தில்ருவன் பெரேரா
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மகவடுகே தில்ருவன் கமலநாத் பெரேரா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலதுறை ஆட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 133) | அக்டோபர் 13 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | பிப்ரவரி 29 2008 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2009 |
மகவடுகே தில்ருவன் கமலநாத் பெரேரா (Mahawaduge Dilruwan Kamalaneth Perera, பிறப்பு: சூலை 22 , 1982), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 94 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]அக்டோபர் 13, 2007 இல் கொழும்பில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 30 ஓட்டங்கள் எடுத்தார். சனவரி 16, 2014 இல் ஷார்ஜாவில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். இவர் 8 ஆவது வீரராக களம் இறங்கி முதல் ஆட்டப்பகுதியில் 95 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இலங்கை வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தார்.[1]
அக்டோபர் 2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மட்டையாளராக சரியான திறனை வெளிப்படுத்த இயலாத போதும் பந்துவீச்சாளராக 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 எனும் கணக்கில் தொடரை கைப்பற்றியது.
2016 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஷேன் வோர்ன்-முத்தையா முரளிதரன் கோப்பையில் விளையாடினார். காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 99 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 10 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்த இரண்டாவது ஆட்டப் பகுதியில் 70 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். இதுதான் இவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. மேலும் 64 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு போட்டியில் 10 இலக்குகளும், 50 ஓட்டங்களும் எடுத்த ஒரே இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார்.[2][3] இந்தப் போட்டியில் இலங்கை அணி 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.[4]
இந்தத் தொடரில் ஹெராத்துடன் இணைந்து பந்துவீசினார். இந்தத் தொடரின் முடிவில் ஹெராத் 28 இலக்குகளையும், பெராரா 15 இலக்குகளையும் கைப்பற்றினார். இவர்கள் இருவரும் இணைந்து வலிமையான ஆத்திரேலிய அணியை வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி முதன்முறையாக முழுமையாக தொடரைக் கைப்பற்றியது.[5][6]
இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் எளிதில் வீழ்ந்த போது முதல் ஆட்டப் பகுதியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்[7].பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்கள் எடுத்தார். இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் இந்திய அணி 304 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[8]
அக்டோபர் 10, 2017 இல் துபாயில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றினார். ஐந்தாவது முறையாக இவர் 10 இலக்குகளைப் பெறுகிறார். போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற உதவினார். இந்தத் தொடரை 2-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.இதன்மூலம் பகலிரவுப் போட்டியில் 5 இலக்குகள் எடுத்த முதல் இலங்கை வீரர் சாதனை படைத்தார்.[9]
சான்றுகள்
[தொகு]- ↑ "Dilruwan makes history in third test match against Pakistan". News First. Archived from the original on 14 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Eighth straight loss for Australia in Asia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- ↑ "Rangana Herath, Dilruwan Perera's spin web anchor Sri Lanka to historic series win". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- ↑ "Perera bowls Sri Lanka to series triumph". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- ↑ "Herath bowls Sri Lanka to historic whitewash". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
- ↑ "Records / Warne-Muralitharan Trophy, 2016 / Most wicket". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
- ↑ "Abhinav, Kohli extend India's lead to 498". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 July 2017.
- ↑ "Sri Lanka need to solve the Dilruwan Perera conundrum". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 July 2017.
- ↑ "Dilruwan's five-for seals memorable series sweep". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.