செயவர்மன் கௌதின்யன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயவர்மன் கௌதின்யன்
Jayavarman Kaundinya
កៅណ្ឌិន្យជ័យវរ្ម័ន
பூனான் அரசர்
ஆட்சிக்காலம்484 - 514
முன்னையவர்சிறீ இந்திரவர்மன் I
(Sri Indravarman I)
பின்னையவர்உருத்திரவர்மன் (514–540)[1]
குலபிரபாவதி (529–550)[1]
துணைவர்குலபிரபாவதி
குழந்தைகளின்
பெயர்கள்
குணவர்மன்
உருத்திரவர்மன்
மரபுகவுந்தினியா
அரசமரபுவர்மன்
தந்தைஇரண்டாம் கௌதின்யன்
தாய்இராணி குலபிரபாவதி[1]
மதம்இந்து சமயம்

செயவர்மன் கௌதின்யன் (ஆங்கிலம்: Kauṇḍinya Jayavarman; கெமர்: កៅណ្ឌិន្យជ័យវរ្ម័ន) என்பவர் கெமர் பேரரசின் (Khmer Empire) முன்னோடியான பூனான் இராச்சியத்தின் (Kingdom of Funan) அரசர் ஆவார். இவர் பூனான் அரசை கி.பி. 484-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 514-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் சைவ சமயம் செல்வாக்கு பெற்று இருந்ததாக அறியப்படுகிறது. செயவர்மன் கௌதின்யன் கி.பி. 514-ஆம் ஆண்டில் காலமானார்.

வரலாறு[தொகு]

சீன வரலாற்றின் படி, சைவ சமயம் செல்வாக்கு பெற்ற ஒரு செழிப்பான இராச்சியத்தை செயவர்மன் கௌதின்யன் ஆட்சி செய்தார். அதே நேரத்தில் மற்ற மதங்களும் அவரின் இராச்சியத்தில் சமமாக அனுமதிக்கப்பட்டன. அவரின் மனைவி இராணி குலபிரபாவதி (Queen Kulaprabhavati) வைணவ சமயத்திற்கு (Vaishnavism) அடித்தளம் அமைத்தவர் என்றும் ஒரு கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.[2]

செயவர்மன் கௌதின்யனின் ஆட்சியில் பௌத்தம் நன்கு பேணப்பட்டது. கி.பி. 484-ஆம் ஆண்டில் இராணுவ உதவிக்காக சீனாவில் உள்ள தெற்கு குய் பேரரசர் ஊவு (Emperor Wu of Southern Qi) என்பவருக்கு செயவர்மன் கௌதின்யன் எழுதிய கடிதத்தில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

லாம் ஆப் இராச்சியம்m[தொகு]

அந்தக் கடிதம் மத்திய வியட்நாமில் உள்ள லாம் ஆப் இராச்சியத்திற்கு (Kingdom of Lam Ap of Central Vietnam) எதிராக எழுதப்பட்டது. லாம் ஆப் இராச்சியம், பூனான் நாட்டின் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்த குற்றங்கள்; அந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன. நாகசேனா (Nagasena) (சீனம்: 那伽仙) என்ற புத்த துறவியால் அந்தக் கடிதம் பேரரசர் ஊவுவிடம் வழங்கப்பட்டது.[3]

கி.பி. 503-இல் மந்திரசேனா (Mandrasena) எனும் புத்த துறவியையும்; கி.பி. 508-இல் சங்கபாலர் (Sanghapala) எனும் புத்த துறவியையும்; செயவர்மன் கௌதின்யன் சீனாவிற்கு அனுப்பி உள்ளார். மேலும் கி.பி. 511-ஆம் ஆண்டிலும் மற்றும் அவர் இறந்த கி.பி. 514-ஆம் ஆண்டிலும் மேலும் இரண்டு தூதுவர்களைச் சீனாவிற்கு அனுப்பி உள்ளார்.

கல்வெட்டு கே. 40[தொகு]

கல்வெட்டு கே. 40 (Inscription K. 40); அரியணையில் அமர வேண்டிய தன் சகோதரரான இளவரசர் குணவர்மனை (Prince Gunavarman) உருத்திரவர்மன் கொன்றார் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தன் மாற்றாந்தாய் இராணி குலபிரபாவதியுடன் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்றும்; இராணி குலபிரபாவதி, உருத்திரவர்மனின் எதிர்ப்பாளர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தார் என்றும்; குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Kenneth T. So. "Preah Khan Reach and The Genealogy of Khmer Kings" (PDF). Cambosastra. 2021-07-08 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. March 2, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. DAGENS 2003 lK P24-25. The Khmer Country. The story. பக். 24–25. 
  3. Paul Pelliot. "Bulletin of the French School of the Far East" (in fr). PELLIOT BEFEO 1903 lFN P294 (3 ). பக். 294. 
  4. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008

நூல்கள்[தொகு]

  • COEDES 1948 lEHdIedI P57-60

George Cœdès (24 February 1992) (in fr). The Hindu States of Indochina and Indonesia. History of World. Editions De Boccard. பக். 57–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782701800462. 

  • PELLIOT BEFEO 1903 lFN P270-271

Paul Pelliot (1903). "The Fou-nan" (in fr). Bulletin of the French School of the Far East 3 (1): 270–271. பன்னாட்டுத் தர தொடர் எண்:1760-737X. 

  • DAGENS 2003 lK P25

(Khmer | chapter number = I | title chapter = The Khmer Country. The story | passage = 25)

முன்னர்
செரி இந்திரவர்மன் I
சென்லா மன்னர்
484-514
பின்னர்
உருத்திரவர்மன் & குலபிரபாவதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயவர்மன்_கௌதின்யன்&oldid=3683299" இருந்து மீள்விக்கப்பட்டது