ரோம மாற்றுக் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்

ரோம மாற்றுக் கோடு (Roman switch line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு.

செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ரோம் நகருக்கு மிக அருகே அமைந்திருந்தது சீசர் கோடு. இது இத்தாலியின் மேற்கு கடற்கரையில் ஓஸ்டியா நகரில் தொடங்கி ரோம் நகருக்கு தெற்கே ஆல்பன் குன்றுகள் வழியாக கிழக்கில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் பெஸ்காரா நகர் வரை நீண்டது. இதன் மேற்கு புறத்தில், ரோம் நகருக்கு வடக்கே ரோம மாற்றுக் கோடு என்றொரு துணை அரண்நிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இது இத்தாலியின் கிழக்கில் திரேன்னியக் கடற்கரையில் தொடங்கி ரோம் நகருக்குப் பின்னாக நீண்டு இத்தாலியின் நடுப்பகுதியில் சீசர் கோட்டுடன் இணைந்தது. ஜூன் 1944ல் இக்கோட்டினை நேச நாட்டுப் படைகள் ஊடுருவின. இங்கிருந்த ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி டிராசிமீன் கோட்டுக்குச் சென்று விட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோம_மாற்றுக்_கோடு&oldid=1361196" இருந்து மீள்விக்கப்பட்டது