உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் சூரியவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் சூரியவர்மன்
கம்போடிய அரசர்கள்
அங்கூர் வாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள இரண்டாம் சூரியவர்மனின் படம்
ஆட்சிக்காலம்1113-1145/1150
முன்னையவர்முதலாம் தரணிந்திரவர்மன்
பின்னையவர்இரண்டாம் தரணிந்திரவர்மன்
பிறப்பு11வது நூற்றாண்டு
அங்கூர்
இறப்பு1145/1150
அங்கூர்
பெயர்கள்
சூரியவர்மன்
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பரமவிஷ்ணுலோகன்
தந்தைசித்திந்திராதித்யன்
தாய்நரேந்திரலட்சுமி
மதம்இந்து சமயம்

இரண்டாம் சூரியவர்மன் (Suryavarman II ([Khmer]) (இறப்புக்குப் பின்னர்: பரமவிஷ்ணுலோகன்) கெமர் பேரரசை கிபி 1113 முதல் கிபி 1145-1150 வரை ஆண்ட பேரரசர். இவர் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற சிவண் கோயிலைக் கட்டியவர். இது உலகின் மிகப் பெரும் கோயிலாகக் கருதப்படுகிறது. இவருடைய கட்டிடக் கலை, படையெடுப்புகள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றிற்காக இவரைக் கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதரபுரம் ஆகும். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா, கிழக்குக் கடற்பிரதேசம், மேற்கு பகோன் , பர்மா, தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோகன் என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.

உசாத்துணைகள்[தொகு]

  • Briggs, Lawrence Palmer. The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society, Volume 41, Part 1. 1951
  • Higham, Charles. The Civilization of Angkor. University of California Press. 2001
  • Vickery, Michael, The Reign of Suryavarman II. and Royal Factionalism at Angkor. Journal of Southeast Asian Studies, 16 (1985) 2: 226-244.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சூரியவர்மன்&oldid=3852238" இலிருந்து மீள்விக்கப்பட்டது