சீசர் சி கோடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சீசர் சி கோடு (Caesar C Line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இது சீசர் கோடு என்றும் அழைக்கபப்ட்டது.
செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ரோம் நகருக்கு மிக அருகே அமைந்திருந்தது சீசர் கோடு. இது இத்தாலியின் மேற்கு கடற்கரையில் ஓஸ்டியா நகரில் தொடங்கி ரோம் நகருக்கு தெற்கே ஆல்பன் குன்றுகள் வழியாக கிழக்கில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் பெஸ்காரா நகர் வரை நீண்டது. இதன் மேற்கு புறத்தில், ரோம் நகருக்கு வடக்கே ரோம மாற்றுக் கோடு என்றொரு துணை அரண்நிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கோட்டினை ஜெர்மானிய 14வது ஆர்மி பாதுகாத்து வந்தது. மே 30, 1944ல் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளை முறியடித்த அமெரிக்க 5வது ஆர்மியின் படைப்பிரிவுகள் சீசர் கோட்டை ஊடுருவின. பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் டிராசிமீன் கோட்டுக்குப் பின்வாங்கின. ஜூன் 4, 1944 அன்று ரோம் நகரம் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டது.