இரண்டாம் ராஜேந்திரவர்மன்
இரண்டாம் ராஜேந்திரவர்மன் Rajendravarman II | |
---|---|
பேரரசன் | |
கெமர் பேரரசு: 944–968 | |
முன்னிருந்தவர் | இரண்டாம் ஹர்ஷவர்மன் |
ஐந்தாம் ஜெயவர்மன் |
இரண்டாம் ராஜேந்திரவர்மன் (Rajendravarman II) கெமர் பேரரசை (கம்போடியாவின் அங்கோர் பகுதியை) கிபி 944 முதல் 968 வரை அரசாண்ட மன்னன்.[1][2][3]
இவன் முன்னாள் கெமர் பேரரசன் முதலாம் யசோவர்மனின் மருமகன். இவனது முக்கிய நினைவுச்சின்னங்கள் கம்போடியாவின் அங்கோர் பகுதியில் சியெம் ரீப் மாகாணத்தில் அமைந்துள்ள பிரீ ருப், கிழக்கு மெபோன் ஆகியனவாகும்.
இரண்டாம் ராஜேந்திரவர்மன் பவபுரம் என்பதைத் தலைநகராகக் கொண்ட சென்லா இராச்சியத்தின் அரச வம்சத்தைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது. இவனது ஆட்சியின் கீழ் கெமர் பேரரசு தெற்கு வியட்நாம், லாவோஸ், தாய்லாந்தின் பெரும் பகுதி, மற்றும் தெற்கு சீனாவின் தூர வடக்குப் பகுதி வரை பரவியிருந்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இவனது அமைச்சர் கவீந்திரரைமதனன் என்பவர் வடிவமைத்த பெரும் அரண்மனையில் இரண்டாம் ராஜேந்திரவர்மன் ஆட்சி புரிந்தான். பாண்டேசிறீ என்ற அழகுபடுத்தப்பட்ட கோயிலின் கட்டுமானப் பணிகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இவனுக்குப் பின்னர் இவனது 10 வயது மகன் ஐந்தாம் ஜெயவர்மன் என்ற பெயரில் கெமர் அரசானான்.
உசாத்துணை
[தொகு]- Higham, Charles. The Civilization of Angkor. University of California Press 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-23442-1
- Mabbett, Ian and Chandler, David. The Khmers. Blackwell Publishers 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-17582-2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
- ↑ Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.