ஈசானபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசானபுரம்
Isanapura

ឦសានបុរៈ
ஈசானபுரம் is located in கம்போடியா
ஈசானபுரம்
ஈசானபுரம்
ஈசானபுரம், பூனான் இராச்சியம்
(கி.பி. 618)
இருப்பிடம்கம்போங் தோம் மாநிலம், கம்போடியா
பகுதிதென்கிழக்காசியா
வரலாறு
கட்டுநர்முதலாம் ஈசானவர்மன்
கட்டப்பட்டதுகி.பி. 618
பயனற்றுப்போனது9-ஆம் நூற்றாண்டு
காலம்மத்திய காலம்
பகுதிக் குறிப்புகள்
நிலைமீட்டெடுக்கப்பட்டது
பொது அனுமதிஉள்ளது

ஈசானபுரம் (ஆங்கிலம்: Isanapura; கெமர்: ឦសានបុរៈ; தாய்: อีศานปุระ) அல்லது சம்புபுரம் (ஆங்கிலம்: Sambhupura Sambor of Stung Sen; கெமர்: សម្ភុបុរៈ; தாய்: สัมภูปุระ) என்பது பண்டைய சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) தலைநகரம் ஆகும். இது தற்போது கம்போடியா கம்போங் தோம் மாநிலத்தில் (Kampong Thom Province) உள்ளது.[1]

இந்த நகரம் 618-ஆம் ஆண்டில் லீக் சம்போர் குக் (Leek Sambor Kuk) எனும் இடத்தில் முதலாம் ஈசானவர்மன் (Isanavarman I) எனும் சென்லா மன்னரால் நிறுவப்பட்டது.[2]

பொது[தொகு]

இன்றைய நிலையில், பழைய ஈசனாபுர தளத்தில் 150 கோயில்கள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகள் உள்ளன. இந்தக் கோயில்கள் கெமர் பேரரசின் (Khmer Empire) அங்கோர் வாட் (Angkor Wat) புரதான தளத்தைவிட சில நூற்றாண்டுகள் பழமையானவை. வியட்நாம் போரின் போது, இந்த கோயில்கள் அமெரிக்காவின் குண்டுவீச்சுகளால் (US Bombers) முற்றிலும் அழிக்கப்பட்டன.

அத்துடன் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பவர்கள்; பழைய நினைவுச் சின்னங்களைச் சேகரிப்பவர்கள்; பொல் பொட் (Pol Pot) தலைமையிலான கெமர் ரூச் (Khmer Rouge) படையினர் போன்றவர்கள் அந்தக் கோயில்களை மேலும் சேதப்படுத்தி விட்டனர். தற்போது பல கோயில்கள் காடுகளால் சூழப்பட்டு உள்ளன.

தொல்லியல்[தொகு]

சென்லா இராச்சியத்தின் தலைநகரமான ஈசானபுரத்தில் கட்டப்பட்ட சம்போர் பிரே குக் கோயில்; தற்போது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள எல்லாக் கோயில்களும் சிவன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டவை. அவை நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன:

  • வடக்கு குழு - (Northern Group)
  • சிறிய குழு Z - (Small Group Z)
  • மத்தியக் குழு - (Central Group)
  • தெற்கு குழு - (Southern Group)

எண்கோண கோபுரங்கள்[தொகு]

இந்தக் குழுக்களில், தெற்கு குழு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எட்டு எண்கோண கோபுரங்களும் (Octagonal Towers); பல வாயில்களும் இன்னும் நிற்கின்றன. இந்த கோபுரங்களின் வெளிப்புறச் சுவர்களில், போர்க் காலத்தில் இயந்திர துப்பாக்கிகளால் ஏற்பட்ட துளைகள் உள்ளன; மேலும் சில கோபுரங்கள் மோசமாகச் சேதம் அடைந்துள்ளன.

தெற்கு குழுவின் முக்கியக் கோயிலாக பிரசாத் நெக் போன் (Prasat Neak Poan) கோயில் பிரசித்தி பெறுகிறது. அண்மைய காலமாக இந்தக் கோயிலில் பல புனரமைப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்போது அவற்றுக்கு காரை வார்ப்புகள் பூசப்பட்டு உள்ளன.

பிரசாத் தாவோ சிங்க கோபுரம்[தொகு]

மத்தியக் குழுவில் இன்னும் உயர்ந்து நிற்பது, பிரசாத் தாவோ (Prasat Tao) எனும் இராச சிங்க கோபுரம் (King Lion Temple) ஆகும். செங்கல் கோபுரத்தின் பிரதான நுழைவாயிலில் இரண்டு கல் சிங்கங்கள் (Stone Lions) உள்ளன. முதலில் நான்கு கல் சிங்கங்கள் இருந்தன; அவற்றில் இரண்டு திருடப்பட்டு விட்டன.

பிரசாத் சம்போ கோயில்[தொகு]

வடக்குப் பகுதியில் ஒன்பது கோயில்கள் மற்றும் ஒரு பெரிய கோபுரம் உள்ளன. இந்தக் கோயில் குழு, சம்போர் பிரே குக் (Sambor Prei Kuk) என்றும்; பிரசாத் சம்போ (Prasat Sambo) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் குழு குண்டுவெடிப்புகளால் பெரிதும் சேதம் அடைந்துள்ளது.

செதுக்கப்பட்ட மணற்கல் தூண்கள் மற்றும் கதவுச் சட்டங்கள், அந்தக் காலத்துச் சென்லா பேரரசின் கலை மயத்திற்குச் சாட்சிகளாய் அமைகின்றன.

காட்சியகம்[தொகு]

கம்போடியா வடக்கு கம்போங் தோம் மாநிலத்தில்
பழைமையான சம்போர் பிரே குக் கோயில் வளாகம்.

சான்றுகள்[தொகு]

  1. Chatterjee, Bijan Raj (1964). Indian cultural influence in Cambodia. University of Calcutta. p. 25. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
  2. Walker, George B. (1955). Angkor Empire. Signet Press. p. 116. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசானபுரம்&oldid=3682108" இலிருந்து மீள்விக்கப்பட்டது