பேடவுன் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேடவுன் நடவடிக்கை (Operation Baytown) என்பது [இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நடைபெற்ற ஒரு படையெடுப்பு நடவடிக்கை. நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பின் ஒரு பகுதியான இதில் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மி இத்தாலியின் கலபிரியா பகுதியில் தரையிறங்கியது. செப்டம்பர் 3, 1943ல் நடைபெற்ற இத்தரையிறக்கத்தில் நேச நாட்டுப் படைகள் சிசிலியிலிருந்து நேரடியாக தரையிறங்கு படகுகள் மூலம் இத்தாலியை அடைந்தன. பயணதூரம் மிகக்குறைவு என்பதால் கப்பல்களில் ஏறி பின் மீண்டும் தரையிறங்கு படகுகளுக்கு மாறி தரையிறங்கவில்லை. இவற்றின் தரையிறக்கத்துக்கு அச்சுப் படைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை. இத்தாலியப் படையெடுப்பின் முதன்மை தரையிறக்கம் சலேர்னோவில் தான் நிகழப்போகிறது என்பதை ஊகித்து விட்ட ஜெர்மானியத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் தனது படைகளை கலபிரியாவிலிருந்து பின்வாங்க உத்தரவிட்டார். நேரடியாக மோதாமல் பாலங்களைத் தகர்த்தும், சாலைகளை மறித்தும் பிரித்தானியப் படை முன்னேற்றத்தை ஜெர்மானியர்கள் தாமதப்படுத்தினர். ஒரு வார காலத்துக்குள் கலபிரியா பகுதி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேடவுன்_நடவடிக்கை&oldid=1360842" இலிருந்து மீள்விக்கப்பட்டது