ஜோதி மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதி மீனா
பிறப்புஜோதி மீனா
தமிழ்நாடு, சென்னை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1995–2002
பெற்றோர்ஜோதிலட்சுமி

ஜோதி மீனா (Jyothi Meena) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் நடித்தார். இவர் உள்ளத்தை அள்ளித்தா, அழகான நாட்கள் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவும், குத்தாட்டப் பாடல்களில் ஆடியதற்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னையில் ஜோதி மீனா பிறந்தார். இவர் நடிகை ஜோதிலட்சுமியின் மகள் ஆவார். இவரது தந்தை ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். [1] இவரது தாயார் இரத்த புற்றுநோயால் 2016 ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். [2]

தொழில்[தொகு]

இவர் முதலில் சரத்குமாரின் படமான ரகசிய போலிஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் உள்ளத்தை அள்ளித்தா, அழகான நாட்கள், கோபாலா கோபாலா போன்ற படங்களிலில் குறிப்பிடத்தக்க துணை கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் அஜித் குமார், பிரபு, சரத்குமார் ஆகியோருடன் குத்தாட்டப் பாடல்களில் ஆடினார். திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2017 அக்டோபரில், ஒரு நேர்காணலின் போது, நல்ல கதாபாத்திரம் வந்தால் தான் மீண்டும் நடிக்க வருவதாக கூறினார். [3]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் மொழி
1995 ரகசிய போலீஸ் குத்தாட்டக் கலஞர் தமிழ்
1995 திருமூர்த்தி தமிழ்
1995 மாமன் மகள் தமிழ்
1995 மிஸ்டர். மெட்ராஸ் குத்தாட்டக் கலைஞர் தமிழ்
1995 பரம்பரை மங்கம்மா தமிழ்
1996 உள்ளத்தை அள்ளித்தா மீனா தமிழ்
1996 கோபாலா கோபாலா அன்னக்கிளி தமிழ்
1996 பேமிலி ஐட்டம் நம்பர் தெலுங்கு
1996 நேதாஜி தமிழ்
1996 மாண்புமிகு மாணவன் ஜெயலட்சுமி தமிழ்
1996 புது நிலவு தமிழ்
1997 வாய்மையை வெல்லும் தமிழ்
1997 சிம்மதா மரி "தேகோர் தேகோர்" பாடலுக்கான குத்தாட்டக் கலைஞர் கன்னடம்
1997 நல்ல மனசுக்காரன் ஜோதி தமிழ்
1997 நேசம் குத்தாட்டக் கலைஞர் தமிழ்
1997 புதையல் தமிழ்
2000 பிரியம் தெலுங்கு
2001 அழகான நாட்கள் ஆஷா தமிழ்

குறிப்புகள்[தொகு]

  1. Anandaraj.K (2018-09-03). "``என் நைட்டியை உடுத்திக்கிட்டாங்க; என் மடியில் படுத்தவங்க அப்படியே உயிரிழந்துட்டாங்க!" ஜோதி மீனா | actress jyothi meena talks about her mother jyothi lakshmi's memories" (in ta). vikatan.com/. https://cinema.vikatan.com/tamil-cinema/interview/135803-actress-jyothi-meena-talks-about-her-mother-jyothi-lakshmis-memories.html. 
  2. "Actress Jyothi Lakshmi Passed Away In Chennai" (in en-US). Ulaska. 2016-08-09 இம் மூலத்தில் இருந்து 2017-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170305150629/http://www.ulaska.com/actress-jyothi-lakshmi-passed-away-in-chennai/. 
  3. "சிறந்த கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன்- மீனா" (in en-US). Leading Tamil News Website. 2017-10-14 இம் மூலத்தில் இருந்து 2018-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181103210306/https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_மீனா&oldid=3368621" இலிருந்து மீள்விக்கப்பட்டது