டிராசிமீன் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Rome2Arno1944.jpg

டிராசிமீன் கோடு (Trasimene Line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இத்தாலியப் போர்த்தொடரின் போது நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடை செய்ய உருவாக்கப்பட்ட அரண் கோடுகளுள் இதுவும் ஒன்று.

மோண்ட்டி கசீனோ மற்றும் அன்சியோ சண்டைகளில் கிடைத்த வெற்றியால், நேச நாட்டுப் படைகள் ஜூன் 4, 1944ல் ரோம் நகரைக் கைப்பற்றின. இதனால் மத்திய இத்தாலியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானிய 14வது மற்றும் 10வது ஆர்மிகள் வேகமாகப் பின்வாங்கி அடுத்த பலமான அரண் நிலையான காத்திக் கோட்டை அடைய முயன்றன. அவை காத்திக் கோட்டினை அடையும் முன் சுற்றி வளைத்து அழிக்க நேச நாட்டுப் படைத் தலைவர்கள் முயன்றனர். விரட்டி வரும் நேச நாட்டுப் படைகளைத் தாமதப்படுத்த இத்தாலிய போர்முனைக்கான முதன்மை ஜெர்மானியத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் டிராசிமீன் கோட்டினை உருவாக்கத் திட்டமிட்டார். ஜூன் 4-16, 1944 காலகட்டத்தில் பின்வாங்கும் ஜெர்மானிய படைப்பிரிவுகள் கைகோர்த்து ஒருங்கிணைந்து இந்த அரண்கோட்டினை உருவாக்கின. மேற்கே திரேனியக் கடற்கரையில் தொடங்கி டிராசிமீன் ஏரி வழியாக கிழக்கே ஏட்ரியாட்டிக் கடல் வரை இக்கோடு நீண்டது. இதனைத் தாக்கிய நேச நாட்டுப் படைகள் ஜூலை முதல் வாரம் இதனை ஊடுருவின. ஆனால் அதற்குள் பெரும்பான்மையான ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஒழுங்கான முறையில் காத்திக் அரண்கோட்டுக்குப் பின்வாங்கி விட்டன.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராசிமீன்_கோடு&oldid=3214561" இருந்து மீள்விக்கப்பட்டது