துப்பதஹா இயற்கைப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துப்பதஹா பாறை இயற்கைப் பூங்கா
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Tubbataha Shark.jpg
துப்பதஹாவில் சுறா
அமைவிடம்பலவான், பிலிப்பீன்சு
கட்டளை விதிஇயற்கைக் களம்: (vii), (ix), (x)
உசாத்துணை653bis
பதிவு1993 (17-ஆம் அமர்வு)
விரிவுகள்2009
பரப்பளவு96,828 ha (239,270 ஏக்கர்கள்)
Websitewww.tubbatahareef.org
ஆள்கூறுகள்8°57′12″N 119°52′3″E / 8.95333°N 119.86750°E / 8.95333; 119.86750ஆள்கூறுகள்: 8°57′12″N 119°52′3″E / 8.95333°N 119.86750°E / 8.95333; 119.86750

துப்பதஹா பாறை இயற்கைப் பூங்கா (Tubbataha Natural Park) என்பது சுலு கடலின் நடுவில் அமைந்துள்ள பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது பலவான் மாகாணத்தின் தலைநகரான புவேர்ட்டோ பிரின்செசா நகரத்திலிருந்து தென்கிழக்கில் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கடல் மற்றும் பறவைகள் சரணாலயமான இது பவளத்தால் உருவான இரண்டு பெரியத் தீவுகளையும் கொண்டுள்ளது. இது மொத்தம் 97,030 எக்டேர் (239,800 ஏக்கர்; 374.6 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. [1] மக்கள் வசிக்காத தீவுகளும், திட்டுகளும் பலவானின் ககாயன்சிலோ தீவு நகராட்சியின் ஒரு பகுதியாகும். இது பாறைகளின் வடகிழக்கில் சுமார் 130 கிலோமீட்டர் (81 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

1993 திசம்பரில், யுனெஸ்கோ இந்தப் தேசியப் பூங்காவை உலக பாரம்பரிய களமாக அறிவித்தது. இது கடல் உயிரினங்களின் அதிக அடர்த்தி கொண்ட ஒரு பாறைத் தீவுக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாகும். பறவைகளுக்கும், கடல் ஆமைகளுக்கு கூடு கட்டும் இடமாக வடக்கு தீவு செயல்படுகிறது. கண்கவர் 100 மீ செங்குத்தாக சுவரும், விரிவான தடாகங்களும், இரண்டு பவளத் தீவுகளும் கொண்ட இது அழகிய பவளப்பாறைக்கு இந்த தளம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. [2] 1999ஆம் ஆண்டில், ராம்சார் சாசனம் இந்தப் பூங்காவை சர்வதேச முக்கியத்துவத்தின் ஈரநிலங்களில் ஒன்றாக பட்டியலிட்டது. [3] 2008 ஆம் ஆண்டில், இயற்கையின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக இது பரிந்துரைக்கப்பட்டது.

தேசிய பூங்காவும், பிலிப்பீன்சு தீவுக்கூட்டத்தின் எஞ்சிய பகுதிகளும் பவள முக்கோணத்தின் ஒரு பகுதியாகும். இது கடல் பல்லுயிர் மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விவரிக்கப்பட்ட பவள இனங்களில் 75% மற்றும் உலகின் மீன்களில் 40% உள்ளன. [4] அதிகப்படியான மீன்பிடித்தலாலும், அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகளாலும் இப்பகுதி கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. [5] 1980 களில் இருந்து பாறைகளை பார்வையிட்ட விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில், இந்த இயற்கை பூங்காவில் 600 க்கும் குறைவான மீன் இனங்கள், 360 பவள இனங்கள், 11 சுறா இனங்கள், 13 ஓங்கில்கள், திமிங்கல இனங்கள் மற்றும் 100 பறவை இனங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டுகள் அழுங்காமைகளுக்கும், தோணியாமைகளுக்கும் கூடு கட்டும் இடமாகவும் செயல்படுகின்றன .

நிலவியல்[தொகு]

பலாவானின் புவேர்ட்டோ பிரின்செசா நகரிலிருந்து தென்கிழக்கே 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் உள்ள சுலு கடலின் நடுவில் இந்த இயற்கைப் பூங்கா அமைந்துள்ளது, மொத்தம் 97,030 எக்டேர் (239,800 ஏக்கர்; 374.6 சதுர மைல்) பரப்பளவு கொண்டுள்ளாது. [1] நவம்பர் 2015 இல், இந்தப் பூங்காவை ஆசியானின் பல்லுயிர் மையம் 35 வது ஆசியான் பாரம்பரிய பூங்காவாக அறிவித்தது. [6]

சூழலியல்[தொகு]

1000 க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்கு காணப்படும் விலங்கு இனங்களில் மந்தா ரே, சிங்க மீன்கள், கடலாமைகள், கோமாளி மீன் கொம்பன் சுறாக்கள், சீலாக்கள், கிளி மீன் அஞ்சாலை ஆகியவை சரணாலயத்தில் வாழ்கின்றன. மேலும், திமிங்கல சுறாக்களையும் புலி சுறாக்களையும் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழுங்காமை, கடற்பாலூட்டியான திமிங்கலம் போன்ற ஆபத்தின் விளிம்பிலிருக்கும் உயிரினங்களையும் கொண்டுள்ளது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இருப்பதால், அனைத்து உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]