ஜிஸ்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமியச் சட்டத்தில், ஜிசியா வரி (jizya அல்லது jizyah அரபு மொழி: جزية‎) என்பது இசுலாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட வரியைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும்.[1][2][3] இவ்விதம் வரி செலுத்திய முஸ்லிமல்லா ஒருவர் இசுலாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற்று ஏனைய முஸ்லிம் குடிகளுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெறுவார். ஆனால், ஜிஸ்யா வழங்கிடும் ஒருவர் போர்களில் பங்கேற்க வேண்டியதில்லை. அதனால் அவர்கள் அமைதியாக வாழவும் முன்னேறவும் வழியேற்பட்டது. இந்த வரியைப் பெண்களும், ஏழைகளும், சிறார்களும் செலுத்த வேண்டியதில்லை. ஜிஸ்யா வரி செலுத்தியவர், நாட்டைப் பாதுகாக்கப் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினால், அவர் ஜிஸ்யா செலுத்த வேண்டியதில்லை. இந்த வரியைக் காப்புவரி என்றும் வழங்குவர்.[4][5]

  • இஸ்லாமிய நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களைப் பாதுகாக்க அந்த மக்கள் `கிலாஃபத்' தலைவரிடம் செலுத்தும் வரியான `ஜிஸியா' வரியைச் செலுத்தவோ அல்லது நாட்டைவிட்டு வெளியேறவோ முடிவு செய்ய வேண்டும். விதிக்கப்பட்ட கெடு நாளுக்குப் பிறகு இதில் எந்த முடிவையும் தேர்வு செய்யவில்லையெனில், அவர்கள் எங்கள் வாளுக்கு இரையாக நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் தங்கள் பிடித்து வைத்துள்ள ஈராக் நாட்டின் பகுதிகளில் வாழும் இசுலாமியர் அல்லாதவர்களிடமிருந்து மீண்டும் ஜிஸ்யா வரியை வசூலிக்கின்றனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஸ்யா&oldid=3800473" இருந்து மீள்விக்கப்பட்டது