ரெக்வியாம் சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Carcharhinidae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ரெக்வியாம் சுறாக்கள்
புதைப்படிவ காலம்:Early Cretaceouspresent
Tiger shark.jpg
ஒரு புலிச்சுறா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Carcharhinidae
பிளாக் டிப் ரீஃப் சுறா
மெக்ஸிகோ வளைகுடாவில் சுழல் சுறா, கார்சார்ஹினஸ் ப்ரெவிபின்னா
கலபகோஸ் சுறா
எலுமிச்சை சுறா, டைகர் பீச், பஹாமாஸ்
நீலச் சுறா

ரெக்வியாம் சுறாக்கள் (Requiem sharks) என்பவை கார்சார்ஹினிஃபார்ம்ஸ் வரிசையில் கார்சார்ஹினிடே குடும்பத்தைச் சேர்ந்த சுறாக்கள் ஆகும். இவை சூடான கடல்பகுதியை இருப்பிடமாக கொண்டவை (சில நேரங்களில் உப்பு அல்லது நன்னீர்) இவை பெருங்கடலில் நீண்டதூரம் வலசை போகக்கூடியவை. இவற்றில் புலிச்சுறா, காளைச்சுறா, சுழல்சுறா, கருமூக்குச்சுறா, கரும்புள்ளி சுறா, சாம்பல் ரீஃப் சுறா , கரும்புள்ளி பாறை சுறா, பட்டு சுறா, இருட்டு சுறா, நீல சுறா, செம்பு சுறா, கடல் வெள்ளைச் சுறா, வெள்ளைப் பாறை சுறா பிலால் சுறா போன்ற பல இனங்கள் இந்த வகைப்பாட்டில் அடங்கும்.

இவற்றின் கண்கள் வட்டமானது, மற்றும் ஒன்று அல்லது இரண்டு செவுள் பிளவுகள் கொண்டவை. இவற்றிற்கு பெரிய பக்கவாட்டு தூவிகள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் உள்பொரி முட்டைகளைக் கொண்டவை. இவை வெளியே குட்டிகளாகவே ஈனுகின்றன. இவற்றின் அளவு பலவாக வேறுபடுகின்றன. காட்டாக வளர்ந்த ஆஸ்திரேலிய கூர்மைச் சுறா 69 செமீ (2.26 அடி) என்றும், புலிச்சுறா 5.5 மீ (18 அடி) வயது நீளம் வரை என இவை பரவலாக வேறுபடுகின்றன. [1] இவற்றின் முன்னிரு மார்புத் துடுப்புகளின் பெரியதாக சரியான அளவைக் கொண்டுள்ளன. இது இந்த சுறாக்கள் வேகமாக நீந்த உதவுகின்றன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். [2] இவை அதிக வெப்பமண்டல பகுதிகளில் வாழக்கூடியன என்றாலும் வலசை போக்கூடியவை. பெண் சுறாக்கள் இனச்சேர்க்கைக்குத் தயாராக இருப்பதை ஆண் சுறாக்களுக்கு தெரியப்படுத்தும்விதமாக கடலில் ஒரு இரசாயனத்தை வெளியிடுகிறன. இந்த சுறாக்களின் இனச்சேர்க்கை காலம் வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை ஆகும். [3]

ரெக்வியாம் சுறாக்களில் ஐந்து வகையான சுறாக்கள், மனிதர்களைத் தாக்கக்கூடியதில் பெரும் விகிதத்தில் ஈடுபடுகின்றன; [4] இருப்பினும், தனிப்பட்ட இனங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் காரணமாக, தாக்குதல் பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு தவறான தகவல்கள் உள்ளன. [5]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெக்வியாம்_சுறா&oldid=3274951" இருந்து மீள்விக்கப்பட்டது