கலிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிமா
கலிமா

கலிமா-ஷஹாதா (அரபி: الشهادة‎ aš-šahādah) என்பது சாட்சி பகர்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டதாகும். இது ஐந்து இசுலாமியக் கடமைகளுள் ஒன்று.

விளக்கம்[தொகு]

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ் [1][2][3][4]


இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்..

அல்லாஹ்வுக்கு நிகராக வேறு எந்த உயிர் உள்ளவைகளையோ அல்லது உயிர் அற்றவைகளையோ இணை வைப்பதை விட்டு விலகி இருப்பதன் மூலம் இந்த கலிமாவின் ஏகத்துவம் பின்பற்றப்படுகிறது, இந்த கலிமாவின் மூலம் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிமாக கருதப்படுகிறார். இந்த கலிமாவின் மூலம் இனம், மொழி, நிறம். நாடு, தீண்டாமை, உயர்வு, தாழ்வு, என்ற அனைத்தும் நீங்கிவிடுகிறது. முஸ்லிம்கள் அனைவரும் மார்க்க அடிப்படையில் சகோதரர்கள் என்று ஆகிவிடுகிறார்கள். தொழுகை, ஹஜ். போன்ற வணக்கவழிபாடுகளில் கண்கூடாக இந்த சகோதரத்துவத்தை காணலாம் இது இந்த கலிமாவின் மகிமையாகும்.

உலகில் வணங்கப்படும் அனைத்தையும் விட்டு விலகி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவேன் என்ற உறுதிப்பிரமாணம்தான் இந்த கலிமா என்றும் விளங்கலாம்.

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிமா&oldid=3717748" இருந்து மீள்விக்கப்பட்டது