டோரா தி எக்ஸ்புளோரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோரா தி எக்ஸ்புளோரர்
Dora the Explorer
வகைகுழந்தைகளுக்கான சாகசத் தொடர்
உருவாக்கம்கிரிஸ் கிஃப்ஃபோர்டு
வலேரி வல்ஷ் வால்டேஸ்
எரிக் வெய்னர்
இயக்கம்ஜார்ஜ் எஸ். சியால்டாஸ்
காரி கோன்ராடு
என்றி லெனார்டிந் மேடன்
செஹ்ரி பொல்லாக்
ஆர்னி வாங்
குரல்நடிப்புகெய்ட்லின் சாஞ்செஸ், காத்லீன் எர்லஸ், ஃபாத்திமா பிடாச்செக்(டோராவின் குரல்)
ஹாரிசன் சாடு, ரேகன் மிஸ்ராகி (பூட்ஸ் குரங்கின் குரல்)
மார்க் வெய்னர்
சாஷா டோட்டோ, அலெக்சாண்டிரியா சுவாரெஸ்
முகப்பிசைஞர்ஜோஷுவா சிற்றோன்
பில்லி ஸ்ட்ராஸ்
நாடுஅமெரிக்கா
மொழிகள்ஆங்கிலம்
சீசன்கள்8
எபிசோடுகள்172
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புகிரிஸ் கிஃபோர்டு
தயாரிப்பாளர்கள்வலேரி வல்ஸ் வல்டேஸ்
தொகுப்புகேல் மெக்கிடைர்
காரைன் ஃபின்லி போவெல்
டேவிடு விக்ஃபோர்ஸ்
ஓட்டம்22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்நிக்கலோடியன்
ஒளிபரப்பு
அலைவரிசைநிக்கெலோடியன்
படவடிவம்480i: SDTV (2000–2012)
1080i: HDTV (2012-2015)
ஒளிபரப்பான காலம்ஆகத்து 14, 2000 (2000-08-14) –
சனவரி 26, 2015 (2015-01-26)[1]
வெளியிணைப்புகள்
இணையதளம்

டோரா தி எக்ஸ்புளோரர் என்னும் ஆங்கிலத் தொடர், குழந்தைகளுக்கான சாகசத் தொடராகும். இது கிரிஸ் கிஃபோர்டு, வலேரி வல்ஷ், எரிக் வெய்னர் ஆகியோரால் கூட்டாகத் தயாரிக்கப்பட்டது. இது பல பாகங்களாக வெளொயாகியது. இது நிக்கலோடியன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடருக்கு பீபாடி விருது வழங்கப்பட்டது. பள்ளிக்கு போகவிருக்கும் குழந்தைகளுக்கு இனிமையாக கற்பித்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.[2]

கதை[தொகு]

டோரா என்னும் சிறுமி, சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுவாள். இவள் வைத்திருக்கும் பைக்கு பேசும் ஆற்றல் உண்டு. இவளுடன் புஜ்ஜி என்னும் குரங்குத் தோழனும் உண்டு. இவர்கள் இருவரும் போகும் வழியில் ஏதாவது சிக்கல் இருக்கும். வழி தெரியாத படி மறைத்திருக்கும் பாறை, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள், புதிர்கள் என வெவ்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளை நோக்கி உதவி கேட்பர். எப்படி போவது, என்ன செய்வது என்பது மாதிரியான கேள்விகள் இருக்கும். சற்று நேரத்தில், டோராவே சரியான வழியை தேர்ந்தெடுப்பாள். மீண்டும் ஒரு முறை கேட்டு உறுதி செய்திகொள்வாள். இவர்களை போக விடாமல் தடுக்கும் நரி ஒன்று இருக்கும். அது ஏதாவது நாச வேலை செய்யும். இவர்களது பொருட்களை திருடுவது, வழியை மறிப்பது, டோராவின் நண்பர்களை ஏமாற்றுவது உள்ளிட்ட வேலைகளை செய்துவிடும். டோரா தன் நண்பர்களுக்கு உதவி செய்து சேர வேண்டிய இடத்தை சென்றடைவாள்.

பதிப்புகள்[தொகு]

இந்தத் தொடர் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் டப்பிங் முறையில் வெளியானது. அரபு மொழி, கண்டோனீயம், டேனிய மொழி, டச்சு மொழி, பிரெஞ்சு மொழி, பிலிப்பினோ மொழி, ஐரிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம், எபிரேயம், இந்தி, அங்கேரிய மொழி, இந்தோனேசிய மொழி, இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, கன்னடம், கொரிய மொழி, மக்கதோனிய மொழி, மலாய் மொழி, மலையாளம், மாவோரி மொழி, நோர்வே மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, பாரசீக மொழி, உருசிய மொழி, செருபிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி, தமிழ், தாய், துருக்கிய மொழி ஆகிய மொழிகளில் வெளியானது.

தமிழ்ப் பதிப்பு[தொகு]

இந்தத் தொடரின் தமிழ்ப் பதிப்பு சுட்டித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. "வாங்க நண்பர்களே, எல்லாரும் ஒன்னாப் போலாம், முயற்சி திருவினையாக்கும், முயன்றால் சாதிக்க முடியும்" என்ற பாடலை பாடியபடியே பயணத்தை தொடர்வாள் டோரா. பயணம் முடிந்ததும், "ஜெயிச்சிட்டோம், நாம ஜெயிச்சிட்டோம்" என்றவாறு பாடியபடி, உதவியோருக்கு நன்றி தெரிவித்து பாடலை முடிப்பாள். குழந்தைகளுக்கு புரியும்படியான எளிய தமிழில் வசனங்கள் இருந்தன. இந்த தமிழ் பதிப்பு, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுட்டி டிவியில் ஒளிபரப்பு முடிவடையும். ஏனெனில், சுட்டி டிவி கிளாசிக் கார்ட்டூன் சேனலாக மாறும். டோராவுக்கு பதிலாக டாம் அண்ட் ஜெர்ரி, லூனி டியூன்ஸ்,வுடி வுட்பெக்கர், டைனி டூன் அட்வென்சர்ஸ், கேஸ்பர் போன்ற கார்ட்டூன்கள் சுட்டி டிவியில் ஒளிபரப்பாகும்.


விளையாட்டுப் பொருட்கள்[தொகு]

இந்த தொடரின் பிரபலத்தால், டோரா, புஜ்ஜி ஆகியோரின் படங்களை ஒட்டிய பொருட்கள் சந்தையில் விற்பனையாகின்றன.[3][4][5]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரா_தி_எக்ஸ்புளோரர்&oldid=3021096" இருந்து மீள்விக்கப்பட்டது