உள்ளடக்கத்துக்குச் செல்

நிருபத்தேந்திரதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிருபத்தேந்திரதேவி
Nrpendradevi of Sambhupura
ន្ឫបតីន្ទ្រទេវីទី២
சம்புபுரர மகாராணியார்
(8-ஆம் நூற்றாண்டு)
முன்னையவர்இராணி இந்திராணி
(Queen Indrani)
பின்னையவர்செயந்திரபா
(Queen Jayendrabha)
பிறப்புஈசானபுரம்
இறப்புC. 750
ஈசானபுரம்
துணைவர்இராசேந்திர வர்மன்
(Rajendravarman of Chenla)
மரபுஈசானபுரம்
கவுந்தினியம்
சென்லா
அரசமரபுசம்புபுரம்
(Som Vong)
தந்தைபுஷ்பகரசன்
(Pushkaraksha)
@ (Indraloka)
தாய்இராணி இந்திராணி
(Queen Indrani)
மதம்இந்து சமயம்

நிருபத்தேந்திரதேவி அல்லது நிர்பேந்திரதேவி (ஆங்கிலம்: Nrpendradevi அல்லது Nrpendradevi of Shambhupura; கெமர்: ន្ឫបតីន្ទ្រទេវីទី២; IAST: Nṛpatendradevī) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) ஒரு பகுதியான சம்புபுரத்தின் மகாராணி ஆவார். சென்லா இராச்சியம் தற்போது கம்போடியாவில் ஒரு பகுதியாக உள்ளது.[1]

ஈசானபுரம் எனும் நிலப்பகுதி சம்புபுரம் (Sambhupura) என்றும் அழைக்கப்பட்டது. சம்புபுரம் எனும் பெயர்தான் ஈசானபுரம் என மாற்றம் அடைந்தது. சம்புபுரம் எனும் சொல்லுக்குப் பதிலாக ஈசானபுரம் எனும் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

நிருபத்தேந்திரதேவியின் தந்தையார் பெயர் புஷ்கரசன் (King Pushkaraksha); இந்திரலோகன் (Indraloka) எனும் மற்றொரு பெயரும் அவருக்கு உள்ளது. தாயாரின் பெயர் இராணி இந்திராணி (Queen Indrani of Sambhupura).

பொது

[தொகு]

இராணி இந்திராணிக்கு சம்புவர்மன் (Sambhuvarman) எனும் (உருத்திரவர்மன்) என்ற ஒரு மகனும், நிருபத்தேந்திரதேவி (Nipatendradevi) என்ற ஒரு மகளும் இருந்தனர். இந்திராணியின் மகன் உருத்திரவர்மன்; சென்லாவின் இளவரசியும், தன் தந்தையின் சகோதரியான முதலாம் நரேந்திரதேவியின் (Narendradevi I) மகளுமான இரண்டாம் நரேந்திரதேவியை (Narendradevi (II) மணந்தான்.[2]

நிருபத்தேந்திரதேவியின் தந்தை அநேகமாக இராணி செயதேவியின் (Queen Jayadevi) மகனாக இருக்கலாம்; மற்றும் திருமணத்திற்குப் பிறகு நிருபத்தேந்திரதேவியின் தாயார் இராணி இந்திராணியுடன் இணை ஆட்சியாளராக இருந்து இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

சென்லா இளவரசி நரேந்திரதேவி

[தொகு]

இராணி நிருபத்தேந்திரதேவி தன் சகோதரன் இளவரசர் சம்புவர்மனுக்கு (உருத்திரவர்மன்) பதிலாகத் தன் தாயாரிடம் இருந்து அரியணையைப் பெற்றார்; உருத்திரவர்மன் தன் உறவினரான சென்லாவின் இளவரசி நரேந்திரதேவியை (Princess Narendradevi of Chenla) மணந்தார். உருத்திரவர்மன்; பூனான் இராச்சியத்தின் (Kingdom of Funan) கடைசி அரசரும் ஆவார்.

இராணி நிர்பேந்திரதேவி தன் உறவினரான சென்லாவின் இளவரசர் இராசேந்திர வர்மன் (Rajendravarman of Chenla) என்பவரை மணந்தார்; இவருக்குப் பின்னர், இவரின் மகள் இளவரசி செயந்திரபா (Queen Jayendrabha) ஈசானபுரத்தின் அரியணைக்கு வாரிசானார்.

சான்றுகள்

[தொகு]
  1. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008 (1)
  2. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008 (2)

மேலும் படிக்க

[தொகு]
  • Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
  • Higham, Charles. The Civilization of Angkor (англ.). — University of California Press, 2004. — P. 192.
  • Jacobsen, Trudy. Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History (англ.). — NIAS Press, 2008. — P. 358. — (Gendering Asia). — ISBN 978-87-7694-001-0.

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் ஈசானபுரம் மகாராணியார்
8-ஆம் நூற்றாண்டு
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபத்தேந்திரதேவி&oldid=3683234" இலிருந்து மீள்விக்கப்பட்டது