உள்ளடக்கத்துக்குச் செல்

அன்க்கோனா சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்கோனா சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்க்கோனா சண்டை
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி

1944ல் வடக்கு இத்தாலியப் போர்முனை
நாள் ஜூன் 16 – ஜூலை 18 1944
இடம் அன்க்கோனா, இத்தாலி
போலிய வெற்றி
பிரிவினர்
 போலந்து  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
விளாடிஸ்லா ஆண்டெர்ஸ்
கிளமென்ஸ் ருட்னிக்கி
பலம்
~50,000
இழப்புகள்
496 மாண்டவர்
1,789 காயமடைந்தவர்
139 காணாமல் போனவர்
800 மாண்டவர்
3,000 போர்க்கைதிகள்[1]

அன்க்கோனா நடவடிக்கை (Battle of Ancona) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு நீர்நிலத் தாக்குதல். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களிடமிருந்து அன்க்கோனா துறைமுகத்தைக் கைப்பற்றின.

செப்டம்பர் 1943ல் இத்தாலி மீது படையெடுத்த நேச நாட்டுப் படைகள் பத்து மாதகால கடும் சண்டைக்குப் பின்னர் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியைக் கைப்பற்றின. வடக்கு இத்தாலியை நொக்கி முன்னேறிக் கொண்டிருந்த அவற்றுக்குத் தேவையான தளவாடங்கள் தெற்கு இத்தாலியத் துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வந்தன. தளவாடங்கள் நகர்த்தப்படும் தூரத்தைக் குறைக்க, வடக்கு இத்தாலியில் ஒரு துறைமுகத்தைக் கைப்பற்றி அதன் மூலம் தளவாட வழங்கலை மேற்கொள்ள நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். இத்தாலியில் மேற்கு கடற்கரையில் உள்ள அன்க்கோனா துறைமுக நகரைத் தாக்கிக் கைப்பற்ற முடிவு செய்தனர். இப்பொறுப்பு போலந்திய 2வது கோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூன் 16, 1944 அன்று போலியப் படைகள் அன்க்கோனாவை நோக்கி முன்னேறத் தொடங்கின. கியென்ட்டி ஆற்றை ஜூன் 21ல் அடைந்தன. ஜூன் 30 வரை அப்பகுதியில் சண்டை நீடித்தது. அங்கிருந்த ஜெர்மானியப் படைகளை முறியடித்த பின்னர் அன்க்கோனா நகரை நோக்கி முன்னேறத் தொடங்கின. ஜூலை 17ம் தேதி அன்க்கோனா நகர் சுற்றி வளைக்கப்பட்டு அதற்கு மறுநாள் கைப்பற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Olgierd Terlecki, Beryl Arct, Poles in the Italian campaign, 1943-1945, Interpress for the Council for Protection of Monuments of Struggle and Martyrdom, 1972, p.101
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்க்கோனா_சண்டை&oldid=1361225" இலிருந்து மீள்விக்கப்பட்டது