புலிச்சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிச்சுறா
புதைப்படிவ காலம்:
முற்கால இயோசீன் முதல் தற்காலம் வரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: குருத்தெலும்பு மீன்கள்
துணைவகுப்பு: அடுக்கச் செவுள் மீன்கள்
பெருவரிசை: செலாகிமார்பா
வரிசை: கார்கெரைனிபார்மீசு
குடும்பம்: ரெக்வியாம் சுறா
பேரினம்: கலியோசெர்தோ
(வழுவன்சுறா)

யொகாண்ணஸ் பீட்டர் முல்லர், பிரீட்ரிக் குஸ்டாவ் யாக்கப் ஹென்ல 1837
இனம்: க. குவியே (G. cuvier)
இருசொற் பெயரீடு
கலியோசெர்தோ குவியே
Galeocerdo cuvier

பிரான்சுவா பெரோன், சார்ல அலெக்சாந்த்ர் லசூவர்
புலிச்சுறா காணப்படும் கடற்பகுதிகள்
வேறு பெயர்கள்

ஸ்குவாலஸ் குவியே, Squalus cuvier பெரோன் மற்றும் லசூவர், 1822
கலியோசெர்தோ திக்ரீனுஸ், Galeocerdo tigrinus முல்லர் மற்றும் ஹென்ல, 1837

புலிச்சுறா (Galeocerdo cuvier[2]) என்பது கடலில் வாழக்கூடிய மீன் இனங்களில் ஒன்றாகும். கலியோசெர்தோ (வழுவன்சுறா) குடும்பத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனம் இதுவாகும். பொதுவாக “கடல் புலி” என்று அழைக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் பெரிய கொன்றுண்ணிகளான இவற்றில், பெண் புலிச்சுறாக்கள் ஐந்து (5) மீட்டர் (16 அடி 5 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியவை. பொதுவாக இவை மிதவெப்பமண்டலம் மற்றும் வெப்ப மண்டல நீரில், குறிப்பாக மத்திய பசுபிக் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினை ஒத்திருப்பதால் இது புலிச்சுறா என அழைக்கப்படுகிறது. இந்த ஆழ்கோடுகள் சுறா முதிர்ச்சியடைந்த பின் மங்கி விடுகின்றன.[3]

உணவு முறை[தொகு]

புலிச்சுறாக்கள் பெரும்பாலும் இரவுநேரத்தில் தனித்து வேட்டையாடுகின்றன. மற்ற வகைச் சுறாக்களைக் காட்டிலும் பரவலான உணவு வகைகளைக் கொண்டுள்ளன. ஓடுடைய கணுக்காலிகள், மீன்கள், சீல்கள், பறவைகள், பீலிக்கணவாய்கள், ஆமைகள், கடற்பாம்புகள், ஓங்கில்கள், இன்னும் பிற சிறிய சுறாக்கள் எனப் பல கடல்வாழ் உயிரினங்களை உணவாக்கி கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல் மனிதனால் உருவாக்கப்பட்ட உண்ணவியலாத செயற்கைப் பொருட்களான வண்டிச் சக்கரத்திலுள்ள உருளிப்பட்டை உள்ளிட்ட குப்பைப் பொருட்களையும் கடித்து உண்டு விடுகின்றன. எனவே இவற்றுக்குக் குப்பைத்தின்னி என்ற பெயரும் உள்ளது[4]. இவை உணவுச் சங்கிலியில் முதன்மையான இடத்தில் இருந்தாலும், சில வேளைகளில் கொலைகாரத் திமிங்கலங்களால் உணவாகக் கொள்ளப்படுவதும் உண்டு[5]. சீனா மற்றும் தென்கிழக்காசியாவில் அருந்தப்படும் சுறாத் துடுப்பு வடிச்சாறு தயாரிக்கப் பயன்படும் இவற்றின் துடுப்புகளுக்காகப் பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன. இவை அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1]

மனிதர்களுக்கு எதிரான பதிவுசெய்யப்பட்ட ஆபத்தான தாக்குதல்களில் வெள்ளைச் சுறாக்களுக்கு அடுத்தபடியாக இவை இரண்டாவது இடத்தில் உள்ளன. ஆனாலும், இவ்வகை நிகழ்வுகள் அரிதாகவே நிகழ்கின்றன.[6][7]

உள்ளமைப்பியல்[தொகு]

பற்கள்[தொகு]

இரையின் சதையை வெட்டி அறுக்கும் வகையிலமைந்த புலிச்சுறாவின் அரம்ப முனைப் பற்கள்

புலிச்சுறாவில், இரையைப் பற்றிக்கொள்ள கூரான கீழ்வரிசைப் பற்களும், இரையின் சதைகளைக் கிழிக்க முக்கோண வடிவ அரம்ப முனை மேல் வரிசைப் பற்களும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ferreira, L.C.; Simpfendorfer, C. (2019). "Galeocerdo cuvier". IUCN Red List of Threatened Species 2019: e.T39378A2913541. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T39378A2913541.en. https://www.iucnredlist.org/species/39378/2913541. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "ITIS Report – Galeocerdo cuvier". http://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=160189. பார்த்த நாள்: 30 December 2015. 
  3. name=SharkInfo
  4. http://www.sharkinfo.ch/SI4_99e/gcuvier.html
  5. "Incredible moment killer whales hunt and kill a tiger shark". Daily Mail. http://www.dailymail.co.uk/video/sciencetech/video-1122910/Incredible-moment-killer-whales-hunt-kill-tiger-shark.html. 
  6. Knickle, Craig (8 May 2017). "Tiger Shark Biological Profile". Florida Museum of Natural History Ichthyology Department இம் மூலத்தில் இருந்து 2020-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200719133447/https://www.floridamuseum.ufl.edu/discover-fish/species-profiles/galeocerdo-cuvier/. 
  7. "Yearly Worldwide Shark Attack Summary" இம் மூலத்தில் இருந்து 2021-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210611221241/https://www.floridamuseum.ufl.edu/shark-attacks/yearly-worldwide-summary/#:~:text=The%202020%20worldwide%20total%20of,were%20confirmed%20to%20be%20unprovoked.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிச்சுறா&oldid=3662849" இருந்து மீள்விக்கப்பட்டது