மகேந்திரவர்மன் (சென்லா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திரவர்மன் (சென்லா)
முடியாட்சி
ஆட்சி590-611
முன்னிருந்தவர்பீமவர்மன்,
பின்வந்தவர்ஈசானவர்மன்,
முழுப்பெயர்
மகேந்திரவர்மன்
தந்தைவீரவர்மன்
இறப்பு611 (2024-04-11UTC00:41:25)
அங்கோர் வாட், சென்லா

மகேந்திரவர்மன் (Mahendravarman (Chenla)) சென்லா இராச்சியத்தின் ஒரு மன்னனாவான். தற்போதைய கம்போடியா தேசத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர். சென்லா இராச்சியம் கெமர் பேரரசின் நேரடி முன்னோடியாக இருந்தது. சித்திரசேனன் பீமவர்மனின் நெருங்கிய உறவினாவான். இவன் புன்னன் பேரரசை தன் இராச்சியத்துடன் இணைத்து மகேந்திரவர்மன் என்ற பெயரை பெற்றான்.[1][2] பீமவர்மன் இறப்புக்கு பின் தன் தலைநகரான சம்பார் பெரி கூகிலிருந்து ஆட்சி செய்து வந்தான். அதே காலகட்டத்தில் கம்போடியாவின் மற்ற பகுதியை இராண்யவர்மன் என்பவன் ஆட்சி செய்த வந்தான். மகேந்திரவர்மன் தன் இராச்சியத்தின் அருகில் உள்ள சம்பா இராச்சியத்திற்கு இரு நாடின் நட்பை வலுப்படுத்த தூதுவனை அனுப்பிவைத்தான். மகேந்திரவர்மன் இறப்புக்கு பின் இவனது மகன் முதலாம் ஈசானவர்மன் பல ஆண்டுகள் இராச்சியத்தை 628 வரை ஆட்சி செய்து வந்தார். சென்லா இராச்சியம் தற்போதய கம்போடியா, லாவோஸ், தென் தாய்லாந்து வரை பரவியிருந்தது. சென்லா இராச்சியத்நின் தலைநகரமாக இந்திரபுரி விழங்கியது. சென்லா இராச்சியம் இடைகாலத்தில் கடலரசு நிலஅரசு என இரண்டாக பிரிந்ததாக சீன வரலாற்று குறிப்புகள் முலம் தெரிகின்றது

வரலாறு[தொகு]

சென்லா இராச்சியம் புன்னன் இராச்சியத்தை வீழ்த்தி வந்ததாகும். இந்த இராச்சியம் கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது. சென்லா அரசு கம்போசத்தின் கடைசி புன்னன் அரசன் செயவர்மனின் மருமகனான உருத்திரவர்மனால் நிறுவப்பட்டது. உருத்திரவர்மனே தலைநகராக இந்திரபுரியை உருவாக்கினான். இவன் தனது தம்பி குணவர்மனை அதிகார போட்டி காரணமாக கொன்றான். உருத்திரவர்மனின் மகன்கள் சாம்ப நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர். இதனால் உருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்த தன் மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினான். இந்த பீமவர்மன் பாவவர்மன் என்றும் அறியப்பட்டான். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மனின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு சாம்ப அரசை வீழ்த்தினான். சாம்ப அரசு வியட்நாமின் அனாம் (மத்திய வியட்நாம்) மற்றும் கோகொச்சின் (தென் வியட்நாம்) பகுதியில் அரசாண்ட தமிழர் வழி வந்த அரச வம்சம் ஆகும். முதலில் நட்பாக இருந்த சித்திரசேனன் பின் நாளில் தனது அரசு உரிமையை வாள் கொண்டு பீமவர்மன் இடம் இருந்து பெற்றான். சித்திரசேனனுக்கு பாதி நாடே வழங்கப்பட்டது. சித்திரசேனன் மகேந்திரவர்மன் என்ற பெயர் கொண்டு அரசேறினான். இதன் பின் சென்லா அரசு கடலரசு நில அரசு என இரண்டானது. பீமவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் மகேந்திரவர்மன் வழி வந்தவர்கள் கடலரசையும் ஆண்டனர் என சீன வரலாற்று புத்தகங்கள் தெரியப்படுத்துகின்றன.

ஈசானவர்மனின் மகன்கள்[தொகு]

 1. சிவதத்தா
 2. ஈஸ்வரகுமாரா
 3. இளவரசன் பட்டத்து இளவரசன் - வரலாற்று குறிப்புகள் எதுவும் இல்லை

அரசர்கள்[தொகு]

ருத்திரவர்மன் (கிபி 525-575)

நில அரசு[தொகு]

 • பீமவர்மன் (கிபி 575-605)
 • புத்தவர்மன் (கிபி 605-638)
 • ஆதித்யவர்மன் (கிபி 638-650)
 • இராண்யவர்மன் (கிபி 650-678)
 • கோவிந்தவர்மன் (கிபி 678-705)
 • இரண்டாம் செயவர்மன் (கிபி 705-764)
 • கடவேச அரிவர்மனின் (கிபி 764-780) (இவர் தன் நான்காம் மகன் பரமேசுவரவர்மனை தமிழகத்தில் ஆண்டு வந்த பல்லவருக்கு வரிசு இல்லாத காரணத்திற்காக அனுப்பிவைத்தார்)

கடலரசு[தொகு]

 • குணவர்மன் (அரசர் அல்ல)
 • வீரவர்மன் (அரசர் அல்ல)
 • மகேந்திரவர்மன் ( கிபி 600-640)
 • முதலாம் ஈசானவர்மன் ( கிபி 640-657)
 • இரண்டாம் மகேந்திரன் ( கிபி 657-670)
 • இரண்டாம் ஈசானவர்மன் ( கிபி 670-708)
 • இரண்டாம் பீமவர்மன் ( கிபி 708-748)
 • சந்திரவர்மன் ( கிபி 748-785)
 • முதலாம் செயவர்மன் ( கிபி 785-802)

சென்லா இராச்சியத்தின் வீழ்ச்சி[தொகு]

கடவேச அரிவர்மனின் மகன்கள் சிறீவிஜயம் அரசு உடணான போரில் இறக்க கடலரசு அரசர் சந்திரவர்னின் மகன் முதலாம் செயவர்மன் நாட்டை ஒன்றாக இணைத்து ஆண்டார். சிறீவிஜயம் என்பது சுமாத்திரா தீவை மையமாகக் கொண்ட பழைய மலாயப் பேரரசாகும். தென்கிழக்காசியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் இது பரவியிருந்தது. முதலாம் செயவர்மனின் மருமகன் பரமேசுவர்மனே இரண்டாம் செயவர்மன் என்ற பெயர் கொண்டு கெமர் அரசை நிறுவி சென்லா அரசை வீழ்த்தினர்.

முன்னர்
பீமவர்மன்
சென்லா இராச்சியம்
590-611
பின்னர்
முதலாம் ஈசானவர்மன்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 • Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
 1. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., ISBN 9786167339443
 2. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரவர்மன்_(சென்லா)&oldid=3372961" இலிருந்து மீள்விக்கப்பட்டது