உள்ளடக்கத்துக்குச் செல்

ஈமானின் கிளைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் முஸ்லிம் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்)[1][2][3]

1) அல்லாஹ்வை நம்புவது.

2) இறைத்தூதர்களை நம்புவது.

3) மலக்குமார்களை நம்புவது.

4) திருக்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.

5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.

6) உலக அழிவு நாளை நம்புவது.

7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.

8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.

9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.

10) அல்லாஹ்வை நேசிப்பது.

11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.

12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.

13) அல்லாஹ்வின் மீதே பொறுப்புச் சாட்டுவது.

14) முஹம்மது (ஸல்) அவர்களை நேசிப்பது.

15) முஹம்மது (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.

16) "இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்!" எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.

17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.

18) கல்வியைப் பரப்புவது.

19) திருக்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.

20) தூய்மையாக இருப்பது.

21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.

22) ஜகாத் கொடுப்பது.

23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.

24) இஃதிகாஃப் இருப்பது.

25) ஹஜ் செய்வது.

26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.

27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.

28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.

29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.

30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.

31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது தாம்பத்யத்தில் ஈடுபட்டுவிடுதல் போன்றவற்றின் பரிகாரங்கள்)

32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.

33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.

34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.

35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.

36) கொலை செய்யாதிருப்பது.

37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.

38) திருடாதிருப்பது.

39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.

40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.

41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.

42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.

43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.

44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.

45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.

46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.

47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.

48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.

49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.

50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.

51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.

52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.

53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.

54) வெட்கப்படுவது.

55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.

56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.

57) நற்குணத்துடன் நடப்பது.

58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.

59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.

60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.

61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.

62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.

63) நோயாளியை விசாரிப்பது.

64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.

65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.

66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.

67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.

68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.

69) பிறரின் குறைகளை மறைப்பது.

70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.

71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.

72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.

73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.

74) அதிகமாக தர்மம் செய்வது.

75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.

76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.

77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.

78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.

(ஆதாரம்: ஹதீஸ் கலை வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ(ரஹ்) அவர்களின் "ஷுஃபுல் ஈமான்" என்ற நூல்).

மேற்கோள்கள்

[தொகு]
  1. Farāhī, Majmū'ah Tafāsīr, 2nd ed. (Faran Foundation, 1998), 347.
  2. Frederick M. Denny, An Introduction to Islam, 3rd ed., hp. 405
  3. Islahi, Amin Ahsan. Mabadi Tadabbur-i-Hadith (translated: Fundamentals of Hadith Interpretation)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈமானின்_கிளைகள்&oldid=4133294" இலிருந்து மீள்விக்கப்பட்டது