கோமாளி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமரைக்காத்தான்
Anemone purple anemonefish.jpg
Ocellaris clownfish, Amphiprion ocellaris
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: Pomacentridae
துணைக்குடும்பம்: Amphiprioninae
Genera

Amphiprion Bloch & Schneider, 1801
Premnas Cuvier, 1816

கோமாளி மீன் (Amphiprioninae) அல்லது தாமரைக்காத்தான்[1] என்பது அழகுக்காக வளர்க்கப்படும் ஓர் மீன் வகையாகும்.

வாழுமிடம்[தொகு]

இவ்வகை மீன்கள் வெப்பநிலை கூடிய இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரப் பிரதேசங்களில் வாழ்பவையாகும். இவற்றை பவளப்பாறைகளருகில் அதிகம் அவதானிக்கலாம். இவை கடலில் வாழும் பூவைப்போல தோற்றந்தரும் நஞ்சுள்ள உயிரினமான கடற் சாமந்திக்குள்தான் பெரும்பாலும் வசிக்கிறன. இவை கடற் சாமந்தி உண்ணும் உணவின் மீதியையும் அவற்றின் மீதுள்ள ஒட்டுண்ணிகளையும் சாப்பிட்டு வளர்கின்றன.

இந்த மீன்கள் 18 செ.மீ. வரை வளரக்கூடியவை. பெண் கோமாளி மீன்கள் ஒரு முறைக்கு 600 முதல் 1500 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகளை ஆண் மீன்கள் பாதுகாக்கின்றன. இந்த மீன்கள் கண்கவர் வண்ணங்களில் காட்சியளிப்பதால் இவற்றால் கவரப்பட்டு அருகில் வரும் சிறு உயிர்களைக் கடற் சாமந்தி உணவாக்கிக்கொள்கிறது. நஞ்சுடைய கடற் சாமந்தியில் வசிப்பதால் இந்தக் கோமாளி மீன்களை எதிரிகள் நெருங்குவதில்லை.

கோமாளி மீன்கள் சளி போன்ற திரவத்தை உற்பத்தி செய்து, தங்களைச் சுற்றி ஒரு கவசம்போல உருவாக்கிக்கொள்கின்றன. இந்தத் திரவத்தைக் கொண்டிருப்பதால் உள்ளே இருக்கும் கோமாளி மீன்களைத் தங்களுடைய உணர்திறனால் கண்டுபிடிக்க முடியாமல் கடற் சாமந்திகள் ஏமாந்து போய்விடுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:தூத்துக்குடியில் தாமரைக்காத்தான்
  2. ஆதலையூர் சூரியகுமார் (2017 சூன் 28). "கோமாளி மீன்கள் தப்பிப்பது எப்படி?". கட்டுரை. தி இந்து. 28 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமாளி_மீன்&oldid=3108139" இருந்து மீள்விக்கப்பட்டது