உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் செயவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் செயவர்மன்
கெமர் அரசன்
ஆட்சிக்காலம்850 – 877
முன்னையவர்இரண்டாம் செயவர்மன்
பின்னையவர்முதலாம் இந்திர வர்மன்
இறப்பு877
மரபுவர்மன் வம்சம்
தந்தைஇரண்டாம் செயவர்மன்
மதம்இந்து சமயம்

மூன்றாம் செயவர்மன் (Jayavarman III ) கம்போடியாவை ஆண்ட இரண்டாம் செயவர்மனின் மகனும் வாரிசுமாவான்.[1] :103வருங்கால கெமர் அரசரான முதலாம் யசோவர்மன் மூன்றாம் செயவர்மனின் தாத்தாவான உருத்ரவர்மனின் சகோதரருடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. [2] [3] இவனது ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த சில கோயில்கள் உள்ளன. ஆனால் அவை இவனுக்குச் சொந்தமானவை என்று யாரும் கூறவில்லை. இவன் ஒரு சிறிய கட்டுமானத் திட்டத்தைத் தொடங்கியிருக்கலாம். அது இவனது மகனும் வாரிசுமான முதலாம் இந்திரவர்மனால் மறைக்கப்பட்டது. செயவர்மன் 877இல் ஒரு காட்டு யானையை துரத்திச் செல்லும்போது இறந்தான். [4]

சான்றுகள்

[தொகு]
  1. Coedès, George. The Indianized States of Southeast Asia.
  2. Briggs, L. (1951). The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society, 41(1), 61
  3. Higham, The Civilization of Angkor p. 59
  4. Briggs, The Ancient Khmer Empire p. 97

குறிப்புகள்

[தொகு]

Briggs, Lawrence Palmer. The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society, 1951.

  • Higham, Charles. The Civilization of Angkor. University of California Press, 2001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_செயவர்மன்&oldid=3372966" இலிருந்து மீள்விக்கப்பட்டது