டோனி ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோனி ஹில்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அந்தோணி லாயிட் ஹில்
நடுவராக
தேர்வு நடுவராக17 (2001–நடப்பில்)
ஒநாப நடுவராக76 (1998–நடப்பில்)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: Cricinfo, சூன் 4 2010

அந்தோணி லாயிட் ஹில் (Anthony Lloyd Hill) (பிறப்பு சூன் 26, 1951, ஆக்லாந்து), பரவலாக டோனி ஹில்என்று அறியப்படுபவர், நியூசிலாந்தின் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர்களில் ஒருவர். தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் அங்கத்தினராக உள்ளார்.

இவரது முதல் பன்னாட்டு அலுவல் நியூசிலாந்திற்கும் சிம்பாப்வேக்கும் இடையே மார்ச்சு 1998ஆம் ஆண்டு நேப்பியரில் நடந்த ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் துவங்கியது. பணியாற்றிய முதல் தேர்வு திசம்பர் 2001ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கும் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கும் ஹமில்டனில் நடந்த போட்டியாகும்.

அவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர் குழுவில் பணியாற்றியபோது நடுநிலை நடுவராக நியூசிலாந்திற்கு வெளியே அலுவல்கள் கொடுக்கப்பட்டார். அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக மார்ச்சு 2006ஆம் ஆண்டு யோகன்னசுபெர்க்கில் நடந்த தென்னாபிரிக்கா அணிக்கும் ஆத்திரேலியா அணிக்கும் இடையேயான மூன்றாவது தேர்வுப் போட்டியில் நடுவராக இருந்ததும் செயின்ட்.கிட்சில் 2007ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் மூன்று பிரிவு ஏ ஆட்டங்களில் அலுவல் புரிந்ததுமாகும்.

2009ஆம் ஆண்டு ஹில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் நியமிக்கப்பட்டார்.[1]

பன்னாட்டு நடுவராக புள்ளிவிவரம்[தொகு]

3 ஆகத்து 2010 தரவுகளின்படி:

முதல் கடைசி மொத்தம்
தேர்வுகள் நியூசிலாந்து எதிர் வங்காளதேசம் - செட்டான் பூங்கா, ஹமில்டன், திசம்பர் 2001 ஆத்திரேலியா எதிர் இங்கிலாந்து - மெல்பேர்ண் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண், திசம்பர் 2010 20
ஒ.ப.துகள் நியூசிலாந்து எதிர் சிம்பாப்வே - மெக்லீன் பூங்கா, நேப்பியர், மார்ச்சு 1998 நியூசிலாந்து எதிர் ஆத்திரேலியா - மெக்லீன் பூங்கா, நேப்பியர், மார்ச்சு 1998 76
டி20கள் நியூசிலாந்து எதிர் ஆத்திரேலியா - ஈடன் பூங்கா, ஆக்லாந்து, பிப்ரவரி 2005 இங்கிலாந்து எதிர் அயர்லாந்து - பிராவிடன்சு அரங்கம்,பிராவிடன்சு, மே 2010 16

மேற்கோள்கள்[தொகு]

  1. Cricinfo. "Gould and Hill join ICC elite". http://www.cricinfo.com/ci-icc/content/story/396486.html. பார்த்த நாள்: 2010-02-06. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_ஹில்&oldid=2766011" இருந்து மீள்விக்கப்பட்டது