உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் ஈசானவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் ஈசானவர்மன்
பின்னையவர்நான்காம் செயவர்மன்
இறப்புகி.பி. 928
தந்தைமுதலாம் யசோவர்மன்
தாய்நான்காம் செயவர்மனின் சகோதரி

இரண்டாம் ஈசனவர்மன் ( Ishanavarman II) கி.பி. 923 முதல் 928 வரை ஆட்சி செய்ததாக நம்பப்படும் அங்கோரிய மன்னனாவான். இவனது அரசு அங்கோர், மேற்கில் பட்டாம்பாங்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் மட்டுமே இருந்திருக்கலாம்.[1]

குடும்பம்[தொகு]

ஈசானவர்மன் யசோவர்மனுக்கும் அவனது மனைவியும் நான்காம் செயவர்மனின் சகோதரிக்குப் பிறந்தான்.[2] முதலாம் இந்திரவர்மனும், அவனது மனைவி இந்திராதேவியும் இவனது தாத்தாவும் பாட்டியுமாவார்கள்.[3][4][5] இவனுக்கு முதலாம் ஹர்ஷ்வர்மன் என்ற மூத்த சகோதரன் இருந்தான் .

வரலாறு[தொகு]

கி.பி. 923இல் இறந்த தனது சகோதரருக்குப் பிறகு ஈசானவர்மன் பதவியேற்றான். இவனது ஆட்சிக் காலம் மிகவும் கொந்தளிப்பாகவும் குழப்பமாகவும் இருந்திருக்கலாம். கி.பி. 921 இல், இவனரது மாமா, நான்காம் செயவர்மன் , ஏற்கனவே அங்கோரிலிருந்து வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் ஒரு போட்டி நகரத்தை அமைத்திருந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் பிரசாத் கிரவான் என்ற ஒரு கோயில் கட்டப்பட்டது.

இவனைப் பற்றிய வேறு தகவல்கள் தெரியவில்லை. இவன், கி.பி. 928 இல் இறந்தான். மேலும், பரமருத்ரலோகம் என்ற பெயரைப் பெற்றான்.[6] :114

சான்றுகள்[தொகு]

  1. The Khmers, Ian Mabbet and David P. Chandler, Silkworm Books, 1995, page 262.
  2. Higham, 2001: page 70
  3. Bhattacharya, Kamaleswar (2009). A Selection of Sanskrit Inscriptions from Cambodia. In collaboration with Karl-Heinz Golzio. Center for Khmer Studies.
  4. Some Aspects of Asian History and Culture by Upendra Thakur. Page 37.
  5. Saveros, Pou (2002). Nouvelles inscriptions du Cambodge (in French). Vol. Tome II et III. Paris: EFEO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-85539-617-4.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஈசானவர்மன்&oldid=3683015" இலிருந்து மீள்விக்கப்பட்டது