:159).
  3. The Question of the Transmission of the Rotary Winnowing Fan from China to Europe: Some New Findings பரணிடப்பட்டது 2008-02-04 at the வந்தவழி இயந்திரம், Hans Ulrich Vogel, 8th International Conference on the History of Science in China
  4. Münzenberg, Hessen. Chapel and Palas (G.Binding, Burg Münzenberg, 1962)
  5. M.W.Thompson, The Rise of the Castle, (Cambridge University Press, 1991), 5–6.
  6. Broadcasting and winnowing பரணிடப்பட்டது 2017-05-16 at the வந்தவழி இயந்திரம், Antique Farm Tools
  7. Robert Temple, The Genius of China, p. 24

வெளி இணைப்புகள்

[தொகு]
 winnowing – விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூற்றுதல்&oldid=3802307" இலிருந்து மீள்விக்கப்பட்டது